திருவண்ணாமலை தீபத் திருவிழா தேரோட்டம்

annamalai

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில்
கார்த்திகை தீபத் திருவிழா தேரோட்டம் வெள்ளிக்கிழமை
நடைபெற்றது.

காலை முதல் இரவு வரை நடைபெற்ற பஞ்ச ரதங்களின்
தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி
தரிசனம் செய்தனர்.

பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர்
கோயில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 3-ஆம் தேதி
கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 12-ஆம் தேதி
அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவர் சன்னதியில் பரணி
தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர திருவண்ணாமலை
மலை மீது மகா தீபமும் ஏற்றப்படுகின்றன.

பஞ்ச ரதங்களின் தேரோட்டம்:
தீபத் திருவிழாவின் 7-ஆம் நாளான வெள்ளிக்கிழமை மாட
வீதிகளில் பஞ்ச ரதங்களின் தேரோட்டம் நடைபெற்றது.
முன்னதாக, உற்சவர் சுவாமிகள் பஞ்சமூர்த்திகளுக்கு கோயிலில்
சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டன.

—————————————————–
தினமணி

பின்னர், பஞ்சமூர்த்திகளை ஊர்வலமாக எடுத்து வந்து,
பஞ்ச ரதங்களில் பொருத்தி, தேர்களுக்கு சிறப்புப் பூஜைகளை
கோயில் சிவாச்சாரியார்கள் செய்தனர்.

விநாயகர் தேரோட்டம்: காலை 6.45 மணிக்கு தனுர் லக்கனத்தில்
முதலாவதாக விநாயகர் தேரோட்டம் தொடங்கியது. கோயில்
ராஜகோபுரம் எதிரில் கோயில் இணை ஆணையர்
எஸ்.ஹரிப்பிரியா, தெற்கு மாவட்ட அதிமுக செயலர் பெருமாள் நகர் கே.ராஜன், மணியம் செந்தில் உள்ளிட்டோர் தேரை வடம் பிடித்து இழுத்து, தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
தேரடி தெரு, திருவூடல் தெரு, பே கோபுரத் தெரு, பெரிய தெருக்கள் உள்ளிட்ட மாட வீதிகளில் வலம் வந்த விநாயகர் தேர் காலை 10.45 மணிக்கு மீண்டும் நிலையம் அடைந்தது.
முருகர் தேரோட்டம்: 2-ஆவதாக காலை 11 மணிக்கு வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் தேரோட்டம் தொடங்கியது. மாட வீதிகளில் வலம் வந்த பிறகு மீண்டும் நண்பகல் 12.30 மணிக்கு முருகர் தேர் நிலையை வந்தடைந்தது.
அருணாசலேஸ்வரர் தேரோட்டம்: 3-ஆவதாக நண்பகல் 12.30 மணிக்கு பெரிய தேர் எனப்படும் உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர் தேரோட்டம் தொடங்கியது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே, மாவட்ட வருவாய் அலுவலர் சா.பழனி, அறநிலையத் துறை இணை ஆணையர்கள் எஸ்.ஹரிப்பிரியா, அ.தி.பரஞ்சோதி, வாசுநாதன், கோட்டாட்சியர் உமா மகேஸ்வரி ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். மாட வீதிகளில் வலம் வந்த இந்தத் தேர், இரவு 7.45 மணிக்கு மீண்டும் நிலைக்கு வந்தடைந்தது.
பராசக்தியம்மன், சண்டிகேஸ்வரர் தேரோட்டம்: 4-ஆவதாக

இரவு 8 மணிக்கு முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே வடம் பிடித்து
இழுக்கும் பராசக்தியம்மன் தேரோட்டம் தொடங்கியது.
ஏராளமான பெண்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
5-ஆவதாக சண்டிகேஸ்வரர் தேரோட்டம் நடைபெற்றது. இந்தத் தேரை
முழுக்க முழுக்க சிறுவர், சிறுமியர் மட்டுமே இழுத்துச் சென்று
வழிபட்டனர். இவ்விரு தேர்களும் நள்ளிரவு சுமார் 12.20 மணிக்கு
மீண்டும் நிலைக்கு வந்தன.

தங்கம், வெள்ளி நாணயங்கள் பரிசு
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு, வரும் பக்தர்கள் துணி பை, சணல் பைகளை எடுத்து வந்தால் அவர்களுக்கு குலுக்கல் முறையில் தங்கம், வெள்ளி நாணயங்கள் பரிசாக வழங்கப்படும் என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
கிரிவலப்பாதை, திருவண்ணாமலையின் பல்வேறு பகுதிகளில் சேரும் குப்பையைத் தவிர்க்கவும், பிளாஸ்டிக் பைகளுக்குப் பதிலாக துணிப் பைகள், சணல் பைகள், சுற்றுச் சூழலுக்கு உகந்த பிற பைகளை பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், மாவட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் திட்டமிட்டுள்ளன.
அதன்படி, தீபத் திருவிழாவுக்கு துணி, சணல் பை மற்றும் சுற்றுச் சூழலுக்கு உகந்த பிற பைகளை எடுத்து வரும் பக்தர்களுக்கு குலுக்கல் முறையில் தங்கம், வெள்ளி நாணயங்கள் ஒவ்வொரு தீபத் திருவிழாவின்போதும் வழங்கப்படுகின்றன.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: