நான்தான் எப்போதுமே ‘டாப்பு’: வடிவேலு ருசிகரம்

kathi_sandai2

2011 – தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டதன் விளைவு வடிவேலுவுக்குப் படங்கள் இல்லாமல் போனது. அந்தத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது மட்டும் காரணமல்ல, வடிவேலுவின் சம்பளமும் முக்கியக் காரணம் என்று சொல்லப்பட்டது. அவர் கேட்கும் சம்பளத்தை சின்ன படங்களை எடுப்பவர்களால் கொடுக்கமுடியாது, பெரிய கதாநாயகர்கள் படங்களில் அவரை நடிக்க வைக்க யாரும் விரும்பவில்லை. இதனால் படங்கள் இல்லாமலே இருந்தார். மணிக் கணக்கில் கால்ஷீட் கொடுத்து நடித்தவர், சுமார் ஐந்து வருடங்கள் பட வாய்ப்புகளே இல்லாமல் இருந்தார். வம்படியாக கதாநாயகனாக நடித்த படங்களும் கை கொடுக்காத நிலையில், தற்போது பழைய படி காமெடி கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார்.

இதனால் பல ஆண்டுகளுக்குப் பின் அவர் நடிக்கும் “கத்திச் சண்டை’ படத்துக்கு ஏக எதிர்பார்ப்பு.  விஷால், தமன்னா, சூரி உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்தை மெட்ராஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. சுராஜ் எழுதி இயக்குகிறார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் பேசிய வடிவேலுவின் பேச்சு அப்படியே அவரது பாணியில் இதோ…
“எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. ரொம்ப பேர் சொன்னாங்க, ரொம்ப பேர் கேப் விட்டு, இப்ப வந்து இருக்கீங்க. நீண்ட இடைவேளைக்குப் பிறகு இந்தப் படம் நடிக்கறீங்கன்னு சொன்னாங்க. சத்தியமா, எனக்கு கேப்பே கிடையாது. எனக்கு கேப்பும் கிடையாது. ஆப்பும் கிடையாது. எப்பவுமே இந்த வடிவேலு டாப்பு தான்.
வாட்ஸ்}அப், அரசியல், பேப்பர்னு எல்லாத்துலையும் நான் பயன்படுத்தின வசனம் தான் வருது. 24 மணி நேரமும் சினிமா பத்திதான் நினைச்சுக்கிட்டு இருப்பேன். கத்திச் சண்டை படத்துல நடிச்சது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.

கத்திச் சண்டை படத்துல கத்தி சண்டையும் கிடையாது, கத்திப் பேசுற சண்டையும் கிடையாது, இது ஒரு புத்திச் சண்டை. படத்துல எனக்கு சைக்யாட்ரிக் டாக்டர் கதாப்பாத்திரம்னு இயக்குநர் சுராஜ் சொன்னார். “டுபாக்கூர் டாக்டரான்னு” கேட்டேன். இல்ல, உண்மையான டாக்டர் தான், ஆனா டுபாக்கூர்னு சொன்னார். கதைய ஃபோன்லயே ஐந்து நிமிடம் சொன்னார். விஷாலிடமும் பேசினேன். வாய்ப்பு இல்லாம நான் படங்களில் நடிக்காம இல்லை. நிறைய கதை கேட்பேன். எதுவும் பிடிக்கல. கத்திசண்டை படம் ஓர் அற்புதமான ஸ்கிரீன் பிளே. நான் விஷால் கூட நடிச்ச முதல் படமான “திமிரு’ சூப்பர் ஹிட். இரண்டாவது படமான நடிகர் சங்க கட்டடத்த காணோம் சூப்பர் டூப்பர் ஹிட் தான். அதே மாதிரி, இந்தப் படமும், பெரிய ஹிட் அடிக்கும்.
நான் எப்பவுமே மனுஷங்ககிட்ட இருந்துதான் காமெடி காட்சிகளுக்கு விஷயம் எடுப்பேன். ஒரு நாள் இப்படித்தான் ரோட்டுல ஒருத்தர் மயங்கிக் கிடந்தார். பாவமேன்னு போய் எழுப்பினா, நான் போதைல படுத்து இருந்தேன்னு அடிக்க வந்துட்டார். இதத்தான் படத்துலயும் காட்சியா வச்சோம்.

கொஞ்ச நாள் முன்னாடி என்னோட பாட்டி இறந்து போயிட்டாங்க. அவங்கள பார்க்க, சில மாசம் முன்னாடி ஊருக்கு போயிருந்தேன். எதுலப்பா வந்தேன்னு பாட்டி கேட்டாங்க. பிளைட்ல 4000 ரூபாய் கொடுத்து அரை மணி நேரத்துல வந்தேன்னு சொன்னதும், திட்ட ஆரம்பிச்சுட்டாங்க. ரயில்ல 150 ரூபாய்க்கு, ராத்திரி பூரா கூட்டிட்டு வருவானே, இவனுக அரை மணி நேரத்துல கூட்டிட்டு வந்து உன்னைய ஏமாத்தீட்டாங்களேடான்னு திட்ட ஆரம்பிச்சுட்டாங்க. அதுலயும் ஒரு லாஜிக் இருக்கத்தான் செய்யுது” என நகைச்சுவையாக பேசி முடித்தார் வடிவேலு.

மகளிர் மணி

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: