ஒரு புதிய சிந்தனை – அர்த்தமுள்ள இந்து மதம் – பகுதி 2

‘‘எண்ணற்ற மகான்கள் ஆயுள் முழுவதும் இல்லற
வாழ்க்கையை நடத்திக் கொண்டே மகோன்னதமான
பூர்ணத்துவத்தை அடைந்திருக்கின்றனர். பரித்தியாகம்
என்பது மனத்தின் உள்நிலை, அது வஸ்துகளின்
நிலையற்றதும் மாறுபடுவதுமான தன்மையை
உணர்த்துவதோடு அவற்றின்மேல் அநிச்சையை உண்டு
பண்ணும்.

மேலும் நித்தியமானதும், மாறுபாடே இல்லாததுமான
சத்தியத்தின் மேலேயே நோக்கம் நிலைத்து, விருப்பு,
வெறுப்பு என்னும் உணர்ச்சிகளும் அற்றுப் போகும்.
உண்மையான வைராக்கியம் (Renunciation) என்பது
இதுவே.’’

‘‘நமது மனத்தின்கண் இந்தப் பாவம் ஏற்பட்டதும் நமக்குப்
பற்றற்றுப்போகும். கிடைத்த மட்டும் திருப்தியடைந்திருப்போம்.
பற்றற்றுப் போகவே, ஸம்ஸ்காரங்கள் உண்டாவது நின்று
போகும். இப்பொழுது எஞ்சியுள்ளது யாதெனில், இதுவரை
சேமித்த ஸம்ஸ்காரங்களை, ஜீவிதத்தில் அனுபவித்துக்
கழிப்பதே.

பிரகிருதியும் ஸம்ஸ் காரங்களை காரண சரீரத்துடன்
அனுபவித்துத் தீர்த்துக் கொள்வதற்காகத் தக்க இடத்தைச்
சிருஷ்டி செய்து நமக்கு உதவி செய்யும்.

இப்படியாகப் புரைகள் கரைந்து போனதும் நாம் சூக்ஷ்மரூபம்
அடைந்து நிற்கின்றோம்’’ ‘‘நமது எண்ணங்களையும்,
செயல்களையும் அடக்குவதற்கு சதா ஒலித்துக்
கொண்டேயிருக்கும் மனம் சரியான முறையில் வேலை
செய்கின்றதா என்பதை கவனிக்க வேண்டும்.

மதபோதகர்கள் மிக்க கசந்த வார்த்தைகளால், மனதைக்
கடிந்து தூஷித்து, அதற்கு கெட்ட பெயர்கள் எல்லாம் இட்டு,
அதை நமது பெரிய விரோதி என்று பழிப்பதைப் பலமுறை
கேட்டிருக்கின்றேன்.

இதன் காரணம் வெட்ட வெளிச்சமாகத் தெரியும். அவர்கள்
நம்மிலுள்ள தீமைகள் எல்லாவற்றிற்கும் மனமே காரணம்
என்று நினைக்கிறார்கள். அதன் காரணமாக மனம் போன
போக்கே போகாது. அதை நசுக்கிவிட வேண்டுமென்று
ஜனங்களுக்குப் புத்தி புகட்டுவர்.

ஆனால், ஜனங்கள் மனத்தின் கவனத் தன்மையைக் கட்டுப்
படுத்தவோ, அதன் சொற்படி கேளாதிருக்கவோ முடியாமல்
இருக்கின்றனர்.

‘‘கோட்பாடுகளைச் சார்ந்து சொல்லப்பட்ட புத்திமதிகளும்,
உபந்நியாசங்களும் கொஞ்சமும் உபயோகப்படுவதில்லை.

உபந்நியாசங்களைக் கேட்ட எவரும் மனமடக்குதல் என்பதை
நடைமுறையில் அடைந்ததேயில்லை. மேலும் தற்காலச்
சூழ்நிலைகளும், சந்தர்ப்பங்களும், மனத்தை மேன்மேலும்
சலிக்கச் செய்கின்றன.

இக்காலத்தில் ஒவ்வொருவரும் ஜீவிதம் நடப்பதே கடும்
போரெனவும், வறுமை, பாதுகாப்பில்லாமை, இடுக்கண்கள்,
போட்டிகள் என்னுமிவற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும்
அவற்றின் விளைவினின்று தாம் விலகி நிற்க முடியாதென்றும்
நினைப்பர்.

இதனால் எப்போதும் அமைதியின்மையும், மன சஞ்சலமும்
ஏற்படும். இந்தப் பாவம் நமது சுவாசத்திலும் கலந்து உட்சென்று
சூழ்நிலை சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப இழுத்துச் செல்லும்.

நமது தனிமையானது காற்றுக் காட்டிபோல் நமது பாதம்
போகும் போக்கிலேயே போகும் தனது தைரிய சாகஸங்களால்,
இதை எவன் எதிர்த்து நின்று பாதிக்கப்படாமல் தன்னைக்
காத்துக் கொள்கிறானோ அவனே தீரன்’’

. ஸ்ரீராம்சந்த்ரஜியின் இந்தக் கருத்தை நான் முழு மனத்தோடு
ஒப்புக் கொள்கிறேன்.
இந்தத் தொடர் கட்டுரையின் ஆரம்பக் கட்டத்திலேயே இதை
நான் கூறியிருக்கிறேன்.

வாழ்க்கையை வாழ்க்கையாக ஒப்புக் கொண்டு, துன்பங்கள்
வந்தே தீரும் என்பதைப் போதித்து, வருகிற துன்பங்களை
எப்படிச் சமாளிப்பது என்று யோசனையும் சொன்னால்,
சராசரி மனிதனுக்கு அது வழி காட்டும்.

மதத்தின் மீது பற்றுதலையும் ஏற்படுத்தும். நான் படித்தவரை,
பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர் கடவுளை அடையும் வழி எ
ன்று சொன்னவை எல்லாம் முழுக்க முழுக்கப் பந்தபாசங்களை
அறுத்தெறிந்துவிட்டு வாழ்க்கை பற்றியனவாகவே இருக்கின்றன.

குடும்ப வாழ்க்கையை நடத்திக் கொண்டே ஒருவன் யோகியாக
முடியும். மகான் ஆக முடியும்; முக்தியடையவும் முடியும்;
அதற்கான வழியை இந்துமத போதகர்கள் அதிகம்
சொல்லவில்லை என்பதே என் கருத்து.

வள்ளுவன் அதை வலியுறுத்தியிருக்கிறான். இல்லறத்தில்
துறவறம் என்ற தலைப்பில் சொன்னவர்கள்கூட ஒரு கட்டத்தில்
மனைவியைத் தாய்போலப் பாவிக்கச் சொல்லியிருக்கிறார்கள்.

உடல் இச்சைகளிலிருந்து விடுபடச் சொல்லியிருக்கிறார்கள்.
ஸ்ரீராம்சந்த்ரஜி எதிலிருந்தும் விடுபடச் சொல்லவில்லை.
அதற்கு ஒரு அளவை நிர்ணயித்து கொள்ளச் சொல்லுகிறார்.
அந்த அளவு என்பது ஏறக்குறையத் திருக்குறளை ஒட்டியே
இருக்கிறது. பகவத் கீதையில் பரந்தாமன் கூறும் மனத்தின்
சமநிலையே, வள்ளுவரும் ஸ்ரீராம்சந்த்ரஜியும் வலியுறுத்தும்
அளவாகும். இன்பங்களையே அனுபவிக்காமல் ஒருவன் துறவு
பூண்டால், அந்த இன்பத்தை நோக்கியே அவன் மனம் ஓடிக்
கொண்டிருக்கும்.

அவன் எந்தக் காலத்திலும் முழு ஞானம் பெற முடியாது.
அனுபவித்து ஞானம் பெற்றவர்கள்தான் தலைசிறந்த
ஞானிகளாகக் காட்சியளிக்கிறார்கள். பற்றற்ற வாழ்க்கை
என்பதற்கு ஸ்ரீராம்சந்த்ரஜி கொடுக்கும் விளக்கத்தை நவநாகரிக
இளைஞர்கள்கூட விரும்பி ஏற்றுக் கொள்ளுவார்கள்.சத்தியம் உதயமாவதற்குத் தத்துவரீதியாகவும், பிரத்தியட்சக்
கண்ணோட்டத்திலும் அவர் சொல்லும் வழிகளைச் ‘சத்யோதயம்’
என்ற நூல் தெளிவாக விவரிக்கின்றது.

இந்நூலைக் கல்லூரிகளில் பாடப் புத்தகமாக வைப்பதுகூட
பொருத்தமானது என்பது என் கருத்து. இந்தத் தமிழ் நூல்
கிடைக்குமிடம் :
ஸ்ரீராம்சந்த்ரமிஷன், ஷாஜகான்பூர். (உ.பி.)

வரும் – ஏற்றுக்கொள்; தரும் – பெற்றுக்கொள்!
லெளகீக வாழ்கையில் நாம் தவம் செய்கிறோம் என்றும்,
அந்தத் தவம் எத்தகையது என்றும் விளக்கி,
ஸ்ரீராம்சந்த்ரஜி கூறியுள்ள கருத்துகளை நாம் பார்த்தோம்.
உலக இச்சைகளுடனேயே உடைமைகளையும் பெற்று பற்றற்று
வாழ்வது என்ற கருத்து மிகவும் புதியது.

நம்முடைய சுற்றத்தாரும், நண்பர்களும், ஊழியர்களும்
நமக்கு இழைக்கின்ற துயரங்களால் நமது மனம் பக்குவப்
படுகிறது என்கிறார் அவர்.
அது மிகவும் உண்மை. சிலர் நாக்கிலும் உடம்பிலும் ஊசியைக்
குத்திக் கொள்கிறார்கள். சிலர் கூர்மையான ஆணிகளின் மீது
படுத்துப் புரளுகிறார்கள்.

சிலர் கண்ணாடித் துண்டுகளை விழுங்கிக் காட்டுகிறார்கள்.
இந்த யோகங்கள் எல்லாம் சரீரத்தின் புறத்தோற்றம் பதப்படுத்தப்
பட்டு பக்குவம் பெற்றுவிட்டதைக் குறிக்கின்றன.

கடுந்துன்பங்களைத் தாங்கிக் கொள்வதன் மூலம் சரீரம் யோகம்
செய்வதுபோல், பிறர் நமக்கு இழைக்கும் துன்பங்களைத் தாங்கிக்
கொள்வதன் மூலம் உள்ளம் தவம் செய்கிறது. ஆரம்பக் கட்டத்தில்
சிறிய துன்பங்கூடப் பெரிதாகத் தெரியும்.

அது வளர வளர உள்ளம் மரத்துக் கொண்டே வரும். ஒரு கட்டத்தில்
எதையும் தாங்கிக் கொள்கிற சக்தி வந்துவிடும். துன்பங்களின்
மூலம் உலகத்தைக் கற்றுக் கொண்டவன் ஒரு ஞானியைவிடச்
சிறந்த மேதையாகிவிடுகிறான். ஓரளவு துன்பம் வந்தால் அழுகை
வருகிறது.

தொடர்ந்து துன்பங்கள் வந்துகொண்டே இருந்தால், அழுவதற்கு
சக்தி இல்லாமற் போய், வெறுப்பும் விரக்தியும் கலந்த சிரிப்பு
வருகிறது. ஒரு கட்டத்தில் எந்தத் துயரம் வந்தாலும் சிரிப்பது ப
ழக்கமாகிவிடுகிறது. அதுவே ஞானம் வந்துவிட்டதென்பதற்கு
அடையாளம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: