வர்தா புயலில் பறவைகள் தப்பியது எப்படி?

vardha11

“வர்தா’ புயலை மனிதர்களைப் போல பறவைகளும், எதிர்கொண்டு தப்பித்துள்ளன.
வானிலையை முன்கூட்டியே அறியும் அதிநவீன சாதனங்கள் மூலம் புயலை அறிந்து மனிதர்கள் தப்பியுள்ளனர். ஆனால், எந்தச் சாதனங்களும் இல்லாமல் பறவைகள் புயலை எதிர்கொண்டதும் ஆச்சரியம்தான்.


“சிவப்பு ரோஜா’ என்ற வர்தா புயல், சென்னையைத் திங்கள்கிழமை உலுக்கி எடுத்துவிட்டது. 120 கி.மீ. வேகத்தில் வீசிய புயலால் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்தன. போக்குவரத்து முடங்கும் அளவுக்கு சாலைகள் எங்கும் மரங்களாகவே முறிந்து கிடந்தன.


இதில், சென்னை பூம்புகார் நகர் பகுதியில் முறிந்து கிடந்த மரத்தின் கிளையில் ஒரு பறவையின் கூடு ஒன்று இருந்தது. ஆனால், முட்டைகள் எதுவும் இல்லை. புயல் வருவதை முன்கூட்டியே தெரிந்து பறவைகள் அந்தக் கூண்டுகளில் இருந்து பறந்து சென்றிருக்க வேண்டும்.


புயல் வீசியபோதும் வானில் பறவைகள் எதுவும் தென்படவில்லை. மனிதர்களைப் போல அவையும் பாதுகாப்பான இடங்களைத் தேடிச் சென்றுவிட்டன. பறவைகள் தப்பிப்பது தொடர்பாக சூழலியல் மற்றும் காட்டுயிர் ஆர்வலர் தியோடர் பாஸ்கரன் கூறியது:


புயல் போன்ற இயற்கைப் பேரிடர்கள் குறித்து பறவைகளுக்கும், மிருகங்களுக்கும் உள்ள நுண் உணர்வுகள் பற்றி இன்னும் முழுமையாக ஆய்வு செய்யப்படவில்லை. அதனால், அது குறித்து முழுமையாகத் தெரியவில்லை.


ஆனால், பல இயற்கைப் பேரிடர்களை அவை முன்கூட்டியே அறிகின்றன என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அதில் புயல், நில அதிர்வு, சுனாமி, மலை போன்ற பெரிய பனிப் பாறைகள் விழுவதுப் போன்ற பேரிடர்களை பறவைகளும், மிருகங்களும் முன்கூட்டியே அறிகின்றன.


ஐரோப்பிய நாடுகளில் “கேனரி’ என்ற சிறிய பறவை உள்ளது. முந்தைய காலத்தில் மனிதர்கள் அந்தப் பறவையைக் கூண்டில் வைத்துக் கொண்டு சுரங்கத்துக்குள் செல்வார்கள். நில அதிர்வு வருவது தெரிந்தால் அந்தப் பறவை மிகுந்த அசாதாரண சூழலுக்கு உள்ளாகும். அதைப் பார்த்து, அவர்கள் தப்பித்து வெளியில் வந்துவிடுவர். அதிலிருந்து பறவைகளுக்கும் இயற்கை பேரிடரைத் தெரிந்து கொள்ளும் நுண் உணர்வு இருப்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது. ஆனால், மனிதர்களால் இதனைத் தெரிந்து கொள்ள முடியாது. இந்த விஷயத்தில் பறவைகளைவிட மனிதர்களுக்கு மழுங்கிய உணர்வு.


இயற்கை பேரிடர் நேரங்களில் பறவைகள் தூரத் தேசத்துக்குச் செல்லலாம். மிருகங்களாக இருந்தால் பாதுகாப்பான இடங்களில் ஒதுங்கிக் கொள்ளலாம். இதுபோன்ற யுக்திகளை அவை மேற்கொள்ளலாம்.


பறவைகள் தப்பிப்பது தொடர்பாக வரலாற்றுச் சம்பவங்கள் தெரிவதற்கு வாய்ப்பு இல்லை. காட்டுயிர்கள் தொடர்பாக இப்போதுதான் நாம் ஆய்வுகள் செய்து வருகிறோம். கதைகள் மூலமாகவே பறவைகள் குறித்து ஆரம்பத்திலிருந்து அறிந்து வருகிறோம். அண்டார்டிக்காவில் இருந்தும், இமயமலையில் இருந்தும் பறவைகள் தமிழகத்துக்கு வருகின்றனஎன்பதையெல்லாம் இப்போது அறிகிறோம். அப்போதெல்லாம் அதற்கு வாய்ப்பு இல்லையே என்றார்அவர்.


புறாக்கள், காகங்கள் போன்றவை பெரிய கட்டடங்களின் சாளரங்களில் ஒதுங்கி நின்று வர்தா புயலை எதிர்கொண்டன. பச்சைக்கிளிகள், மைனாக்கள், சிட்டுக்குருவிகள், குயில், செங்குருவி போன்ற பல பறவைகளைக் காண முடியவில்லை.


புயல் ஓய்ந்த தினங்களுக்குப் பிறகு தூரத் தேசம் சென்ற பறவைகள் மரங்களைத் தேடி மீண்டும் வரக்கூடும். முறிந்த மரங்கள் போக, மிஞ்சி நிற்கும் மரங்களில் அவை மீண்டும் கூடு கட்டக் கூடும்.

தினமணி

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: