கண்டது, கேட்டது…

கண்டது
• (எடப்பாடி வாழ அங்காளம்மன் கோயில் குங்குமப்
பிரசாதப் பாக்கெட்டினுள் இருந்த ஓர் அட்டையில்)

நதிகளின் நீர் நாடெங்கும் தடைகளும் தாமதமுமின்றி
தபால், இரயில், டெலிபோன் போல இந்தியா முழுவதும்
வலம் வர வேண்டுவோம்.

பி.வேலுசாமி, எடப்பாடி.

—————————————-

• (புதுச்சேரியில் உள்ள ஓர் உணவகத்தின் பெயர்)

குறள் நெறி மாறன்

வானவில் மூர்த்தி, சென்னை-44.

—————————————–

• (சிந்தலக்கரை யாத்திரைத் தலத்தில் அமைந்துள்ள
ஓர் அங்காடியில்)

எந்தப் பொருள் எடுத்தாலும்
பத்து ரூபாய்…
பல்பு, கல்லா தவிர.

ச.ஜான் ரவி, கோவில்பட்டி.

—————————————-

கேட்டது
• (நாகர்பாளையம் சக்தி கார்டனில் இளைஞர்களிருவர்)

“ஏன்டா வாட்ஸ் அப்-ல ஏதாவது ஃபோட்டோ ஷேர்
பண்ணியிருந்தா அதையெல்லாம் படிச்சுப் பார்க்கவே
மாட்டியா?”

“இப்போ அதுக்கு ஏன் டென்ஷன் ஆகுற?”

“குளிர் ஜுரத்துல கஷ்டப்பட்டிருந்தப்போ நான் ஒரு
செல்ஃபி எடுத்து “எக்ஸ்டீரிம்லி பேட் லுக்கிங்’னு
ஸ்டேடஸ் போட்டிருந்தேன். அதுக்குப் போய் லைக்
போட்டு, “கீப் இட் மச்சி’ன்னு கமெண்ட்
பண்ணியிருக்கியே… உனக்குக் கொஞ்சமாவது ம
னசாட்சி இருக்கா? ”

க.சங்கர், நாகர்பாளையம்.

——————————————-

• (ஒரு தெருவில் காய்கறி விற்கும் இரு பாட்டிகள்)

“ஏன்டி ரோட்டு மண்ணெடுத்து உன்னைச் சுத்திப்
போட்டுக்கிறே?”

“உன் வயசில நான் இருப்பேனான்னு ஒரு நாசமாப்
போறவன் என்னைப் பார்த்துச் சொல்லிட்டுப்
போறான்டி”

கே.பிரசன்ன குமார், குடந்தை.

—————————————

• (பக்கத்துவீட்டுக்கு விருந்தினர்கள் வந்த அன்று
அங்குள்ள மாமியார், மருமகள் பேசிக் கொண்டது)

“அத்தை… சட்னி டேஸ்ட்டா இருக்குற மாதிரி
வைச்சுடாதீங்க…
கொஞ்சம் தண்ணியாவே இருக்கட்டும்”

“ஏன் அப்படிச் சொல்றே?”

“டேஸ்ட்டா வைச்சீங்கன்னா வந்திருக்கிறவங்களுக்கு
என்னால தோசை சுட்டுப் போட்டு மாளாது”

அ.கருப்பையா, பொன்னமராவதி.

———————————–

உதிர்ந்த முத்து

அறிமுகமில்லாதவரின் திறமை
பாராட்ட வைக்கிறது…
அருகில் இருப்பவரின் திறமை
பொறாமைப்பட வைக்கிறது.

ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை.

————————————–

லட்சியமும் முட்டையும் ஒன்று…
தவறவிட்டால் உடைந்துவிடும்.

பொ.பாலாஜி, அண்ணாமலைநகர்.

—————————————–

பேல்பூரி, தினமணி கதிர்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: