வருகிறாய் தொடுகிறாய் எனை வெந்நீர் போல்..

 

படம்: அன்பே ஆருயிரே
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: ஹரிஹரன், சித்ரா
வரிகள்: வாலி

————————

போ போ போ போ

வருகிறாய் தொடுகிறாய்
என்னை வெந்நீர் போலே சுடுகிறாய்
வருகிறாய் தொடுகிறாய்
என்னை வெந்நீர் போலே சுடுகிறாய்
போ போ என்கிறேன்
போகாமல் நீ நிற்கிறாய்
போ போ என்கிறேன்
போகாமல் நீ நிற்கிறாய்

வருகிறேன் தொடுகிறேன்
நான் பன்னீர் போலே விழுகிறேன்
வருகிறேன் தொடுகிறேன்
நான் பன்னீர் போலே விழுகிறேன்
நீ போ போ என்கிறாய் ஆனால்
பொய் சொல்கிறாய்

போ போ

வர வர தான் அடிக்கடி நெருக்கடி கொடுக்கிறாய்
காதல் கடங்காரி
அடி உலகில் எவளும் உன்னை போல் இல்லையே
அழகிய கொலைக்காரி

குளிர் நிலவினை நெருப்பாய்
நினைக்கிற வெறுப்பாய்
நீ ஒரு அசடனடா
அட உனக்கென உயில் நான்
எழுதிய வயல் தான் நீ இதை அனுபவிடா

ஐயோ அம்மா நீ பொல்லாத ராட்சசி
ஏண்டி என் கற்போடு மோதுகிறாய்
நானா உனை வாவென்று கூவினேன்
நீயை வந்தென்னை ஏன் வாட்டுகிறாய்

உயிர் விடச் சொன்னால் உயிர் விடுகின்றேன்
உனை விடச் சொன்னால் உனை விடமாட்டேன்
இருதிவரைக்கும் இருப்பவன் என்று
உறுதியை தந்து உதறுவதேன்

ஓ தவித்தது போதும் தனிமையில் என்னை
இருக்க விடு என்னை இருக்க விடு
அன்பே இருக்க விடு
(வருகிறாய்..)

விடை கொடுத்தேன் விடு விடு விலகிவிடு
தினம் தினம் எனை ஏன் துறத்துகிறாய்
அடி இதய கதவை இழுத்தே அடைத்தேன்
எதற்கதை தட்டுகிறாய்

வங்க கடற்கரை மணலில்
மடியினில் கிடந்த நாட்களை மறந்தாச்சா
உயிர் காதலை வளர்த்து பேசிய பேச்சு
காத்துல பறந்தாச்சா

ஏதோ ஏதோ நான் எதேதோ பேசினேன்
தூண்டில் நீ போட்டாய் நான் மாட்டினேன்
இன்று நான் விடுதலை அடைந்தவன்
அப்பாடா என் சுமைகளை இறக்கினேன்

தழுவிடும் இமையை தனக்கொரு சுமையை
நினைக்கின்ற விழிதான் கதையிலும் இல்லை
கடலென்று நினைத்து கலக்கின்ற நதிக்கு
உனை இன்றி இனி உறுதுணை இல்லை

ஓ காதல் செய்தேன் நான் காதல் செய்தேன்
மறக்க விடு உன்னை மறக்க விடு
மறக்க விடு அன்பே மறந்து விடு
மறக்க விடு

(வருகிறாய்..)

—————————————

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: