எதையோ பிடிக்கப் போய், எதையோ பிடித்த கதையாக மாறிவிட்டதே!


ஜப்பானில் உள்ள ஸ்பேஸ் வேர்ல்ட் பொழுதுபோக்கு பூங்கா,
உலக அளவில் மிகப் பெரிய சர்ச்சையில் சிக்கியிருக்கிறது.

இங்குள்ள உறைபனி அருங்காட்சியகத்தில், புதிதாக ஐஸ்
ஸ்கேட்டிங் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. விளம்பரங்களால்
ஆர்வமானவர்கள், அரங்கத்துக்குள் நுழைந்ததும் அதிர்ந்து
போனார்கள்.

மீன்கள், நண்டுகள், திருக்கைகள், சுறாக்கள் போன்ற
5 ஆயிரம் உயிரினங்கள் பனிக்குள் புதைக்கப்பட்டிருந்தன.

‘நாங்கள் புகைப்படங்களைப் பார்த்துதான் வந்தோம்.
இவை நிஜமான உயிரினங்கள் என்று அறிந்த பின்னர்,
பனிக்கு அடியில் தண்ணீரில் உயிரோடு இருக்கும் என்று
நினைத்தோம். ஆனால் இறந்த நிலையில் உறைந்து
போயிருப்பதைக் கண்டு அதிர்ந்துவிட்டோம்.

மகிழ்ச்சிக்காகக் குழந்தைகளை அழைத்து வந்தோம்.
வருத்தத்துடன் வெளியேறிவிட்டோம்’ என்கிறார் ஒரு
பெண்.

ஆரம்பிக்கப்பட்ட இரண்டே வாரங்களில் ஐஸ் ஸ்கேட்டிங்
பற்றிய எதிர்மறையான விமர்சனங்கள் ஜப்பான் முழுவதும்
பரவிவிட்டன. ‘நாங்கள் புதிய முயற்சி என்று நினைத்து
இதைச் செய்தோம். உயிரோடு இருந்த உயிரினங்களைக்
கொண்டுவந்து, உறைபனிக்குள் வைக்கவில்லை.

இறந்த உயிரினங்களைத்தான் வைத்திருக்கிறோம்.
குழந்தைகளுக்குக் கடலுக்குள் செல்வது போன்ற
அனுபவத்தைக் கொடுக்கவும் கடல்வாழ் உயிரினங்களை
அறிந்துகொள்ளவும் இந்த முயற்சியை மேற்கொண்டோம்’
என்கிறார் பொழுதுபோக்குப் பூங்காவைச் சேர்ந்த
அசாஹி ஷிம்புன்.

மக்கள் இந்த விளக்கத்தை ஏற்க மறுத்துவிட்டனர்.
தொடர்ந்து கொடுத்த அழுத்தத்தால் ஐஸ் ஸ்கேட்டிங்
பகுதியை மூடுவதாக அறிவித்துவிட்டனர். மக்களிடம்
வருத்தம் தெரிவித்து, அடுத்த ஆண்டு இறந்து போன
மீன்களுக்கு நினைவு தினம் அனுஷ்டிப்பதாகவும்
கூறியிருக்கிறது ஸ்பேஸ் வேர்ல்ட் நிறுவனம்.

—————————————-

தி இந்து

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: