கலக்கும் உலக நாயகன் -டொனால்ட் டிரம்ப்

ஊடகங்கள் பொதுவாக மக்கள் மனநிலையைப்
பிரதிபலிப்பதில்லை என்பது இன்னொரு முறை நிரூபித்துள்ளது
அமெரிக்க அதிபர் தேர்தல். அமெரிக்கப் பத்திரிகைகள் தொடங்கி,
இந்திய சகோதரர்கள் வரை அனைவரும் ஹிலாரி கிளிண்டனையே
அடுத்த அதிபர் என்று முன்னிலைப்படுத்தி வந்தனர்.

ஆனால், அமெரிக்க மக்கள் டொனால்ட் டிரம்ப்பை தங்களது 45வது
அதிபராகத் தேர்ந்தெடுத்துவிட்டனர். அடுத்தது என்ன?
இந்தியாவுக்கு என்ன நன்மைகள் ஏற்படும்?

அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது, இந்திய அமெரிக்கர்களை
கவரும் வண்ணம் டொனால்ட் டிரம்ப் பேசினார். இந்துக்களை
இந்தியாவை எனக்குப் பிடிக்கும் என்ற அவரது பேச்சு, இந்திய –
அமெரிக்கர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

அமெரிக்க ஹிந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள், டிரம்பை ஆதரித்தனர்
என்பது இங்கே கூடுதல் தகவல்.

ஆனால், டொனால்ட் டிரம்ப் முன்வைத்த பல்வேறு கொள்கைகள்
சர்வதேச நாடுகளைக் கொஞ்சம் அதிர்ச்சியறத்தான் வைத்தன.
அமெரிக்காவின் வேலைவாய்ப்புகள், தொழில் ஆகியவற்றை வேறு
நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை எதிர்ப்பவர் டிரம்ப்.

இதைப் பாதுகாப்புணர்வு என்று சொன்னாலும், இன்றைய காலகட்டத்தில்
இத்தகைய போக்கு குறுகிய பார்வையாகவே கருதப்பட்டது. அதாவது,
இந்தியா போன்ற பல நாடுகள், அமெரிக்க நிறுவனங்கள் வழங்கும்
வேலைகளை நம்பியே தொழில் செய்து வந்துள்ளன.

அந்த நிறுவனங்கள் இனி பெரிய அளவில் சிரமத்தைச் சந்திக்கலாம்.
ஒபாமாவும் சென்ற முறை தேர்தல் இதேபோன்ற புரொடெக்சனிசம்
பேசியவர்தான். வேலைகளை பெங்களூருக்கு அனுப்ப அனுமதிக்க
மாட்டேன் என்று சொன்னவர்தான்.

ஆனால் அதில் அவரால் பெரிய முன்னேற்றத்தைக் காண முடியவில்லை.
சொல்லப்போனால், இந்தியா போன்ற வளரும் நாடுகளில் பணிகளைச்
செய்வது அமெரிக்க நிறுவனங்களுக்கு லாபத்தையே கொடுக்கும்
என்பதால், இந்தக் கொள்கையை அவரால் வலியுறுத்த முடியவில்லை.

டிரம்ப் அரசுப் பதவிகள் எதிலும் இருந்தவர் இல்லை என்பதால்,
யதார்த்தம் புரியாமல் பேசியிருக்கக்கூடும். அதிபரான பின்னர் அவரது
அணுகுமுறையும் பேச்சும் இனி மாறலாம். ஆரம்பத்தில் சிறிது காலத்துக்கு
தடால் – புடால் என்று ஏதேனும் கொள்கை முடிவுகளை எடுத்து
வெளிநாடுகளுக்கு வேலைகள் அனுப்பப்படுவதை டிரம்ப் தடுக்க
முனையலாம். ஆனால் நீண்ட கால அளவில் இதில் உள்ள சாதகங்களைப்
புரிந்து கொள்ளும்போது, அமெரிக்க நிறுவனங்கள், டிரம்பின் பாதுகாப்புக்
கொள்கையை மறுக்கத் தொடங்கிவிடும்.

இதன் தொடர்பாக இருக்கக்கூடிய இன்னொரு பிரச்னை,
குடியேற்றம் தொடர்பானது. குறிப்பாக இந்தியாவிலிருந்து வேலைக்குப்
போகும் இளைஞர்களின் கனவுகள் டிரம்ப்பால் சிதைந்து விடலாம் என்ற
அச்சம் இந்தியாவில் எழுப்பப்பட்டுள்ளது.

ஆனால், டிரம்ப் – சப்ளை மற்றும் மலிவான விலையில் கிடைக்கும்
மூளை உழைப்பு ஆகியவற்றை கணக்கில் எடுத்துக் கொள்ளும் போது,
இந்தியர்களுக்கான குடியேற்ற விசா பிரச்னை ஒரு பொருட்டாக இருக்காது.
இன்றைய நிலையே தொடர வாய்ப்புண்டு.

இந்தியர்களைவிட பிற நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில்
குடியேற முனைவதுதான் டிரம்புக்குப் பெரிய பிரச்னை. அதனால் ஏற்படும்
சிக்கல்களும் ஆபத்துகளும்தான் அவரது கவனத்தைக் கவர்ந்தவை.

இந்தியர்களுக்குப் பிரச்னை ஏதும் இராது என்பதே ஒருசில நிபுணர்களின்
கருத்து.

வேறு முனையில் இருந்து பிரச்னைகள் தோன்றக் கூடும்.
உதாரணமாக, அமெரிக்காவில் வரிகளைக் குறைத்து பாதுகாப்புத்துறை
முதலீடுகளை அதிகரிப்பேன் என்று தெரிவித்தார் டிரம்ப்.

இதைச் செய்வதற்கு அரசின் கஜானாவைத்தான் அவர் பயன்படுத்தவேண்டும்.
அதன்மூலம் அமெரிக்காவின் கடன் அதிகரி்கும். தொடர்ச்சியாக டாலரின்
மதிப்பு சரியலாம். பொருளாதாரத் தேக்கம் கூட ஏற்படலாம். இதனால்,
இந்தியாவிலும் இதன் பாதுகாப்புகள் தொடர்ந்து இங்கே வரக்கூடிய வெளிநாட்டு
முதலீடுகளின் அளவு குறைந்து போகலாம்.

இது இந்தியாவுக்கு மட்டுமல்ல, வளரும் நாடுகள் அனைவருக்குமே ஏற்படக்கூடிய
பயம்.

இன்னொரு முக்கிய பிரச்னை, பயங்கரவாதத்தின் மீதான அமெரிக்க
தொடுத்துவரும் போர். இதில் சர்வதேச நாடுகளை, குறிப்பாக இந்தியாவையும்
அமெரிக்கா இணைத்துக் கொள்ள விருப்பலாம். கருத்தளவில் மட்டுமல்லாம்,
படைகளை ஒருங்கிணைக்கவும் இந்தியாவை அமெரிக்கா வற்புறுத்துமானால்,
இந்தியாவுக்கு பலமுனைகளில் சிக்கல்.

முக்கியமானது, பொருளாதாரம், இரண்டு, கருத்து ரீதியாகவே நாம் இத்தகைய
போருக்கு முனைப்புக் காட்டுவது தேவைதானா என்ற கேள்வி.

அடுத்தது, இப்போரானது யார்மீது தொடுக்கப்பட வேண்டும்?
அதன் பின்விளைகவுளச் சந்திக்க இந்தியா ஆயத்தமாக இருக்கிறதா என்பதும்
கேள்விக்குறியே.

ஆனால், ஒரு விஷயத்தில் இந்தியா மகிழ்ச்சியடையலாம்.
இப்போதைய ஒபாமா அரசைப் போல் இல்லாமல், டிரம்ப் பாகிஸ்தான்
விஷயத்தில் மிகத் தெளிவாக இருக்கிறார். பல இடங்களில், பாகிஸ்தான்
மீதுள்ள வெறுப்பை டிரம்ப் வெளிப்படுத்தி இருக்கிறார். அந்நாட்டு நேர்மை பற்றி
அவருக்குச் சந்தேகங்களுண்டு.

ஒரு பேட்டியில் இந்தியா பாகிஸ்தானுக்கு வைக்கப்படும் ஒரு செக் என்றும்
குறிப்பிட்டுள்ளார். இந்தியாவையும் துணைக்கு அழைத்துக் கொள்ள வேண்டும்.
அவர்களிமட் சொந்தமாக அணு ஆயுதங்கள் உண்டு. பலமாக ராணுவம் உண்டு.
அவர்கள்தான் பாகிஸ்தானுக்க சரியான கடை என்றும் பேசினார்.

பாகிஸ்தான் மீதுள்ள அவரது அவநம்பிக்கை, இந்தியாவுக்கச் சாதகமாக
அமையும்.
இந்திய ராணுவத்துக்குத் தேவையான உதவிகளையும் ராணுவத் தொழில்
நுட்பங்களையும் அமெரிக்கா வழங்க, டிரம்ப் உதவக்கூடும்.
மேலும், சீனாவுக்க எதிராக அமெரிக்கா வலுவாக நிற்க வேண்டும்.
உயரவேண்டும் என்ற தணியாத தாகம் உடையவர் டிரம்ப். இதில் சீனாவுக்கு
அருகில் உள்ள நாடான இந்தியாவையும் அணிசேர்த்தக் கொண்டு, தம்முடைய
முயற்சியைத் தொடர வாய்ப்புண்டு.

வெற்றபெற்ற பின்னர் டிரம்ப் சொன் விஷயங்களில் முக்கியமானது இது:
அமெரிக்காவின் முன்னுரிமைகளை முதன்மைப்படுத்த விரும்பும் நான்,
அனைத்து மக்களோடும் நாடுகளோடும் நியாயமாக நடந்து கொள்ளவே
விரும்புகிறேன். அவர்களோடு இணையக்கூடிய பொதுவான புள்ளிகளைத்
தேடுவேன். விரோதத்தை அல்ல, ஒருங்கிணைப்பை விரும்புவேன்,
மோதலை அல்ல.

இதைக் கடைசிவரை காப்பாற்றினால் நிச்சயம், டொனால்ட் டிரம்ப்
உலக நாயகன் ஆவது நிச்சயம்.

—————————————

– ஆர். வெங்கடேஷ்
கல்கி

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: