சமையல்… சமையல்…

இந்த வார சமையல் குறிப்புகளை வழங்குபவர்:  லஷ்மி ராமன்

முட்டைகோஸ் ரைஸ்

தேவையானவை:
பாஸ்மதி அரிசி சாதம் – 4 கிண்ணம்
துருவிய முட்டை கோஸ் – 3 கிண்ணம்
வெங்காயம் – 1
பச்சை பட்டாணி – 50 கிராம்
குடை மிளகாய் – 1
எண்ணெய் – 2 தேக்கரண்டி
நெய் – 1 தேக்கரண்டி
சோம்பு – 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 2
புதினா – சிறிது
மிளகுத்தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் –  கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – தேவைக்கேற்ப
சிகப்பு மிளகாய்த் தூள் – 1 தேக்கரண்டி
செய்முறை:  வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும், சோம்பு தாளிக்கவும். பிறகு,கறிவேப்பிலை, பச்சைமிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்னர், பச்சைப்பட்டாணி, பொடியாக நறுக்கிய குடைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.   பின்னர், மெல்லியதாக துருவிய முட்டை கோஸை சேர்த்து நன்கு மொற மொறவென வரும்வரை வதக்கவும் ( குழைய கூடாது). பின்னர், உப்பு, சிகப்பு மிளகாய்த் தூள் சேர்த்து வதக்கவும். பின்னர்,வடித்து வைத்துள்ள பாஸ்மதி அரிசியை சேர்த்து அத்துடன் மிளகுத்தூள், நெய், புதினா இலைகளைத்தூவி சாதம் உடையாதவாறு பக்குவமாக கிளறி இறக்கவும். முட்டை கோஸ் பிரியாணி தயார்.
பயன்கள்: முட்டைகோஸ்  ஆன்டிஆக்ஸிடண்ட் அதிகம் உள்ளது. புற்றுநோயை எதிர்க்கவல்லது, விரைவில் ஜீரணிக்க கூடியது, சத்துகள் நிறைந்தது.
சீரக ரசம்

தேவையானவை:
சீரகம் – 1 தேக்கரண்டி
மிளகு – 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
துவரம் பருப்பு – 1 தேக்கரண்டி
நாட்டு தக்காளி – 2 ( பெரியது)
கறிவேப்பிலை – 2 ஈர்க்கு
பெருங்காயம் – சிறிது
உப்பு – தேவைக்கேற்ப
மிளகாய் வற்றல் – 1
புளி – சிறிய நெல்லிக்காய் அளவு
கொத்துமல்லித் தழை – சிறிது
தூள் பனைவெல்லம் – 1 தேக்கரண்டி
தாளிக்க:
நெய் – 1 தேக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
செய்முறை:  கொத்துமல்லித் தழையை தவிர மேற்கூறிய மற்ற அனைத்து பொருள்களையும் வாணலியில்  எண்ணெய் விடாமல் வறுத்து  சிறிது தண்ணீர் சேர்த்து, மிக்ஸியிலிட்டு மைய  விழுதாகக் அரைத்துக் கொள்ளவும்.  பின்னர், அரைத்த விழுதுடன் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து வாணலியில் விட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும். ரசம் நுரை பொங்கி வரும்போது இறக்கிவிட்டு, நெய்யில்  தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளித்து, பொடியாக நறுக்கிய கொத்துமல்லி தழையைச் சேர்த்து கிளறி 5 நிமிடம் மூடி வைத்துவிட்டு, பிறகு பரிமாறவும். சத்தான சீரக ரசம் தயார்.
பயன்கள்: மழை குளிர் காலத்திற்கு ஏற்றது. பித்தத்தை தணிக்க கூடியது. செரிமான கோளாறு சரியாகும். வாயுத் தொல்லை நீங்கும், உடம்புக்கு சுறுசுறுப்பைத் தரும்.
ஆனியன் வரகு அடை

தேவையானவை:
வரகு அரிசி – 1 கிண்ணம்
புழுங்கல் அரிசி – 1 கிண்ணம்
பாசிபருப்பு – முக்கால் கிண்ணம்
துவரம் பருப்பு – கால் கிண்ணம்
உளுத்தம் பருப்பு -அரை கிண்ணம்
மிளகாய் வற்றல் – 5
கறிவேப்பிலை – 1 பிடி
கல் உப்பு – தேவைக்கேற்ப
பெருங்காயம் – சிறிது
அடை வார்க்க:
எண்ணெய் அல்லது நெய் – தேவைக்கேற்ப
பெ.வெங்காயம் – 2
கொத்துமல்லி – தழை
செய்முறை:
வரகு அரிசி, புழுங்கல் அரிசி மற்றும்  பருப்பு வகைகளை சுத்தம் செய்து தண்ணீரில் நான்கு மணி நேரம் ஊறவிடவும்.  வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.  அரிசி, பருப்பு வகையறாக்கள்  நன்கு ஊறிய பின்பு அத்துடன் கறிவேப்பிலை, மிளகாய் வற்றல், பெருங்காயம், உப்பு சேர்த்து கிரைண்டரில்  கொரகொரப்பாகவும், கெட்டியாகவும் அரைத்துக் கொள்ளவும்.
பின்னர், அடுப்பில் தோசைக் கல் சூடேறியதும்  ஒவ்வொரு கரண்டியாக மாவை எடுத்து ஊற்றி,  1தேக்கரண்டி எண்ணெய்யை சுற்றிவிட்டு, அதன் மீது பொடியாக நறுக்கிய வெங்காயத்தையும், பொடியாக நறுக்கிய கொத்துமல்லியையும் தூவி சுட்டெடுக்கவும். சூடான சுவையான ஆனியன் வரகரிசி அடை தயார்.
பயன்கள்: புரத சத்து மிகுந்தது, எலும்புகளுக்கு பலம் தரும், சுலபமாக ஜீரணமாகக் கூடியது. ஃபைபர் சத்து நிறைந்தது.
சக்கரவள்ளிக் கிழங்கு வத்தக் குழம்பு

தேவையானவை:
சின்ன  வெங்காயம் அல்லது
பெரிய வெங்காயம்  – 100 கிராம்
சர்க்கரை வள்ளிக் கிழங்கு – 1 பெரியது
புளி – 1 எலுமிச்சை அளவு
தக்காளி – 1
சிகப்பு மிளகாய்த் தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
சம்பார் பொடி – 1தேக்கரண்டி
பெருங்காயம் – சிறிது
கறிவேப்பிலை – 1 பிடி
நல்லெண்ணெய் – 4 தேக்கரண்டி
கடுகு, உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப
மிளகாய் வற்றல் – 1
வெந்தயம் – அரை தேக்கரண்டி
தூள் செய்த வெல்லம் – 1 தேக்கரண்டி
செய்முறை: வாணலியில்  எண்ணெய்விட்டு கடுகு- உளுத்தம் பருப்பு தாளிக்கவும். பிறகு மிளகாய் வற்றல், வெந்தயம், பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர், தக்காளி மற்றும்  நறுக்கி வைத்துள்ள சர்க்கரை வள்ளி கிழங்கை சேர்த்து வதக்கவும். அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.  அத்துடன், தண்ணீரில் ஊற வைத்து கெட்டியாக கரைத்து வைத்துள்ள புளியைச் சேர்க்கவும். பின்னர், உப்பு மற்றும் சாம்பார் பொடி சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும். குழம்பில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும்வரை நன்கு கொதிக்கவிடவும். கடைசியாக 1 தேக்கரண்டி  தூள் செய்த வெல்லத்தைக் கலந்து கிளறி இறக்கவும். சர்க்கரை வள்ளி கிழங்கு வத்தக் குழம்பு தயார்.
மல்லி, புதினா, எள் சட்னி

தேவையானவை:
கொத்துமல்லி – 2 கைப்பிடி
புதினா – 2 கைப்பிடி
எள் – 2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 1/2 தேக்கரண்டி
தேங்காய் – 2 சில்
இஞ்சி – சிறிதளவு
பூண்டு – 3 பல்
பச்சை மிளகாய் – 1
எண்ணெய் – தேவைக்கேற்ப
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை: வாணலியில் அரைத் தேக்கரண்டி எண்ணெய்விட்டு, உளுத்தம்பருப்பு வறுக்கவும். பின்னர், எள் சேர்த்து வறுக்கவும்.  அதன்பிறகு இஞ்சி, பூண்டு, 1 சிறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பின்னர், புதினா சேர்த்து வதக்கவும். அடுப்பை அணைத்த பிறகு,  வதக்கிய பொருள்களோடு, கொத்துமல்லித்தழை, பொடியாக நறுக்கிய தேங்காய், உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர், கடுகு தாளித்து சேர்க்கவும். மல்லி, புதினா, எள் சட்னி தயார்.
மணத்தக்காளி கீரை தொக்கு

தேவையானவை:
மணத்தக்காளி கீரை – 1 கைப்பிடி
பச்சை மிளகாய் – 1
(அல்லது)
மிளகு – 10
சோம்பு அல்லது சீரகம் – 1 தேக்கரண்டி
துருவிய தேங்காய் – 4 தேக்கரண்டி
இந்து உப்பு – தேவைக்கேற்ப
புளிப்பு இல்லாத கெட்டி தயிர் – முக்கால் கிண்ணம்
பெருங்காயம் – சிறிது
இஞ்சி – சிறிய துண்டு
கடுகு – 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – அரை தேக்கரண்டி
எண்ணெய்  – தேவைக்கேற்ப
செய்முறை: வாணலியில் 1 தேக்கரண்டி எண்ணெய்விட்டு அதில் சோம்பு அல்லது சீரகம், பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் அல்லது பொடித்த மிளகுத் தூள், பெருங்காயம்,தட்டிய இஞ்சி சேர்த்து வதக்கவும். அத்துடன்  ஆய்ந்து சுத்தம் செய்து அலசி வைத்துள்ள மணத்தக்காளி கீரை சேர்த்து வதக்கவும்.  பிறகு, வதக்கி வைத்துள்ள கீரை வகையறாக்களுடன், தேங்காய் மற்றும் தேவையான உப்பு சேர்த்து கொஞ்சமாக தண்ணீர்விட்டு மிக்ஸியில் மைய அரைத்து, ஒரு கிண்ணத்தில் தனியாக எடுத்து வைக்கவும்.  பிறகு, வாணலியில் சிறிது எண்ணெய்விட்டு கடுகு, உளுந்து தாளித்து அரைத்து வைத்துள்ள கீரை கலவையுடன் சேர்த்து கலந்து வைக்கவும். சாப்பிட பரிமாறும்போது கீரை கலவையுடன், கெட்டியான தயிர் சேர்த்து கலந்து பரிமாறவும். மணத்தக்காளி தேங்காய் தயிர் தொக்கு தயார். வத்தக்குழம்புக்கு சைடிஷ்ஷாக  தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.
பயன்கள்: வாய்ப் புண், வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது.


 

நன்றி- மகளிர் மணி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: