நட்பு மொழி

* திருமண வரவேற்பில்
பரிசுப் பொருள் தருகிற
காதலித்தவனை
யாரோவாய்ப்
பார்க்கிற
பெண்கள் வெட்கப்பட
அறிமுகப்
படுத்திக் கொண்டிருக்கிறேன்
என் திருமணத்தை
ஏற்பாடு செய்த நண்பன்
இவன்தான்
என்று

* மனைவியின் நண்பனை
நண்பனாக
ஏற்றுக் கொண்டவனுக்கு
எந்த
மருத்துவப் பரிசோதனையும்
எப்போதும்
தேவைப்படாது

* காமத்தால்
பிறக்கலாம்
நட்பால்
பறக்கலாம்

* மனைவிக்குத் தெரியாத
காமம்
தவறு
கணவனுக்குத் தெரிந்த
நட்பு
சரி

* அம்மாவோடான
அப்பாவின்
சண்டையைத்
தீர்த்து வைக்கக்
குழந்தைகள் போதும்
அப்பாவோடான
அம்மாவின்
சண்டையைத்
தீர்த்து வைக்க
நண்பன் வேண்டும்

————————–

-அறிவுமதி
ஓவியம்: ப்ரத்யூஷ்
குங்குமம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: