திருப்பதியில் விரைவாக தரிசனம் செய்ய 3 வரிசை

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் விரைவாக சுவாமி தரிசனம் செய்ய 3 சிறப்பு வரிசைகள் அமல்படுத்தப்படும் என்று செயல் அலுவலர் சாம்பசிவராவ் தெரிவித்தார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய உள்நாடு, வெளிநாடுகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் ஜெயபேரி, விஜயபேரி, துவாரபாலகர்கள் அருகே பக்தர்கள் வரும்போது, சுவாமியை ஒரு நிமிடம் கூட தரிசனம் செய்ய விடாமல், அங்கு பணியில் இருக்கும் ஊழியர்கள், ஸ்ரீவாரி சேவகர்கள் இழுத்து தள்ளிவிடுகிறார்கள் என்று பக்தர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ததாக கணக்குக் காட்ட இவ்வாறு செய்யப் படுவதாக பக்தர்கள் புகார் கூறினர்.

இந்நிலையில் கோயிலின் உட்புறம் வெள்ளிக்கதவு முதல் தங்கக்கதவு வரை உள்ள பகுதிகளில் தள்ளுமுள்ளு ஏற்படுவது வழக்கமாக இருக்கிறது. இதனை ஒவ்வொரு மாதமும் டயல் யுவர் இஓ என்ற எண்ணிற்கு பக்தர்கள் புகார் தெரிவித்து வந்தனர். இதனால் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு ஏற்படும் சிரமங்களை குறைக்க புதிய திட்டம் சோதனை ஓட்டமாக நடத்தப்படுகிறது. இதுகுறித்து தலைமை செயலர் சாம்பசிவ ராவ் கூறியதாவது: கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு செயல் அலுவலராக இருந்த எம்.ஜி.கோபால், பக்தர்கள் சிரமம் இல்லாமல் சுவாமி தரிசனம் செய்ய ஏதுவாக தங்கக்கதவு முதல் துவாரபாலகர்கள் வரை 3 வரிசை முறை திட்டத்தை அமல்படுத்தினார். 12  இன்ச், 6 இன்ச் மற்றும் தரைதளம் என 3 விதமான உயரத்தில் வரிசை அமைக்கப்பட்டது.

இதனால் பக்தர்கள் ஒருவரை ஒருவர் மறைக்காமல் சுவாமி தரிசனம் செய்தனர். இத்திட்டம் பக்தர்கள் இடையே பெரிதும் வரவேற்கப்பட்டது. தற்போது, வெள்ளிக்கதவு முதல் தங்கக்கதவு செல்லும் வரை 3 வரிசைகள் அமைத்து இன்று (நேற்று) சோதனைமுறை திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இது குறித்து பக்தர்களின் கருத்தினை கேட்டு, அவர்கள் கூறும் ஆலோசனைகளுக்கு ஏற்ப மாற்றம் செய்து பக்தர்கள் எளிதில் சுவாமி தரிசனம் செய்ய முயற்சி எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

தினகரன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: