மணிரத்னம் ஹீரோயின் நான்!

Image result for மணிரத்னம் ஹீரோயின் நான்!

பெங்களூருவிலிருந்து இன்னொரு க்யூட்டான பொண்ணு, ஸ்வீட் கண்ணு. மணிரத்னம் தமிழுக்கு கொண்டுவரும் நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத், ‘இவன் தந்திரன்’ படப்பிடிப்பில் பார்த்தோம்.

சினிமா எண்ட்ரி?

ஸ்கூல் டேஸ்லயே ஸ்டேஜ் ஏறினவ நான். வக்கில் ஆகணும்னு
ஆசை. கல்லூரி நாடகத்தில் என் நடிப்பைப் பார்த்து சினிமா
வாய்ப்பு வந்தது. ஷூட்டிங் தொடங்கிய சில நாளிலேயே
அந்தப் படம் ட்ராப். மறுபடியும் வக்கீல் படிப்பை கண்டினியூ
பண்ணப் போயிட்டேன்.

முதல் படம் கன்னடமா?

மலையாளத்தில் கோகினூர் என்ற படத்தில் இரண்டாம் நாயகியாக
நடித்தேன். அதைப் பார்த்து, லூசியா பட டைரக்டரின் இரண்டாம்
படமான யு டர்ன் – கன்னடத்தில் கதை நாயகியானேன்.
அந்த ஒரே படம் என்னை தமிழ், தெலுங்கு என நாலு திசையில்
திரும்பிப் பார்க்க வைத்தது.

மணிரத்னம் பட வாய்ப்பு வந்தது இப்படித்தானா?

ஆமாம். அது விவரிக்க முடியாத ஒரு குட் ஃபீலிங். மணி சார் படத்துல
என்ன மாதிரி கேரக்டராக இருந்தாலும் பரவாயில்லை. சும்மா வந்து
போற மாதிரி இருந்தாலும் ஓகே என்றிருந்தேன். அவரது ஒரு படத்தில்
நடித்தாலே இந்தியாவுக்கே தெரிந்துவிடுவோம்.
ஆனால் என் அதிஷ்டம் காற்று வெளியிடை படத்தில் ராணுவ
அதிகாரியின் மகளாக, இரண்டாம் நாயகியாக நடிக்கிறேன்.

கார்த்தி ஜோடியா?

அது சஸ்பென்ஸ்! அவர் நடித்த படங்கள் எதுவும் இதுவரை
பார்த்ததில்லை. என்னை நடிகர் சங்கத்தில் உறுப்பினராக சேரச்
சொன்னார். தமிழ் ஃபீல்டு பத்தி நிறைய அவரிடம் தெரிந்து கொண்டேன்.

தமிழ் பேசத் தெரியுமா?

இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா கத்துகிட்டு வர்றேன்.
தமிழ் வசனங்களை ஆங்கிலத்தில் எழுதி மனப்பாடம் செய்து பேசி
நடிக்கிறேன். என்னோட நாலு படங்கள் வெளியாவதற்குள் தமிழில்
மேடையில் பேசும் அளவுக்கு வந்துவிடுவேன்.

——————————————————-

– சபீதா ஜோசப்

குமுதம்

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: