மலையாள நடிகர் திலீப் – காவ்யா மாதவன் திடீர் திருமணம்

திலீப் மற்றும் காவ்யா மாதவன் | கோப்பு படம்

கொச்சியில் மலையாள முன்னணி நடிகர் திலீப்
மற்றூம் காவ்யா மாதவன் திருமணம் இன்று நடைபெற்றது.

மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்
வருபவர் திலீப். அவரோடு பல படங்களில் இணைந்து
நடித்தவர் காவ்யா மாதவன். மலையாள ரசிகர்களால்
பிடித்தமான திரை ஜோடிகள் என்று கொண்டாடப்பட்டவர்கள்.

அவ்வப் போது இருவருக்கும் திருமணம் என்ற செய்திகள்
வெளியானது, இருவருமே மறுத்துவந்தார்கள்.

கடந்தாண்டு ஜனவரி மாதம் திலீப் – மஞ்சு வாரியார் இருவரும்
விவாகரத்து பெற்றார்கள். இவர்களுக்கு மீனாட்சி என்ற பெண்
குழந்தை இருக்கிறது.

நிஷ்ஷால் சந்திரா என்ற தொழிலதிபருடன் திருமணமாகி
விவாகரத்து பெற்றவர் காவ்யா மாதவன்.

திலீப் – காவ்யா மாதவன் இருவரது திருமணம் இன்று கொச்சியில்
நடைபெற்றது. இதில் இருவருக்கும் நெருக்கமான நண்பர்கள்
மட்டுமே கலந்து கொண்டார்கள். மம்மூட்டி, மேனகா, மீரா ஜாஸ்மின்
உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டவர்களில் முக்கியமானவர்கள்
ஆவர்.

தனது 2வது திருமணம் குறித்து திலீப், “காவ்யா மாதவனை
திருமணம் செய்வேன் என்று நான் நினைத்து பார்த்ததே இல்லை.
எனது குழந்தை மீனாட்சியின் முடிவைப் பொறுத்தே, மீண்டும்
திருமணம் செய்ய முடிவு எடுத்தேன்.

நானும், மஞ்சு வாரியரும் பிரிந்ததுக்கு காவ்யா மாதவன்
காரணமல்ல. உண்மையான காரணத்தைச் சொன்னால்
பலரது வாழ்க்கை பாதிக்கப்படும் என்பதால் கூற விரும்பவில்லை”
என்று தெரிவித்திருக்கிறார்.

——————————————–
தி இந்து

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: