100 செலவாக்கு மிக்கவர்கள் பட்டியலில் 8 ஆயிரம் மரங்களை நட்ட 105 வயது பெண்மணி

இந்த 2016 ஆம் ஆண்டு  பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்டு உள்ள செல்வாக்கு மிக்க 100 பெண்கள் பட்டியலில் சாலு மராடா  திம்மக்கா என்ற கர்நாட்க மாநில பெண் மணியும் ஒருவர் ஆவார். 80 ஆண்டுகளில் 8000ம் ஆலமரம் நட்டு அதை தன் பிள்ளைகள் போல் வளர்த்து வருபவர் ‘சாலு மராடா திம்மக்காவுக்கு  105 வயது.

இவர் பெங்களூருவையடுத்த, கூதூர் கிராமத்தை சார்ந்தவர். 85 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த கிராமத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலை செல்லும் வழி பொட்டல் காடாக இருந்துள்ளது.

அதை கண்ட திம்மக்கா ஏன் இந்த சாலை இருபுறமும் மரம் நடக்கூடாது என நினைத்து தனது கணவர் உதவியுடன் சாலை ஒரங்களில் மரங்கள் நட்டு அதை பிள்ளைகளை வளர்ப்பது போல, கஷ்டப்பட்டு வளர்த்தார்.

இன்று நான்கு கிலோ மீட்டர் தூரம் அவர் நட்ட மரம் அந்த ஊர் மக்கள்  அனைவருக்கும் நிழல் தருகிறது.

பொட்டல் காடாக இருந்த அந்த சாலை, இப்போது சோலை வனமாக மாறிவிட்டது. மாநிலம் முழுவதும் 80 ஆண்டுகளில் 8000 ஆலமரங்கள் இவர் நட்டுள்ளார்.

இவரது சாதனையை பாராட்டி இந்திய அரசு தேசிய குடிமகன் விருது, நான்கு குடியரசு தலைவர்கள் கைகளில் விருதுகள், மூன்று பிரதமர்களிடம் இருந்து விருதுகள், பல முதல்வர்களிடம் விருதுகள் என 100 க்கும் மேற்பட்ட விருதுகள் வாங்கி உள்ளார்.

இந்நிலையில் உலக அளவில் ஆண்டுதோறும் சிறந்த பெண்மணியாக, 100 பேரை பி.பி.சி.,தேர்வு செய்து அவர்களை கவுரவப்படுத்துவர்.2016ம் ஆண்டிற்கான பிபிசியின் உலக சிறந்த 100 பெண்மணிகளில் திம்மக்காவும் இடம் பெற்றுள்ளார்.

இது இந்திய நட்டிற்கும் சுற்றுப்புற சூழலில் ஒரு பெண் அதுவும் கிராமத்துப்பெண் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறார் என்பதற்கும் சான்றாகிறது

தினத்தந்தி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: