சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !

ஒரு ஊர்ல ஒரு கோவில் இருந்தது , அரசாங்கம் அந்த
கோயிலை பராமரித்து வந்தது . அதிகாரிகள் அவ்வப்போது
வந்து கணக்கு வழக்குகளை சரி பார்ப்பது வழக்கம் .

அந்த வகையில் , ஒரு சமயம் அரசாங்க அதிகாரி அங்கே
வந்தார் . கோயில் நிர்வாக அதிகாரி கணக்கு புத்தகங்களையும்
மற்ற பதிவேடுகளையும் எடுத்து அவர் முன்னால் வைத்தார்

வந்த அதிகாரி , கோயில் செலவு கண்ணுக்கு பார்த்து கொண்டு
வந்தார் .” சும்மா இருக்கும் சாமியாருக்கு ஒரு பட்டை சோறு “..
என்று தினசரி செலவு பட்டியலில் எழுதபட்டிருந்தது.

அதை பார்த்த அவர் ” சும்மா இருக்கிறவருக்கு எதுக்காக சோறு
போடணும் ? அதை உடனே நிறுத்துங்கள் ! என்று ஆணையிட்டார் .

உடனே ஆலய ஊழியர்கள் , அதிகாரிகளை நெருங்கி மெல்ல
சொன்னார்கள் : “ஐயா சும்மா இருப்பது என்பது அவ்வளவு
சுலபமான காரியமல்ல … அதனால் தான் அவருக்கு சோறு
வழங்குகிறோம் !”

இந்த விளக்கம் அந்த அதிகாரிக்கு திருப்தி அளிக்கவில்லை .
எனவே ,அதுபற்றி ஒன்றும் சொல்லாமல் வீட்டுக்கு வந்து
விட்டார் , வந்த பிறகு ஒரு சாய்வு நாற்காலியில் உக்காந்து
யோசிக்க ஆரம்பித்தார்

” சும்மா இருப்பது என்ன அவ்வளவு கடினமான காரியமா ?
கொஞ்ச நேரம் நாமும்தான் சும்மா இருந்து பார்ப்போமே !”
முயன்று பார்த்தார் . மனம் அலைய ஆரம்பித்தது ….
அடங்க மறுத்தது .

சரி , கொஞ்ச நேரம் கண்களை மூடி தியானம் செய்து
பார்க்கலாம் , முன்றார் ‘ வயிறு பசிக்கிறது போலிருக்கிறதே !
என்று நினைத்தார்

ஒரு புத்தகத்தை எடுத்து புரட்டினார் கவனத்தை அதில்
செலுத்தினார் . காகம் ஒன்று எங்கோ கத்துகிற சதம் அவர்
காதில் விழுந்தது . கண்களையும் காதுகளையும் கட்டுபடுத்த
முயன்றார்

மனம் எதிர்காலத்தை பற்றி யோசிக்க ஆரம்பித்தது .
மகளுக்கு மாப்ளை தேட வேண்டும் ,மகனுக்கு வேலை
தேட வேண்டும் , மறுபடி எதையும் நினைக்காமல்
தியானம் செய்ய முயன்றார்

திடீர் என ஒரு மணம் வந்து மூக்கை தொடுகிறது .
கண் விழித்து பார்கிறார்

மனைவி கொண்டு வந்து வைத்து விட்டு போன சூடான காபி
எதிரே மேஜை மீது இருக்கிறது .அதை எடுத்து குடிக்க
ஆரம்பித்தார்
” மனம் – தியானம் இரண்டும் ஒன்றுகொன்று சம்பந்தம் உள்ளது ”
என்று நினைக்கிறார் . அது அப்படி அல்ல : மனம் முடிந்து போகிற
இடத்தில தான் தியானம் ஆரம்பமாகிறது

எனவே , தியானம் இருக்கிற இடத்தில மனம் இல்லை . மனம்
செயல் படுகின்ற வரையில் தியானமும் அரம்பமவதில்லை ”

அதிகாரி திணறி போனார் . அவருக்கு ஊழியர்கள்
கட்டுபடுகிறார்கள் , உள்ளே இருக்கிற அவர் மனம் கட்டுப்பட
மறுக்கிறது

அதிகாரி அலைபாய்கிற மனதை அடக்க முயன்று ,
அது முடியாமல் சோர்ந்து போனார். ” சும்மா இருப்பது எவ்வளவு
பெரிய விஷயம் ! என்பது அவருக்குபுரிந்தது

உடனே மறுபடியும் புறப்பட்டு அந்த கோவிலுக்கு போனார்,
பதிவேட்டை கொண்டு வர சொன்னார். அதில் இப்படி எழுதினார் :
” சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !”

——————————————

1 பின்னூட்டம்

  1. நவம்பர் 26, 2016 இல் 9:53 முப

    […] via சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இர… […]


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: