மாணவிகள் நலனுக்காக கேரளாவில் என்ன செய்திருக்கிறார்கள் தெரியுமா…?

கேரளா

ப்போதெல்லாம் பெண்கள் சிறு வயதிலேயே பருவமடைந்துவிடுகிறார்கள். பள்ளிகளில் அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் அதை, தன்னுடன் இருக்கும் தோழிகளிடம்கூடப் பகிர்ந்துகொள்வதில் தயக்கம் காட்டுவார்கள். மாதவிடாய் சுழற்சியை, பெரும்பாலும் பள்ளியில் இருக்கும் காலத்தில் சரியாக எந்தப் பெண்ணும் தெரிந்துகொள்வதில்லை. இதனால், மாதவிடாய் ஏற்படும்போது… அவர்களுக்குத் தேவைப்படும் நாப்கின்களை அவர்கள் வைத்திருப்பதற்கு வாய்ப்பு மிகவும் குறைவாக இருக்கிறது. இதை, எங்கு… யாரிடம் கேட்பது என்று புரியாமல் இருப்பார்கள். இதை உணர்ந்த ஹெச்.எல்.எல். லைஃப் கேர் என்கிற நிறுவனம் நாப்கின்களை எடுக்கும், எரிக்கும் இயந்திரங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. கேரளா, திருவனந்தபுரம் மாவட்டத்தில் இருக்கும் அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளில் இந்த வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது அந்த நிறுவனம்.

ஹெச்.எல்.எல். லைஃப் கேர் லிமிடெட்!

ஆணுறை தயாரிக்கும் நிறுவனமான ஹெச்.எல்.எல். லைஃப் கேர் லிமிடெட், இப்போது அரசு மற்றும் அரசு சார்ந்து இருக்கும் 150 பள்ளிகளில், பணத்தைச் செலுத்தினால் நாப்கின்கள் வரும்படி ஓர் இயந்திரத்தை பொருத்தியுள்ளது. ‘வெண்டிகோ’ என்று பெயரிடப்பட்ட இந்த இயந்திரத்தில், பணத்தைச் செலுத்தினால் 3 நாப்கின்கள் வரும். இது தவிர, பயன்படுத்தப்பட்ட நாப்கின்களைச் சுகாதாரமான முறையில் அகற்ற, ‘எரியூட்டு’ (incinerators) என்கிற இயந்திரத்தையும் அந்த நிறுவனம் பொருத்தியுள்ளது. இந்த நாப்கின்களை உற்பத்தி செய்யும் இயந்திரங்கள், கர்நாடகா மாநிலம் பெல்காம் என்ற ஊரில் இருக்கும் நிறுவனத்தில் தயாரிக்கப்படுகின்றன.

ஹெச்.எல்.எல். நிறுவனம், சுகாதார மற்றும் குடும்பநலத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது. அந்த நிறுவனம், மேலும் இதுபோன்று 700-க்கும் மேற்பட்ட இயந்திரங்களை திருவனந்தபுரம் மாவட்டத்தில் பொருத்தியிருக்கிறது.

ஸ்வச் பாரத் நகர்ப்புற மற்றும் நகர அபிவிருத்தி, குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் அமைச்சகத்தின் அனுமதியோடு… பள்ளிகளில் இந்த நாப்கின் வசதிகளும், எரியூட்டு வசதிகளும் செய்யப்பட்டிருக்கின்றன.

விழிப்பு உணர்வு குறைவு!

‘‘நாப்கின்கள், பெண்களுக்குத் தேவைப்படும் அத்தியாவசியமான ஒன்று. அது, அவர்களைச் சுகாதாரமாக வைத்துக்கொள்ளவும் உதவுகிறது. ஆனால், இந்தியாவில் மற்ற வளர்ச்சி அடையும் நாடுகளுடன் ஒப்பிடும்போது, இதற்கான விழிப்பு உணர்வு குறைவாகவே உள்ளது. இன்றும் பல கிராமங்களில் பெண்கள் அவர்களுக்குத் தேவையான நாப்கின்களைக் கடைகளுக்குச் சென்று கேட்பதில்கூடத் தயக்கம் காட்டுகிறார்கள்” என்றார் ஹெச்.எல்.எல் தலைவர் ஆர்.பி.கந்தல்வால்.

ஹெச்.எல்.எல் நிறுவனம், கர்நாடகா பெல்காம்-ல் உள்ள நிறுவனத்தில் வருடத்துக்கு 400 லட்சம் நாப்கின்களைத் தயாரிக்கின்றன. மேலும், டெல்லி, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களிலும்… இதேபோல பள்ளிகளில் பெண்களுக்குப் பயன்படும் விதமாக நாப்கின் மற்றும் எரியூட்டு இயந்திரங்களைப் பொருத்தியுள்ளது.

பெண்களுக்குத் தேவையான பல வசதிகளை அரசு செய்துகொண்டிருக்கிறது. ஆனால், பல வசதிகள் இருப்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்தத் தவறிவிடுகிறது. இன்றும் பெண்கள் பலர், மாதவிடாய் மற்றும் அதைச் சார்ந்த விஷயங்கள் பற்றி வெளியில் பேசத் தயங்குகிறார்கள். கடைக்குச் சென்று நாப்கின் போன்றவற்றை வாங்கி வரும்போதுகூட பல பேப்பர்களைக்கொண்டு மறைத்து வாங்கி வருகிறார்கள். ஆண்கள், பெண்களின் மாதவிடாய் பற்றி அறியாமல் இல்லை. அனைவருக்கும் தெரிந்த விஷயங்களை எதற்காக மறைத்துவைக்க வேண்டும்? இனியாவது பெண்கள், ‘மாதவிடாய்’யை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை உணரவேண்டும்.

நன்றி- விகடன்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: