ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகிறது ‘பவர் பாண்டி’

'பவர் பாண்டி' வெளியீட்டு தேதியை குறிப்பிட்டு இருக்கும் படத்தின் போஸ்டர்

தனுஷ் இயக்குநராக அறிமுகமாகும் ‘பவர் பாண்டி’,
ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக
அறிவிக்கப்பட்டுள்ளது.

கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும்
‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் இறுதிக்
கட்டப் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வந்தது.
இதில் கவனம் செலுத்திக் கொண்டே தான் இயக்கி
வரும் ‘பவர் பாண்டி’ படத்திலும் கவனம் செலுத்தி
வருகிறார் தனுஷ்.

ராஜ்கிரண் நாயகனாக நடித்து வரும் இப்படத்தில் தனுஷ்,
மடோனா செபஸ்டியன், பிரசன்னா, சாயா சிங் உள்ளிட்ட
பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மேலும், இயக்குநர் கெளதம் மேனன், ‘விஜய் டிவி’
திவ்யதர்ஷினி, வித்யூலேகா ஆகியோர் கவுரவ
தோற்றத்திலும் நடித்துள்ளனர்.

வுண்டர்பார் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்துக்கு
ஷான் ரோல்டன் இசையமைத்து வருகிறார். வேல்ராஜ்
ஒளிப்பதிவு செய்து வருகிறார். இப்படத்தின் கதைக்களம்
அதிரடி சண்டைக் காட்சி கலைஞர் (ஸ்டண்ட்மேன்)
ஒருவரைப் பற்றிய கதையாகும்.

‘பவர் பாண்டி’ படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக
முடிக்க திட்டமிட்டு தொடங்கப்பட்டது. தற்போது இறுதிக்
கட்டப் படப்பிடிப்பை படக்குழு எட்டியிருக்கிறது. தற்போது
இப்படம் ஏப்ரல் 14, 2017ல் வெளியாகும் என படக்குழு
அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

—————————————
-ஸ்கிரீனன்

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: