கார்த்திகை மாத சிறப்பு

 

தமிழ் மாதங்களில் கார்த்திகை மன உறுதியை தரும் என்பது ஐதீகம். திருவண்ணாமலை மகாதீபம், கார்த்திகை பெளர்ணமி என விஷேசங்கள் நிறைந்தது கார்த்திகை மாதம். கார்த்திகை மாதத்திற்குரிய மேலும் பல சிறப்புகளை தெரிந்து கொள்வோம்.

தமிழில் பாகுலம் என்றால் கார்த்திகை மாதத்தைக்
குறிக்கும். சூரியன் விருச்சிக இராசிக்குள் புகுந்து
அங்கே பயணம் செய்யும் காலமான
29 நாள், 30 நாடி அல்லது நாழிகை, 24 விநாடிஅளவே
கார்த்திகை மாதமாகும்.

நம் தமிழ்நாட்டில் கார்மேகம் சோணைமழை பொழியும்
மாதம் கார்த்திகை மாதம்.

கார் என்றும், கார்த்திகை என்றும் வழங்கப்படும் காந்தள்
பூமிகுதியாக மலரும் காலம் கார்த்திகை மாதம்.

கார்த்திகை எனப்படும் விண்மீன் கூட்டம் கீழ்வானில்
மாலையில் தோன்றும் மாதம் கார்த்திகை மாதம்.

கார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும்
சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் தமிழர்கள் தமது இல்லங்களிலும்
கோயில்களிலும் பிரகாசமான தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக்
கொண்டாடும் ஒரு தீபத் திருநாள் ஆகும்.

திருக்கார்த்திகையை அங்கி, அளக்கர், அளகு, அறுவாய், ஆரல்,
இறால், எரிநாள், நாவிதன் என்றும் அழைப்பதுண்டு.

மகாவிஷ்ணு, பிரம்மா இருவருக்கும் ஜோதிப் பிழம்பாய்,
சிவபெருமான் காட்சி அளித்த நாள் கார்த்திகை பௌர்ணமி!

கடும் தவம் மேற்கொண்ட அன்னை பார்வதிதேவி, கார்த்திகை மாத,
கார்த்திகை நட்சத்திரம் கூடிய பௌர்ணமி நாளில்தான் இறைவனது
இடப் பாகத்தைப் பெற்றாள்.

அப்படி, ஈசன் அர்த்தநாரீஸ்வரராக காட்சி தந்த தலம்
திருவண்ணாமலை என்கிறது அருணாசல புராணம்.


தன்னைப் பிரிந்த திருமகளுடன் மீண்டும் சேருவதற்காக
மகாவிஷ்ணு தவம் மேற்கொண்டு, சிவபெருமானது அருளைப்
பெற்ற திருத்தலம் ஸ்ரீவாஞ்சியம்.

இங்குள்ள குப்த கங்கை தீர்த்தத்தில் நடைபெறும் கார்த்திகை
ஞாயிறு நீராடல் உற்ஸவம் மிகவும் பிரசித்தி பெற்றது.

கார்த்திகை மாத ஞாயிற்றுக் கிழமைகளில், அதிகாலை
5 முதல் 6 மணிக்குள் சிவபெருமானும் பார்வதிதேவியும் அஸ்திர
தேவரோடு பிராகார வலம் வந்து, குப்த கங்கையின் கிழக்குக் கரையில்
ஆசி வழங்கி அருளுகின்றனர்.

கார்த்திகை மாதத்தின் ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த குப்த
கங்கையில் நீராடினால் பிரம்மஹத்தி தோஷம், கள் உண்ட பாவம்,
திருடுவதால் வரும் பாவம் மற்றும் மனச் சஞ்சலத்தால் ஏற்பட்ட பாவங்கள்
ஆகியவை நீங்கி விடும் என்று பிரும்மாண்ட புராணம் கூறுகிறது.

கார்த்திகை மாத அமாவாசை அன்றுதான் திருவிசநல்லூரில்…
ஸ்ரீதர ஐயாவாள் திருமடத்தில் உள்ள கிணற்றில் கங்கா தேவி
பிரவாகித்தாள். இன்றைக்கும் இந்தக் கிணற்றில் கங்கை
பிரவகிப்பதாக நம்பிக்கை. இதில் ஏராளமானோர் நீராடுவர்.

ஜோதி வடிவாய் தோன்றிய சொக்கநாதப் பெருமானை நினைவு கூர்ந்தே
சிவாலயங்களில் சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது.

—————————————————
– பரணி

விகடன்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: