திருஷ்டிக்குப் பரிகாரம் பூஷணிக்காய்! – ஏன்?


நம்முடைய பண்டைய வழக்கங்களில் ஒன்று
பூஷணிக்காய்க் கொண்டு திருஷ்டி கழிப்பது.

ஒரு புது வீடு அல்லது வியாபாரஸ்தலம் உயரே கயிற்றில்
கட்டித் தொங்கவிடுவார்கள். அந்தக் காயில் மனிதனின்
உருவம் போல் கண்கள், மூக்கு, செவி, வாய்
முதலியவைகளை வரைந்து வைத்திருப்பார்கள்.

ஒரு திருஷ்டி பொம்மையையும் கூடத் தொங்க
விட்டிருப்பார்கள்.
மனிதர்களின் கண் திருஷ்டி படக்கூடாது என்ற
நோக்கத்துடன்தான் இப்படிச் செய்கிறார்கள்.
இது பற்றி ஆன்மிக ரீதியாக ஒரு தகவல் உள்ளது.

முன்னொரு காலத்தில் ‘கூஷ்மாண்டன்’ என்ற பெயருடைய
ஒரு அரக்கன் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் தொடர்ந்து
இடர்கொடுத்து, அவர்களை நிம்மதியாக வாழவிடாமல்
செய்து வந்தான்.

அதனால் மிகவும் துயரம் அடைந்த அவர்கள் ஸ்ரீமன்
நாராயணனிடம் சென்று முறையிட்டார்கள்.

அவரும் அவர்களின் கோரிக்கையை ஏற்று, அரக்கன்
கூஷ்மாண்டனை அவன் அநேக வரங்கள் பெற்றிருந்தாலும்
தனது சக்ராயுதத்தால் சம்ஹாரம் செய்தார்.

இறக்கும் தருவாயில் இருந்த அந்த அரக்கனோ, பரந்தாமனைப்
பார்த்து, ‘பிரபோ! தாங்கள் எனக்கு ஒரு வரம் தர வேண்டும்.
நான் இறந்த பிறகு, எல்லோரும் ஒரு நல்ல காரியம் செய்யும்
பொழுது அதில் விக்னம் ஏதும் இன்றி நல்ல முறையில் நடைபெற
என்னை ஒரு பூஷணிக்காயில் ஆவாஹணம் செய்து, பூஜைக்குப்
பின் அதை நடுத்தெருவில் போட்டு உடைக்க வேண்டும்.
இதுதான் நான் வேண்டும் வரம்’ என்று பிரார்த்தித்தான்.

அந்த பீதாம்பரதாரி ‘நீதான் மஹாபாபங்கள் செய்தவனாயிற்றே.
உனக்கு நான் எப்படி வரம் கொடுக்க முடியும்’ என்றார்.

அரக்கனோ, ‘நான் செய்த பஞ்சமஹா பாதகங்களுக்குப்
பிராயச்சித்தமாகத்தான் இந்த வரத்தைத் தாங்கள் தர வேண்டும்.
தவிரவும் எவனொருவன் தான் செய்த பாவங்களுக்கு மனதார
மன்னிப்பு கோருகிறானோ அவனுக்குப் பாப விமோசனம்
கண்டிப்பாக உண்டு’ என்று தாங்கள் தானே பகவத் கீதையில்
கூறியுள்ளீர்கள்.

அப்படி இருக்கும்பொழுது எனது கோரிக்கையைத் தாங்கள்
நிராகரிப்பது தர்மத்துக்கு விரோதமானது என்று விவாதித்தான்.

வாசுதேவ கிருஷ்ணனும் அந்த அரக்கனின் கோரிக்கையை
ஏற்றதுடன் அவனுக்கு முக்தியும் அளித்தார் என்பது தான்
குறிப்பிடத் தக்க விஷயமாகும்.

அதனால்தான் நம் கூஷ்மாண்ட அரக்கனை மகிழ்விக்கும்
வகையில் எல்லா முக்கிய நிகழ்ச்சிகளுக்கும் பின்னர்,
கடைசியாகப் பூஷணிக்காயை நடுத்தெருவில் உடைத்து,
திருஷ்டி கழிக்கும் ஐதீகம் வந்துவிட்டது.

மேலும் இது பற்றி இன்னுமொரு சுவாரசியமான தகவலையும்
நம் முன்னோர்கள் நமக்குத் தெரிவித்துள்ளார்கள்.

அது… கிராமப்புறங்களி்ல தேவதைகள் மற்றும் எல்லைத்
தெய்வங்கள் இரவு நேரங்களில் காவலுக்காக ஊர்வலம் வரும்
பொழுது எந்த வீட்டு வாசலில் திருஷ்டி கழிக்கப் படவில்லையோ
அந்த வீட்டிற்குள் சென்று அங்கு உள்ள மனபலமற்றவருக்கோ
இறையுணர்வு இல்லாதவருக்கோ பல விதமான தொல்லைகள்
கொடுத்து வருவார்கள்.

காரணம் அறியாமல் தவிக்கும் அம்மக்கள், மாந்திரீகம்,
சாஸ்திரங்களை அறிந்தவர்களை அணுகி, அந்த
துர்தேவதைகளுக்குப் பரிகாரம் செய்வதுண்டு.

வீட்டிலுள்ளவர்களுக்கு இரவில், கற்பூரத்தால் சுற்றி வாசலில்
அதை ஏற்றி, திருஷ்டி கழித்தால், அவர்கள் கஷ்டங்கள் தீரும்
என்பதும் ஐதீகம்.

சாதாரணமாக திருஷ்டி கழிப்பதில் இவ்வளவு விஷயங்கள்
இருக்கின்றன என்பதை அறியும் பொழுது முன்னோர்களின்
நம்பிக்கையில் பல நன்மைகள் உள்ளன என்பதை பூரணமாக
உணர வேணடும்.

—————————————-
– இறைஞானி இராமகிருஷ்ணன்
நன்றி- மஞ்சரி

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: