அதிசயக் குழந்தை; சவப்பெட்டியில் பிறந்தது…

ஷெல்பியின் தாயார் ஜெனிபர். ஷெல்பி சிசுவாக தாய்
வயிற்றில் இருந்த போதே ஜெனிபர் மிகுந்த கவனத்தோடு
சிகிச்சைகளை மேற்கொண்டு வந்தார்.

அவருக்கு நன்றாகக் கார் ஓட்டத் தெரியும் நிறைமாத
கர்ப்பிணியாக இருந்த அவர் அன்று வழக்கமான
பரிசோதனைக்காக மருத்துவமனைக்குத் தானே காரை
ஓட்டிக் கொண்டு சென்றார்.

சாலையில் போய்க் கொண்டிருந்தபோது திடீரென்று கார்
கட்டுப்பாட்டை இழந்தது. கார் தாறுமாறாக ஓடியது.

என்ன செய்வது என்று ஜெனிபர் யோசிப்பதற்குள் கார்
மரத்தில் பலமாக மோதிவிட்டது. அவரது தலையில் பலத்த
காயம், ரத்த வௌ்ளத்தில் கிடந்த அவரை, மருத்துவமனையில்
சேர்ந்தார்கள். டாக்டர்களின் பெரும் போராட்டத்திற்குப் பின்
ஜெனிபர் உயிரிழந்தார்.

தாய் இறந்து விட்டால் வயிற்றில் இருக்கும் குழந்தையும் இறந்து
விடும். அதனால் மருத்துவ நிபுணர்கள் தாயையும், வயிற்றுச்
சிசுவையும் பரிசோதித்தார்கள். பல கட்ட சோதனைகளுக்கு
பிறகு இருவரும் இறந்து விட்டதாக சான்றிதழ் அளித்தார்கள்.

ஜெனிபரின் உடல் அன்றே சவக்கிடங்கில் கொண்டு வைக்கப்
பட்டது. மறுநாள் உடல் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
அப்போதே 24 மணி நேரம் கழிந்து விட்டது. அதன் பிறகு
உறவினர்கள் பார்வையிட்டு மரியாதை செலுத்தினர்.

முறைப்படி சடங்குகள் செய்யப்பட்டு சவப்பெட்டியில் உடல்
வைக்கப்பட்டது. உறவினர்கள் கலைந்து சென்றனர்.

சவப்பெட்டி அடக்கம் செய்யப்படும் இடத்திற்கு எடுத்துச்
செல்லப்பட்டது. தயார் நிலையில் இருந்த குழியில் இறக்கப்பட்டது
அப்போது எங்கிருந்தோ ஒரு அழுகுரல் கேட்டது, குழந்தையின்
அழுகுரல் என்பதால் எல்லோரும் பதற்றத்தோடு தேட,
அது ஜெனிபரின் சவப்பெட்டியில் இருந்து வந்தது. தெரியவர,
சுற்றி நின்றவர்கள் ஒரு வித பீதியில் உறைந்தனர்.

கல்லறைத் தேட்ட மேற்பார்வையாளருக்குத் தகவல் பறந்தது.
அவர் வந்து விசாரித்தபோது, ‘இப்படி இதுவரை நடந்ததில்லை.
பெட்டிக்குள் இருந்து அழுகுரல் வருகிறது’ என்கிறார்கள்.

அவர் உடனே சவப்பெட்டியைத் திறக்க சொல்ல, பெட்டி மேலே
தூக்கப்பட்டு, மென்மையாக உடைத்துத் திறக்கப்பட்டது.

அங்கு அவர்களுக்கு அதிர்ச்சியும், ஆச்சர்யமும் காத்திருநதது.
இறந்த தாயின் உடலில் இருந்து குழந்தை பிறந்து கிடந்து,
அழுது கொண்டிருந்தது.

உடனடியாக டாக்டர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் நவீன
ஆம்புலன்சில் வநதிறங்கினார்கள். இறந்த தாய் உடலில் இருந்து
சேய் பிரிக்கப்பட்டு, மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

இதைக் கேள்விப்பட்ட ஜெனிபரின் கணவரும், உறவினர்களும்
கொதித்துப் போனர்கள். சரியாகக் கவனிக்காமல் இறந்துவிட்டதாக
அறிவித்ததற்காக மருத்துவமர்கள் மீது வழக்கு போடப்போவதாக
கூறினார்கள்.

ஆனால் மருத்துவர்கள் எல்லாமே முறைப்படி நடந்ததாகக்
கூறினார்கள்.

தலைமை மருத்துவர் ‘நான் 22 வருடங்களாக இந்தத் துறையில்
இருக்கிறேன். இதுபோன்ற அதிசயத்தைக் கண்டதில்லை.
நான் ஜெனிபரையும் வயிற்றில் இருந்த குழந்தையையும்
முழுமையாகப் பரிசோதித்தேன்.

தாய், சேயின் உடல் முழுமையாகச் செயலிழந்து எந்தத் துடிப்பும்
இல்லை என்பதை உறுதி செய்து கொண்ட பின்புதான் இருவரும்
இறந்து விட்டதாக அறிவித்தேன். மேலும் சில மருத்துவர்களும்
பரிசோதித்துப் பார்த்து விட்டுத் தான் கையொப்பமிட்டார்கள்.
இது எங்கள் அறியாமையால் நடந்தது அல்ல. இயற்கையின்
அதிசயமாக நடந்திருக்கிறது.

நாங்கள் கவனக்குறைவாக இதைச் செய்திருந்தால் கூட இறந்து
போன தாயின் வயிற்றில் குழந்தையால் உயிரோடு இருந்திருக்க
முடியாது. இறந்து போன தாயால் குழந்தையைத் தன் வயிற்றில்
இருந்து வௌியேற்றியிருக்க முடியாது. பெட்டிக்குள் அடைக்கப்பட்ட
குழந்தைக்குச் சுவாசமே கிடைத்திருக்கவும் செய்யாது.

ஜெனிபர் விஷயத்தில் நடந்தது அனைத்துமே இயற்கை அதிசயம்’
என்றார்.

டாக்டர்களை நோக்கி ஜெனிபர் குடும்பத்தினர் கேள்விகள் எழுப்ப,
டாக்டர்கள் இயற்கையை நோக்கிக் கேள்வி எழுப்ப, யாருடைய
கேள்விக்கும் எங்கிருந்தும் விடை கிடைக்கவில்லை.

தாயின் மூலமாகத் தான் குழந்தை சுவாசிக்கிறது. தாய் இறந்து
பலமணி நேரமாக உடல் சவக்கிடக்கில் இருந்துள்ளது.
பின்பு சடங்குகள் நடத்தப்பட்டு, உடல் பெட்டிக்குள் அடைக்கப்
பட்டிருக்கிறது. காற்று புகாமல் ஆக்கப்பட்டு குழிக்குள்ளும்
இறக்கப்பட்டிருக்கிறது. இத்தனை மணி நேரம் எப்படி ஒரு
குழந்தையால் உயிர்பிழைத்து வாழ்ந்திருக்க முடியும்?

கேள்விகள் கேள்விகளாகவே இருக்கின்றன. அவற்றுக்கெல்லாம்
ஒரே பதிலா ஷெல்பி தன் தந்தையோடு வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

நன்றாகப் படிக்கிறாள்… எதிர்காலத்தில் மருத்துவர் ஆவேன்
என்கிறாள். ஆகட்டும், அவளுக்காவது பதில் கிடைக்கிறதா என்று
பார்ப்போம்.

——————————————–
-கலைமகள்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: