அதிக வெளிச்சம் ஆபத்தை ஏற்படுத்தும்!

சீனாவில் ஹை பீம் விளக்குகளால் அதிக விபத்துகள்
நடந்து வருகின்றன. அரசாங்கமும் இந்தப் பிரச்சினையைத்
தீர்ப்பதற்காகப் பல்வேறு வழிகளில் முயன்று வருகிறது.

ஆனாலும் ஹை பீம் விளக்குகளைப் பயன்படுத்துவதைத்
தடுக்க முடியவில்லை. விபத்துகளில் இருந்து பாதுகாத்துக்
கொள்வதற்காக மக்களே, தங்கள் கார்களின் பின்பக்கக்
கண்ணாடியில் அச்சம் தரும் போஸ்டர்களை ஒட்ட
ஆரம்பித்துவிட்டனர்.

இரவு நேரத்தில் அதிக வெளிச்சம் பாய்ச்சும்போது,
காரில் உள்ள போஸ்டர் உருவங்கள் பளீரென்று ஒளிர்கின்றன.
அச்சமூட்டும் உருவங்கள் தெரியும்போது பின்னால் வரும்
வாகனஓட்டிகள் பயந்து அலறுகிறார்கள்.

வெளிச்சத்தின் அளவைக் குறைத்தால் இந்த உருவங்கள்
கண்களுக்குத் தெரியாது. இந்த உத்தியை அதிக மக்கள்
பயன்படுத்த ஆரம்பித்துவிட்டதால், அச்சமூட்டும் படங்களின்
போஸ்டர்கள் எல்லா இடங்களிலும் கிடைக்கின்றன.

இரவு நேரங்களில் இதுபோன்ற உருவங்களைப் பார்க்கும்
வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் விபத்துகளை ஏற்படுத்தி
விடுகிறார்கள். அதனால் சீனாவின் சில பகுதிகளில் இந்த
போஸ்டருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

ஆனால் பெய்ஜிங்கில் சட்டப்படி குற்றம் இல்லை என்பதால்,
கார்களில் போஸ்டர்கள் அதிக அளவில் வலம் வருகின்றன.
விபத்துகளில் சிக்குவதை விட, அபராதம் கட்டிவிட்டுப்
பாதுகாப்பாகச் செல்லலாம் என்று பலரும் நினைக்கின்றனர்.

—————————————
தி இந்து

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: