சபாஷ் நாயுடு படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்கும்…

Image result for சபாஷ் நாயுடு

* “சபாஷ் நாயுடு’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்து வந்த
நிலையில், தனது அலுவலக மாடியிலிருந்து தவறி விழுந்து
விபத்துக்குள்ளானார் கமல். கால் எலும்பு முறிவுக்கு அறுவை சிகிச்சை
முடிந்து ஓய்வெடுத்து வருகிறார்.

பூரணமாக குணமாகி வந்ததையடுத்து அக்டோபர் மாதம் முதல் படத்தின்
இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட
நிலையில், நவம்பர் மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்க
தீர்மானிக்கப்பட்டது.

படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடிக்கும் அளவுக்கு கமல் முழு அளவில்
குணம் அடையவில்லை. எலும்பில் அறுவை சிகிச்சை என்பதால்,
பூரண குணத்துக்கு இன்னும் சில வாரங்கள் ஆகலாம் என மருத்துவர்கள்
அறிவுறுத்தியுள்ளனர்.

இதனால் டிசம்பர் மாத மத்தியில் படப்பிடிப்பு நடத்த ஆலோசிக்கப்பட்டது.
தற்போது அந்த திட்டத்திலும் மாற்றம் நிகழ்ந்துள்ளது. படத்தில்
ஏற்றுள்ள பல்ராம் நாயுடு கதாபாத்திர கெட்-அப்புக்காக, மேக்கப்
கலைஞர்கள் அமெரிக்காவிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர்.

டிசம்பரில் கிறிஸ்துமஸ் விழாவுக்காக அவர்கள் அமெரிக்காவில் இருக்க
வேண்டிய நிலை இருப்பதால், மேக்கப் பிரச்னை எழுந்தது. இதையடுத்து
அடுத்த ஆண்டு ஜனவரியில் படப்பிடிப்பைத் தொடங்க முடிவு செய்யப்
பட்டுள்ளது.

———————————————

-ஜி.அசோக்
திரைக்கதிர்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: