குழந்தைகளிடம் சேமிப்புப் பழக்கத்தை வளர்க்க… டாப் 10 வழிகள்!

சிறு வயதிலேயே குழந்தைகளுக்குச் சேமிப்புப் பழக்கம் என்ற விதையை மனதில் விதைத்தால்தான், அவர்கள் பெரியவர்களாகி சம்பாதிக்கும்போது, மாதம் முடிவதற்கு முன்பே பேலன்ஸ் ‘நில்’ என்றில்லாமல், ‘சேவிங்ஸ் ஃபுல்’ ஆக இருக்கும்’’ என்கிறார், மயிலாடுதுறையைச் சேர்ந்த சர்வதேச மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளர் மற்றும் ‘பேஸ்’ மேலாண்மை நிறுவன இயக்குநர் வெ.ராமன். சேமிப்புப் பழக்கத்தை குழந்தைகளிடம் வளர்க்க சொல்லும் டாப் 10 வழிமுறைகள் இங்கே!

1. சேமிப்புத் திட்டங்கள் பற்றியும், குடும்பத்தில் இப்போது என்ன வகையில் சேமித்து வருகிறோம் என்பதையும் குழந்தைகள் முன்னிலையில் பேசுங்கள். அது, ‘நாமும் சேமிக்கணும்’ என்கிற எண்ணத்தை அவர்களிடம் தூண்டும்.

2. குழந்தைகளிடம் கடைக்குச் சென்று பொருட்கள் வாங்கிவரச் சொல்லும்போது, அவர்கள் ‘கமிஷன்’ கேட்பார்கள். அந்த கமிஷனை அவர்கள் சேர்த்துவைக்க, கையோடு ஒரு உண்டியல் வாங்கித் தாருங்கள். உண்டியல் நிரம்பியவுடன், அஞ்சல் அலுவலகம் அல்லது வங்கியில் அக்கவுன்ட் ஆரம்பித்துக் கொடுத்து, சேமிக்கக் கற்றுத் தாருங்கள். இப்படி சேமித்த பணத்தில் அவர்களுக்கு அவசியத் தேவையான பொருட்களை வாங்கிக்கொள்ள ஊக்கப்படுத்துங்கள்.

3. உண்டியலில் சேமிக்கத் தொடங்கிய சிறிது நாட்களிலேயே ஏதேனும் ஒரு விளையாட்டுப் பொருளைப் பார்த்து, உண்டியலில் சேமித்து வைத்த காசில் அதை வாங்கித்தரச் சொல்லிக் கேட்பது குழந்தைகளின் இயல்பு. அப்போது, ‘தரமான பொருளை பிற்பாடு வாங்கித் தருகிறேன்’ என்று சொல்லி சமாதானப் படுத்துங்கள். பிறகு நீங்கள் சொன்னபடியே தரமான விளையாட்டுப் பொருளை வாங்கிக் கொடுங்கள். இது, பொருட்களைத் தரம் பார்த்து வாங்கும் பழக்கத்தை அவர்களிடம் உருவாக்கும்.

4. ஷாப்பிங் செல்லும்போது, பிள்ளைகளையும் உடன் அழைத்துச் செல்லுங்கள். அநாவசிய, ஆடம்பரப் பொருட்கள் தவிர்த்து, அவசியத் தேவையான பொருட்களை மட்டும் வாங்கக் கற்றுக்கொடுங்கள். கடைக்காரரிடம் பணம் தரும்போது, குழந்தைகளிடம் தந்து தரச்  சொல்லுங்கள். இவையெல்லாம் செலவு, சிக்கனம் பற்றி அவர்களைப் புரிய வைக்கும்.

5. ஒவ்வொரு மாதமும் வீட்டுக்கான பட்ஜெட் போடும்போது, என்னென்ன வாங்கலாம், எதை எல்லாம் தவிர்க்கலாம் என்பதைப் பேசும்போது குழந்தைகளையும் அருகில் வைத்துக் கொள்ளுங்கள்.  அவர்களிடமும் ஐடியா கேளுங்கள். வீட்டு பட்ஜெட்டுக்கு ஆகும் செலவினை அவர்களிடம் விளக்கிச் சொன்னால், அடிக்கடி அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்பதை அவர்களே குறைத்துக்கொள்வார்கள்.

6. என்றைக்காவது ஒருநாள் ஹோட்டலுக்குச் சென்றால் பரவாயில்லை. அடிக்கடி ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லச் சொல்லி அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு, அவர்கள் விரும்பும் உணவை வீட்டில் சமைத்துத் தந்து, அதே உணவை ஹோட்டலில் சாப்பிட்டால்  எவ்வளவு பணம் கூடுதலாகச் செலவாகி இருக்கும் என்கிற கணக்கை பக்குவமாகச் சொல்லுங்கள்.

7. எங்கு செல்வதாக இருந்தாலும் முடிந்தவரை ஆட்டோ அல்லது டாக்ஸியில் செல்வதைவிட பேருந்தில் சென்றால், நிறைய பணம் மிச்சமாகும். கொஞ்சம் வசதிக் குறைவு என்றாலும் சிக்கனமாக இருக்கவேண்டும் என்பதை சிறுவயது முதலே சொல்லிக்கொடுங்கள்.

8. பாக்கெட் மணி கொடுப்பது தவறில்லை. ஆனால், அதில் சில கட்டுப்பாடுகளை விதியுங்கள். ‘இதுதான் ஒரு மாதத்துக்கான பாக்கெட் மணி’ என்று சொல்லிக் கொடுத்து, அதற்குள் செலவைக் கட்டுப்படுத்தச் சொல்லுங்கள்.

9. விலை உயர்ந்த போன், வீடியோ கேம்ஸ், விளையாட்டுப் பொருட்களைக் கேட்கும்போது, அதனால் படிப்பு கெடாதபடி இருக்குமா என்று பாருங்கள். அதை சரியாக பயன்படுத்தும் வயதில் வாங்கித் தந்தால் பிரச்னை இருக்காது.

10. விலை உயர்ந்த எந்தப் பொருளாக இருந்தாலும், குழந்தை கேட்கிறானே என்பதற்காக வாங்கித் தராதீர்கள்.  அது உங்கள் பட்ஜெட்டுக்கு மீறிய செலவு என்பதை புரிய வையுங்கள். வளர்ந்த பின் அவர்கள் ஆடம்பரச் செலவு செய்யாமல் இருக்க இது உதவும்.

ந.விகடன்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: