பொய் சொன்னா கண்டு பிடிக்கிற எந்திரம்…

ஆசிரியர் 1:
எதுக்கு சார் அந்த பையன பெஞ்ச் மேல நிக்கவச்சு
இருக்கீங்க….???

ஆசிரியர் 2: கட்டபொம்மன தூக்குல போட்ட இடம் எதுன்னு
கேட்டா கழுத்துன்னு சொல்றான்

—————————————————

ஆசிரியர்: உலகம் ஒரு நாடக மேடை… அதில் நாமெல்லாம்
நடிகர்கள்….

மாணவன்:
சார்.. அப்படின்னா எனக்கு ஜோடியா தமன்னாவைப்
போடுங்க சார்…

—————————————–

ஏங்க, உங்க மனைவிய நாய் கடித்ததே….!!!
முதல் உதவி என்ன செஞ்சீங்க….???

அந்த நாய்க்கு ஒரு பிரியாணி வாங்கி போட்டேன்….!!!

———————————————-

😅கண்டக்டர்: “விசில் அடிச்சிக்கிட்டே இருக்கேன்,
நீ பாட்டுக்க போய்க்கிட்டே இருக்கே….???”

டிரைவர்: “இங்கே மட்டும் என்னவாம்……???
பிரேக் அடிச்சிக்கிட்டே இருக்கேன். வண்டி பாட்டுக்க
போய்க்கிட்டே இருக்குதே….!!!’

———————————————–

“மேலே இருந்து கீழே வந்தால் அது அருவி…”
“அப்ப… கீழே இருந்து மேலே போனால்….???”

“அது…. குருவி….!!!”

———————————————–

ஒருவர்: பொய் சொன்னாக் கண்டுபிடிக்க ஒரு எந்திரம்
இருக்காமே….??? உங்களுக்குத் தெரியுமா…..???

தெரியுமாவாவது….??? நான் அதைத்தானே கல்யாணம்
செஞ்சிருக்கேன்.

———————————————

பிச்சைக்காரர்: “அம்மா தாயே… பிச்சை போடுங்க,

நான் வாய் பேச முடியாத ஊமை.”

வீட்டுக்காரம்மா: பக்கத்து வீட்டுல போய் கேளுப்பா…

எனக்கு காது கேட்காது.”

——————————————-

ஏய் என்னோட காதலிக்கு எதாவது பரிசு தரணும்.
என்ன தரட்டும்…???

ஒரு தங்க மோதிரம் வாங்கிக்கொடு

.
வேற எதாவது பெரிசா சொல்லு.
ஒரு MRF டயர் வாங்கிக்கொடு….???

———————————————-

(பரீட்சை ஹாலில்)
😅 ரகு :
வயித்தைக் கலக்குதுடா.
ராமு : எல்லாப் பாடத்தையும் கரைச்சுக் குடிக்காதேன்னு

அப்பவே சொன்னேன், கேட்டியா…???

————————————————-

முட்டை வியாபாரி: என் மகன் எப்படிப் படிக்கிறான் சார்…???

ஆசிரியர்: சூப்பரா இருக்கு சார். நீங்க விக்கறீங்க…
அவன் வாங்குறான்…..!!!

———————————————–

வாடிக்கையாளர்:
சீக்கிரமா ஒரு பை கொடுங்க,
டிரெயினைப் புடிக்கணும்…..!!!

கடைக்காரர்: சாரி சார்….!!! டிரெயின் புடிக்கிற அளவுக்குப்
பெரிய பை எங்க கடையில இல்லியே…!!!

————————————————

இவர்: என்னுடைய பையனுக்கு வயசு 15 ஆவுது,
இன்னமும் கதை சொன்னாத்தான் தூங்கறான்

அவர்: எனக்கு அந்த பிரச்சினையே இல்லே படின்னு
சொன்னா போதும் உடனே தூங்கிடுவான்

———————————————

“கடலை எண்ணெய் என்ன விலைங்க…???”

“நூத்தி இருபது ரூவா”
😅

“எப்போ குறையும்?”
“அளந்து ஊத்தும்போதுதான்….”

—————————————————
வாட்ஸ் அப் பகிர்வு

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: