சில நிமிடங்களுக்கு முன்னால் இருங்கள்!

பெரிய மனிதர் வீட்டு திருமணம்; சென்னையில்,
மிகப் பெரிய மண்டபத்தில், வரவேற்பு நிகழ்ச்சி.

கூட்டம் இரவு, 7:30 லிருந்து, 9:30 மணி வரை இருக்கும் எ
ன்று கணித்தேன்.

வரவேற்பு, 6:30க்கு ஆரம்பம் என்று போட்டிருந்தனர்.
6:28க்கெல்லாம் மேடை அருகே இருந்தேன்.

மிகச் சரியாக, மணி, 6:30க்கு ஜோடி, மேடைக்கு வர,
மணமக்களை வாழ்த்தி, 7:00 மணிக்கு உணவு முடித்து,
7:15க்கு வெளியேறினேன்.

தாமதமாக சென்ற என் உறவினர், ஒரு மணி நேரம்,
வரிசையில் நின்றதை சொல்லி புலம்பியதோடு,
சாப்பிடவும் ஏகப்பட்ட தள்ளு முள்ளு; சில உணவு வகைகள்
கிடைக்கவே இல்லை; தாம்பூலப் பைகள் தீர்ந்து விட்டன
என்று சொல்லி வருத்தப்பட்ட போது,
‘அட பரவாயில்லையே… நாம் எடுத்த முடிவு…’ என்று
தோன்றியது.

பல ஊழியர்கள் அறியாத, உணராத, கண்டு கொள்ளாத
உண்மை ஒன்றை, ஒரு முதலாளியின் அல்லது மேலதிகாரியின்
கோணத்தில் சொல்லட்டுமா… இவர்களுக்கு, ஒரு சில நிமிடங்கள்
முன்னதாக வரும் ஊழியர்களை, மிகவும் பிடித்து போகும்!

அலுவலகம், காலை, 9:00 மணி என்றால், ஒன்பதை மறந்து விட
வேண்டும். 8:50 மற்றும் 8:55 தான், நம் இலக்கு என்று ஆக்கி விட
வேண்டும். நேரத்திற்கு, அலுவலகத்திற்குள் நுழையாதவர்களின்
நினைப்பு என்ன தெரியுமா… ‘என்ன, தலையையா சீவிடுவாங்க…’
என்பது தான். மாட்டார்கள்; தலை குடைச்சல் தான் தருவர்.

முன்னதாக நுழைபவர்கள், உரியவர்களின் நெஞ்சில், எளிதில்
நுழைந்து விடுவர்! இதன் மூலம், பின்னால் கிடைக்க கூடிய
சலுகைகள், நம்ப முடியாதவையாக இருக்கும்.

எனவே, எதையும் தலையை சீவி விடுவரோ என்கிற
கோணத்தில் மட்டும் சிந்திக்க கூடாது. இதற்கு மேலே பல உண்டு.

சில நிமிடங்கள், முன்னதாக நுழைவது என்பது, பிறருக்கு நாம்
செய்யும் நன்மை அல்ல; நமக்கு, நாமே செய்து கொள்ளும்
நன்மை. எப்படி என்கிறீர்களா…

சில நிமிட தாமதமென்றாலும், நெஞ்சு பட படக்கும்;
நாடித் துடிப்பு மாறும்; ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.
இவையனைத்தும், இதயத்திற்கு நல்லதல்ல என்கின்றனர்,
மருத்துவர்கள். ரத்த அழுத்தம் என்பது, மன அழுத்தமே!

இது, நமக்கு நாமே, அளித்து கொள்ளும் தண்டனையே தவிர,
வேறு அல்ல.

அது மட்டுமல்ல, போகிற இடத்தில், யார் என்ன சொல்லி
விடுவரோ என்கிற தவிப்பும், நம்மை கேள்வி கேட்கும்
உரிமை உள்ளவர்களை, ‘என்ன சொல்லி சமாளிக்கலாம்…’
என்கிற யோசனையும் வரும்.

மேலும், ‘இம்முறை, நாமும், பதிலுக்கு சூடாக பேசி விடுவது…’
என்கிற தவறான தீர்மானம் வரை, நம் மனம் முடிவு எடுக்கும்.

பொது நிகழ்ச்சி எனில், கூட்ட நெரிசலில் சிக்கும்படி ஆகும்.
உட்கார இடம் கிடைக்காமல் போகும். சில நிமிட முந்தல்களில்
ரயிலில், பேருந்தில், நம் உடமைகளை வைக்க, இடம் இருக்கும்.
தாமதத்தில், வேறு ஒரு குறையும் உள்ளது.

நாம் வந்ததே, உரியவர்கள் மனதில், பதிவாகாமல் போய் விடும்
. ‘வந்தேன்… கூட்டத்துல, உங்களை கவனிக்கல…’ என்று, அவர்கள்
சொல்லும் போது, ‘வராமலேயே எப்படி பொய் சொல்றாரு பாரு…’
என்று, அவர்கள் சந்தேகம் கொள்வதாகவும் நமக்குப் படும்.

சென்னையில், சில பகுதிகளுக்கு காலை, 7:30மணிக்குள்
கிளம்பினால், அரை மணி நேரத்தில் சென்று விட முடியும்.
9:30க்கு புறப்பட்டால், அது, இரண்டு மணி நேர பயணமாகி
விடும். நம்முடைய நேரம், எப்படி அநியாயமாய் பறிக்கப்பட்டு
விட்டது பாருங்கள்!

வாழ்க்கையில், திரும்ப பெற முடியாத, அரிய மூலப் பொருளாம்
நேரத்தை இப்படியா இழப்பது!

இன்னொன்றையும், சொல்ல வேண்டும்…

‘ஐயோ… நேரமாச்சு; தாமதமாகி விட்டது…’ என்கிற துரத்தல்கள்
சாலை விபத்துகளில் முடியவும் வாய்ப்பு உள்ளது. இது தேவையா?

மின் கட்டண, தொலைபேசிக் கட்டண வரிசையில், ரேஷன்
கடைகள் மற்றும் திரையரங்குகளில், சில நிமிடங்கள்
முன்னதாக போய் விட்டால், சில மணி நேரம் மிச்சம்.

எனதன்பு வாசக நெஞ்சங்களே… சில நிமிடங்களை,
முன் முதலீடாக செய்து, பல நிமிடங்களை மிச்சப்படுத்தும்
கலை, மிகச் சிறந்த நேர நிர்வாகக் கலையாகும்.

‘இப்ப தானே குடுத்து முடிச்சேன்!’

‘டிபன் முடிஞ்சது… இன்னும் அரைமணி நேரம் இருங்க;
சாப்பாடே தயாராயிடும்…’ ‘உள் பார்க்கிங்கில் இடமில்லை;
வெளியில நிறுத்திக்கங்க…’

‘இரண்டு நிமிஷத்துக்கு முன், காலியா இருந்தது; இப்ப தான்
, ‘கியூ’ இவ்வளவு பெரிசா, வந்திருச்சு’ போன்ற வாக்கியங்கள்,
பிறர் மூலம், நம் காதுகளில் பாயாதிருக்க, சில நிமிடங்கள்
முன்னதாக செல்லுங்கள்!

———————————–

லேனா தமிழ்வாணன்
வாரமலர்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: