இந்த வார சினி செய்திகள்

ஷாருக்கான் வேடத்தில் அஜித்!
ஸ்ரீதேவி நடித்த, இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தை இயக்கியவர், பாலிவுட் இயக்குனர், கவுரி ஷிண்டே. அப்படத்தில், கவுரவ வேடத்தில் நடித்திருந்தார், அஜித். இந்நிலையில், ஷாருக்கானை வைத்து தான் இயக்கிய, டியர் ஜிந்தகி என்ற படத்தை, தமிழில் இயக்க திட்டமிட்டுள்ள கவுரி ஷிண்டே, ஷாருக்கான் நடித்த வேடத்திற்கு அஜித் பொருத்தமாக இருப்பார் எனக் கருதி, சமீபத்தில், அஜித்திடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
சினிமா பொன்னையா

ஸ்ரீதிவ்யாவின் வாக்குறுதி!
காஷ்மோரா படத்தை, பெரிதாக எதிர்பார்த்த ஸ்ரீதிவ்யாவுக்கு, அப்படம் பெரிதாக கை கொடுக்கவில்லை. அதனால், ‘இனிமேல், நயன்தாரா மாதிரியான முன்னணி நடிகைகள் நடிக்கும் படங்களில் நடிப்பதில்லை…’ என்று முடிவெடுத்துள்ளார். மேலும், தற்போது, விஷ்ணுவுடன், மாவீரன் கிட்டு படத்தில், சவாலான வேடத்தில் நடித்த, ஸ்ரீதிவ்யா, இதுவரை, கவர்ச்சி ஏரியாவிற்குள் இறங்காதவர், இனிமேல், கமர்ஷியல் கதையென்றால், இறங்கியடிக்கவும் தயாராக இருப்பதாக, ‘கமர்ஷியல்’ இயக்குனர்களிடம், வாக்குறுதி வழங்கி வருகிறார். அடுத்து அடுத்துச் சொன்னால் தொடுத்த காரியம் முடியும்!
எலீசா

மருமகன் படத்துக்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்!
இசையமைப்பாளர், ஏ.ஆர்.ரஹ்மானின், அக்கா மகன் இசையமைப்பாளர், ஜி.வி.பிரகாஷ்குமார். சமீபகாலமாக, இவர், படங்களில், கதாநாயகனாக நடித்து வரும் நிலையில், மின்சார கனவு பட இயக்குனர், ராஜீவ்மேனன் இயக்கத்தில், சர்வம் தாள மயம் என்ற படத்தில் நடிக்கிறார். நினைத்தாலே இனிக்கும் மற்றும் சிந்து பைரவி படங்களை போன்று, இசை சம்பந்தமான கதையில் உருவாகும் இப்படத்திற்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
சி.பொ.,

கவர்ச்சிக்கு மாறும் லட்சுமிமேனன்!
கவர்ச்சிக்கு தடை விதித்து வந்த லட்சுமிமேனன், றெக்க படத்தை அடுத்து, கமர்ஷியல் நாயகியாக உருவெடுத்துள்ளார். அதன்காரணமாக, கதைக்கு அவசியம் என்றால், பிகினி உடையணிந்து நடிக்க தயாராக இருப்பதாக கோலிவுட்டுக்கு தெரிவித்துள்ளார். அத்துடன், இதுவரை, ‘ஜிம்’ பக்கம், காத்து வாங்க கூட செல்லாமல் இருந்தவர், கடந்த சில மாதங்களாக, தினமும், ‘ஜிம்’ சென்று, உடற்கட்டை, ‘ஸ்லிம்’ செய்து, கவர்ச்சிகரமாக மாற்றி வருகிறார். வருந்தி வருந்தி பார்த்தாலும் வருகிற போது தான் வரும்!
எலீசா.

காமெடிக்கு மாறும் சசிகுமார்!
மதுரை மண் சார்ந்த கதைகளில், தொடர்ந்து நடித்து வரும், சசிகுமார், கிடாரி படத்தை தொடர்ந்து, பலே வெள்ளையத்தேவா என்ற படத்தில் நடிக்கிறார். இதுவரை, வெட்டு, குத்து படங்களில் நடித்து வந்தவர், இப்படத்தில் இருந்து, காமெடி, ‘டிராக்’கிற்கு மாறுகிறார். அதனால், இப்படத்தில், சூரி மற்றும் கோவை சரளா உள்ளிட்ட, சில, ‘மெகா’ காமெடியன்களை, தன்னுடன் கூட்டணி சேர்த்துள்ளார்.
சி.பொ.,

நயன்தாராவுடன், ‘டூயட்’ கேட்ட விஜயசேதுபதி!
நானும் ரவுடி தான் படத்தில், நயன்தாராவுடன் இணைந்து நடித்த, விஜயசேதுபதியை தற்போது, நயன்தாரா நடித்து வரும், இமைக்கா நொடிகள் படத்தில், கவுரவ வேடத்தில் நடிக்க கேட்ட போது, ‘கவுரவ வேடம் என்றாலும், நயன்தாராவுடன் ஒரு, ‘டூயட்’ பாடல் இருந்தால் சொல்லுங்கள்; கால்ஷீட் தருகிறேன்…’ என்று கூறியுள்ளார்.
— சினிமா பொன்னையா

கறுப்பு பூனை!
* ‘பால் நடிகையின் விவாகரத்துக்கு, ஒல்லிபிச்சான் நடிகர் தான் காரணம்…’ என்றொரு, ‘கிசுகிசு’ பரவிய போதும், அடங்கவில்லை நடிகர். அம்மணிக்கு படம் கொடுத்து ஆதரித்திருப்பதுடன், அவருடன் கடலை போடுவதையும் நிறுத்தவில்லை. அத்துடன், அம்மணியை, வேறு நபர், ‘அட்டாக்’ செய்து, தன்னிடமிருந்து அபகரித்து விடக்கூடாது என்பதற்காகவும், பெரிய தடுப்பு சுவர் எழுப்பியுள்ளார், நடிகர்.

* நண்பன் பட நாயகியின் மீதான பரபரப்பு குறைந்து வருவதால், சமீபத்தில், தன் நீச்சல் உடை வீடியோ ஒன்றை, இணையதளத்தில் வெளியிட்டார். அதை பார்த்து, இந்திய சினிமா பிரபலங்கள் பலரும், அவரது அழகை, எக்கச்சக்கமாக வர்ணித்து தள்ளி விட்டனர். இதனால், தனக்கான ரசிகர் கூட்டம் அப்படியே தான் உள்ளது என்பதை தீர்மானித்த நடிகை, அடுத்தபடியாக, ஒரு பாலிவுட் படத்தில், ‘பிகினி’ உடை அணிந்து, ‘லிப்-லாக்’ காட்சியில் நடிக்க போவதாக, ஒரு செய்தியை வைரலாக வெளியிட்டுள்ளார்.

சினி துளிகள்
* வடசென்னை படத்தை தொடர்ந்து, திருட்டுப்பயலே – 2 படத்திலும் நடித்து வருகிறார் அமலாபால்.
* இந்தி சினிமாவில், தன்னை மிஞ்சி கவர்ச்சி காட்டும் எமிஜாக்சனை, போட்டியாளராக பார்க்கிறார் இலியானா.

அவ்ளோதான்!

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: