குடியரசு தினம் என்றால் என்ன?

நமது நாட்டுக்கு எப்போது சுதந்திரம் வந்தது என்று கேட்டால்
சின்னக் குழந்தை கூட விடை சொல்லிவிடும்.

ஆனால், குடியரசு தினம் பற்றிக் கேட்டால் பல பெரியவர்களே
சரியாகப் பதில் சொல்ல இயலாமல் விழிப்பர்.

நமது மன்னர்கள் ஒன்றுமையாய் இல்லாமல் இந்தியாவைச்
சிறு சிறு மாநிலங்களாய்ப் பிரித்து ஆண்டதால்தான்,
ஆங்கிலேயர் இந்த ஒற்றுமையின்மையைக் காரணம் வைத்து
உள்ளே நுழைந்தனர்.

இந்த நிலை திரும்பவும் வராதிருக்க நமது தியாகிகளின்
வீர வரலாற்றினைக் கூறி இளைய தலைமுறைகளை நாட்டுப்
பற்று உள்ளவர்களாக வளர்க்க வேண்டியது பெற்றோர்களின்
கடமையும் ஆகும்.

முந்நூறு வருடங்கள் பிரிட்டீஷ்காரர்களிடம் நாம் அடிமைகளாய்
இருந்தோம். அந்த முந்நூறு வருடங்களுக்கு முன்பு நம் நாடு
எப்படி இருந்தது? அப்போது மன்னர்கள் பலர் ஆண்டனர்.

மக்களுக்குச் சுதந்திரம் பற்றி எந்த விழிப்புணர்வும் வரவில்லை.
மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே என்று வாழ்ந்தனர்.

மன்னனின் ஆட்சி என்பது முடியாட்சி. அவன் வைத்ததே சட்டம்.
இதில் மக்கள் சுயமாய் சிந்திக்க, சுதந்திரம் பற்றி நினைக்கவும்
வழி கிடையாது.

மன்னனின் வாரிசுகள் அடுத்து அரியணை ஏறுவர்.
அவர்களின் கொடுங்கோலாட்சியை எதிர்க்கும் சிலரில் வீரமும்,
துணிவும் உள்ளவன் எப்போதாவது ஆட்சியைக் கைப்பற்றுவது
உண்டு.

குடியரசு என்பதற்கு நேரடிப் பொருள் குடிமக்களின் அரசு.
அதாவது மக்களாட்சி. மக்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தேர்தல்
மூலம் தங்களுடைய தலைவனைத் தேர்ந்தெடுத்து அவர்கள்
ஆட்சி நடத்தும் நாடுதான் குடியரசுநாடு.

மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் எப்படி ஆட்சி செய்ய
வேண்டும் என்பதை நிர்ணயிப்பது தான் அரசியல் அமைப்புச்
சட்டம்.

மேதைகள் பலர் சேர்ந்து உருவாக்கிய நமது அரசியல் சட்டத்தை
ஏற்றுக் கொண்ட நாள் 1950 ஜனவரி 26.

சுதந்திர தினத்தை விட, குடியரசு தினம்தான் முக்கியமானது.
ஏனென்றால் மக்களின் விருப்பதற்கு ஏற்ப தங்கள் தலைவரைத்
தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். சரியான ஆட்சி இல்லையெனில்
தேர்ந்தெடுத்தவரை நீக்கிவிட்டு வேறொரு நல்ல தலைவரை
தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

உண்மையான குடிமக்கள்!

குடியரசு தினம்… இந்நாளை கொண்டாடும் வேளையில், நம்மில்
எத்தனை பேர் உண்மையான குடிமக்களாக இருக்கிறோம்
என்பதை ஒரு கணம் எண்ணிப்பார்க்க வேண்டும்.

நாட்டில் சுமார் 60 முதல் 70 சதவிகிதம் வரையிலான மக்களே
உண்மையான குடிமக்களாக இருக்கின்றனர் என்பதை ஏற்றுக்
கொண்டே ஆகவேண்டும். காரணம், இவர்கள் மட்டுமே தங்களது
வாக்குகளைத் தேர்தல்களின் பதிவு செய்கின்றனர்.

ஏனையோர் அந்த நாளை விடுமுறையாக கருதி உல்லாசமாக
கழிப்பதிலேயே நாட்டம் காட்டுகின்றனர்.

தேர்தல்களை எவரெல்லாம் உதாசீனப்படுத்துகிறார்கள் என்று
பார்ப்போமானால், கல்வியறவு கிடைக்கப் பெறாத, வறுமைக்
கோட்டுக்கும் கீழேயுள்ள ஏழைகள் அல்ல;

மாறாக, கற்றறிந்த சான்றோர் என்று பேச்சளவில் சொல்லிக்
கொள்ளும் பணக்கார வர்க்கத்தினரே என்பது மிகவும்
வேதனையான விஷயம்.

இனி அப்படிச் செய்யாமல் நம் கடமைகளைச் சரிவரச்
செய்வோம். ­
ஜெய்ஹிந்த்!

—————————————-
நன்றி சிறுவர் மலர்-20-1-2012
***

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: