பெருமழை வருமா?

எனக்கு இன்னொரு முகம் இருக்கு எனக் காட்டிச்
சென்ற கடந்த வருட மழையை காலத்துக்கும் மறக்காது
தமிழகம். சென்னையிலப் செகண்ட் ஃபுளோரில் இருந்து
ஹெலிகாப்டரில் தப்பியவர்கள் எல்லாம் இன்னும் அந்த
அதிர்ச்சியில் இருந்து மீட்டிருக்கக் கூட மாட்டார்கள்.

சாப்பாடு, தண்ணீர், மின்சாரம், மொபைல்கள் முடக்கப்
பட்ட அந்த இரவுகள் கொடுங்கனவு.

மழை கடந்தாண்டை விட அதிகமாக இருக்கும் என
பஞ்சாங்கத்தைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு சில
ஜோதிடர்கள் சொல்வது ‘வாட்ஸ் அப்’பில் வலம் வருவதால்,
இந்தாண்டு மழைக்காலமும் கொஞ்சம் மிரட்சியுடனே
எதிர்நோக்கப்படுகிறது.

என்ன செய்யலாம்? – பார்ப்பதற்கு முன் வானிலை ஆய்வு
மைய இயக்குனர் பாலச்சந்திரன் என்ன சொல்கிறார் எனக்
கேட்டோம்.

வானிலை மையக் கணிப்புங்கிறது கடந்த கால மழைப்
பதிவையும் கால்குலேட் பண்ணிச் சொல்றதுதான். ஆனா
அந்தப் புள்ளி விவரங்கள்ல அப்நார்மல் இருந்தா அது
பத்திப் பிரச்னை இல்லை.

உதாரணத்துக்கு நமக்கு இயல்பா கிடைக்க வேண்டிய
வடகிழக்குப் பருவ மழை 440 மி.மீட்டர்னா. கடந்த காலங்களை
பார்த்தா 400, 410, 420, 450… இப்படித்தான் இருக்கும்.

இந்தப் பெரும்பான்மை புள்ளி விவரம்தான் கரெக்டா இருக்கும்.
திடீர்னு ஒரு வருஷம் அது 700 மி. மீட்டர்னு இருந்தா, அந்த
வருஷமும் அப்படியே இருக்கும்னு இல்லை. வாய்ப்பு ரொம்ப
ரொம்ப கம்மிதான் ஏன்னா இயற்கை அரிதாத்தான்
விசித்திரங்களைச் செய்யும். எங்க கணிப்புப்படி இந்த வருஷம்
இயல்பான அளவுக்கும் கம்மியா பெய்யத்தான் வாய்ப்பிருக்கு
என்கிறார் பாலச்சந்திரன்.

எதற்கும் எச்சரிக்கையாக இருந்தால் நல்லதில்லையா?
சென்னை மாநகராட்சி வட்டாரத்தில் பேசினோம்.

கழிவு நீர்க் கால்வாய் அடைப்புகளை எல்லா இடங்கள்லயும்
சரி பண்ணிட்டாங்க. தண்ணீர் அதிகம் தேங்குகிற இடங்கள்
அடையாளம் காணப்பட்டு அங்கெல்லாம் முன்னெச்சரிக்கை
மாற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கு.

கொசு, நோய்கள்ல இருந்து தப்பிக்க என்ன செய்யணும்கிறதை
விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலமா சுகாதாரத் துறை ஆட்கள்
சொல்லிட்டு வர்றாங்க. அரசின் எல்லாத் துறைகளையும் தயார்
நிலையில் இருக்கச் சொல்லி உத்தரவுகள் ஏற்கெனவே வந்தாச்சு
என மாநகராட்சி வட்டாரத்தில் சொல்கிறார்கள்.

கீழ்க்கண்ட எச்சரிக்கை டிப்ஸ்களை வழங்குகிறார்கள்.
கள அனுபவம் கொண்ட பேரிடர் மீட்புப் பணி துறையினர்.

* வீட்டில் மழைக் காலத்துக்கு அவசியமான குடை,
ரெயின் கோட், குழந்தைகளுக்கான சளி, இருமல் மருந்துப்
பொருட்கள் இருக்கிறதா என உறுதி செய்து கொள்ள
வேண்டும்.

* மிகவும் முக்கியமான நிகழ்ச்சிகள் தவிர பிற வெளியூர்
பயணங்கள் இருந்தால் இரண்டு மாதங்களுக்கு தள்ளிப்
போடலாம்.

* வீட்டில் கடந்த மழைக்கு ஒழுகின அல்லது தண்ணீர் தேங்கிய
இடங்கள் இருந்தால் அது சரி செய்யப்பட்டு விட்டதா என
பார்த்துக் கொள்ளவும்.

* இரு சக்கர வாகனங்களை சர்வீஸ் செய்து வைத்துக்
கொள்வது அவசியம்.

* அரசு அறிவிக்கும் பல்வேறு துறைகளின் அவசர கால
தொலைபேசி எண்களை சேகரித்துக் குறித்து வைத்துக்
கொள்ளவும்.

* அரிசி, மளிகைச் சாமான்கள் ஸ்டாக் இருக்கும்படி பார்த்துக்
கொள்ள வேண்டும்.

———————————
– அய்யனார்ராஜன்
குமுதம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: