தலை சிறந்த தத்துவங்கள்

 

 

 1. வாழ்வில் நமக்கு பலமுறை இரண்டாவது வாய்ப்பு கிடைக்கும், சில சமயம் பத்தாவது வாய்ப்புக் கூட கிடைக்கும், வாய்ப்பை இழந்துவிட்டோமென்று யாருமே நம்பிக்கை இழக்க வேண்டாம்.

 

 1. வாழ்வின் இனிமையான பாகம் இனித்தான் வரவிருக்கிறது, எப்போதுமே இனித்தான்.. இது தனது 95 வது பிறந்தநாளில் நீதிபதி சர். எம். மல்லாக் கூறியது.

 

 1. நான் இன்னும் வேலை செய்கிறேன். என் கைகள் கலப்பையிலும் என் முகம் எதிர் காலத்திலும் இருக்கிறது. மாலைநிழல் நீளுகிறது ஆனால் காலை என் இதயத்தில் இருக்கிறது.

 

 1. முன்னேற்றம் என்ற கோடு உங்களுக்கு பின்னால் போய்விடவில்லை அது இன்னமும் உங்களுக்கு முன்னாலேயேகிடக்கிறது கலங்க வேண்டாம்.

 

 1. கவலையோ குழப்பமோ இன்றி ஒவ்வொரு நாளையும் வரவேற்று, தனக்கு விதிக்கப்பட்ட செயல்களை செய்து, சந்தோஷமாக, பயமற்று வாழுங்கள். நல்ல நண்பர்களை உருவாக்குங்கள், நல்ல நினைவுகளை எண்ணி மகிழுங்கள், காலம் மறைவதை புறக்கணியுங்கள், எதிர் காலத்தை மட்டும் பாருங்கள் வாழ்வில் சிறந்தது இனிமேல்தான்வரப்போகிறது.

 

 1. வயதான காலத்தை அரவணைத்து நேசியுங்கள். அதை எப்படி நேசிப்பது என்று உங்களுக்கு தெரிந்தால் அதில்சந்தோஷம் மிதமிஞ்சி இருக்கிறது. மெதுவாக கடந்து செல்லும் வருடங்கள்தான் ஒரு மனித வாழ்வில் மிகஇனிமையானவை. அவை இறுதியை அடைந்துவிட்டாலும் அதன் சந்தோஷங்கள் மாறுவதில்லை.

 

 1. இலையுதிர் காலம் என் தலையில் இருக்கிறது ஆனால் வசந்த காலம் என் இதயத்தில் இருக்கிறது.
 2. வயது என்பது மனதின் தன்மை

உங்கள் கனவுகளை நீங்கள் தொலைத்துவிட்டால்

நம்பிக்கை இழந்து விட்டால்

எதிர் காலத்தை நீங்கள் எதிர்பார்க்காவிட்டால்

உங்கள் இலட்சிய தாகம் அடங்கிவிட்டால்

நீங்கள் வயதானவர்தான்.

ஆனால் வாழ்வில் இருந்து சிநந்ததை நீங்கள் எடுத்து

விளையாட்டாக உங்களால் இருக்க முடிந்தால்

அன்பாக இருந்தால்

எவ்வளவு வருடங்கள் கடந்தாலும்

எத்தனை பிறந்த நாள் போனாலும்

உங்களுக்கு வயதாவதில்லை.

 

 1. சந்தோஷத்தை தேடுபவர்களுக்கு மூன்று முக்கிய தேவைகள் உண்டு. அ. சுய அடையாளம் காணல் ஆ. சுயவழிகாட்டல் இ. சுய வெளிப்பாடு. வாழ்வு நாற்பது வயதில் தொடங்குகிறது சில சமயங்களில் அது அறுபது வயதுக்குப்பிறகுதான் உண்மையாகவே தொடங்குகிறது. ஆகவேதான் ஒவ்வொருவரும் முடி நரைக்கும் காலத்திலாவது தமது சுயவெளிப்பாட்டைக் காட்ட வேண்டும்.

 

 1. நமது புருவங்களில் சுருக்கம் ஏற்படலாம். இதயத்தில் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நமது மனதிற்குவயதாகக் கூடாது.

 

 1. உங்கள் நரை முடி குறித்து வெட்கப்படாதீர்கள் அதை ஒரு கொடிபோல பெருமையாக அணியுங்கள். ஏனென்றால்நீங்கள் அதிர்ஷ்டசாலிகள் இந்த நரைமுடியை பார்க்காமலே பலர் புவியில் இறந்துவிட்டார்கள். இதைப் பார்க்கும்வரைஉங்களுக்கு வாழக் கிடைத்தது எத்தனை சிறப்பு என்று எண்ணுங்கள்.

 

 1. மூளை நன்கு வளர்ந்து மூளையில் உள்ள வெண்ணிற செல்கள் நரை முடியாக வெளியே வருகின்றன அதுபெருமைக்குரியதே.

 

 1. இளமை என்பது வாழ்வின் பாகமல்ல அது ஒரு மனோநிலை. இளமை என்றால் பயத்தை தைரியம் வெற்றிகொள்ளும் மனோநிலை.

 

 1. வருடங்களை கடப்பதால் ஒருவனுக்கு வயதாவதில்லை. தங்கள் இலட்சியங்களை துறப்பதால்தான் ஒருவனுக்குவயதாகிறது.

 

 1. உங்கள் நம்பிக்கையைப் போலவே இளையவராக இருக்கிறீர்கள், சந்தேகத்தைப் போலவே முதியவராகஇருக்கிறீர்கள், தன்னம்பிக்கையைப் போலவே இளைஞராக இருக்கிறீர்கள், பயத்தைப் போலவே முதியவராகஇருக்கிறீர்கள், விசுவாசத்தைப் போலவே இளைஞராக இருக்கிறீர்கள்.

 

 1. முதுமை என்பது எப்போதுமே உங்களை விட 15 வயது அதிகமாக இருப்பது என்று எண்ணிக் கொள்ளுங்கள்.

 

 1. ஒரு மனிதனின் மதிப்பு அவன் வாழ்ந்த வருடங்களின் எண்ணிக்கையாலோ அல்லது செய்த வேலையாலோஅளக்கப்படுவதில்லை. ஒரு மனிதனின் மதிப்பு அவன் உருவாக்கிய நடத்தையால்தான் அளக்கப்படுகிறது.

 

 1. வாழ்வின் அந்திம காலத்தை நம்பிக்கையோடும் சந்தோஷத்தோடும் அணுகுங்கள். வாழ்வின் இறுதியைஆர்வத்தோடு அணுகுங்கள், சோகத்தோடு அல்ல. ஏனெனில் வாழ்வின் இறுதிதான் சிறப்பானது, கடவுளை நம்புங்கள்.

 

 1. உன்னிடம் எந்தத் திறமை இருந்தாலும் முட்டாளிடமிருந்து உன்னைப் பிரிக்கும் தெய்விக பொறியை வரவேற்றுஅதை வளர்த்துக் கொள். ஆனால் உன் வாழ்வின் குறிக்கோளாக உலக வெற்றியை கருதாதே.

 

 1. வழி நீண்டதாகவும், கடினமானதாகவும் இருக்கலாம் ஆனால் போராட்டத்தையும், வலியையும் வரவேற்பாயாக. ஏனெனின் வாழ்வின் வலியில் இருந்துதான் ஞானமும், புரிதலும் வருகின்றன.

 

 1. வலியை கற்றுக்கொள் கணக்கிடாதே..! வேதனையை எதிர் கொள் எதிர்க்காதே.

 

 1. கடவுளின் சரியான திட்டப்படிதான் முழு வாழ்வும் இருக்கிறது. முழுவதும் பார், முழு வடிவமைப்பையும் பார். வாழ்வதும் கற்பதும் எவ்வளவு இனிமை எண்ணிப்பார்.

 

 1. இருப்பது எல்லாமே என்றென்றும் நீடிக்கும் என்று கடந்த காலம் கூறுகிறது. உலகம் மாறும் ஆனால் ஆன்மாவும்கடவுளும் மாறாது. சாம்பலை விட்டுவிடு நெருப்பில் தங்கம்தான் மிஞ்சுகிறது.

 

 1. புயலுக்கு பறவை சாயாமல் சரி செய்வதைப்போல

காலப் புயலில் உன்னை சரி செய்து கொள்

பயத்தை நீக்கு வாழ்க்கைக் கப்பலை நேராக செலுத்து

கப்பலுக்கு ஏற்ற துறைமுகம் அருகே வந்துவிட்டது

ஒவ்வொரு அலையும் சந்தோஷத்தில்….

 

 1. மிகச் சிறந்த மதுவை எதிர் பாருங்கள் அது கடந்த காலத்தில் இல்லை கடவுள் நல்ல மதுவை இறுதியில்தான்வைத்திருப்பார்.

 

 1. வாழ்வை எண்ணத்தாலும் செயலாலும் அளக்க வேண்டும், காலத்தால் அல்ல.

 

 1. உன் தலைவிதி எதுவானாலும் நன்றியுள்ள சந்தோஷமான இதயத்தை கடவுளிடம் திருப்பித்தர தயாராக இரு.

 

 1. உனக்கு வயதாகும் ஆனால் வாழ்வின் துடிப்பை இழந்துவிடாதே.. ஏனெனில் தெருவின் இறுதி வளைவுதான் சிறந்தவளைவு.

 

 1. ஒவ்வொரு வருடமாக வாழ்வை வாழ்..

எதிர் காலத்தை நோக்கி தளராத இதயத்துடன் இரு

இலட்சியத்தை விட்டு விலகாதே

பயணம் கரடு முரடாக அல்லது வழுவழுப்பாக இருக்கட்டும்

நீ மட்டும் சந்தோஷத்தை இழந்துவிடாதே.

 

 1. ஒவ்வொரு பெரிய போராட்டம் அல்லது தோல்வி இவற்றிலிருந்து ஒரு புதிய விடியல், வாழ்வின், உயிரின் மறுபிறப்புதோன்றி முன்னேற்றத்தின் சக்திவாய்ந்த அலை மனிதனை மேலும் மேலும் உயர்த்தியே வருகிறது.

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: