யாமிருக்க பயமேன்

Image result for யாமிருக்க பயமேன்

 

நவ.,5 கந்தசஷ்டி

தேவர்களை துன்புறுத்திய சூரபத்மனை,
சம்ஹாரம் செய்து,
அவர்களது பயத்தை நீக்கியவர், முருக பெருமான்.

அவரை வணங்குவோர் மனதில் உள்ள பயத்தை
போக்குவதுடன், அவர்கள் தங்கள் ஜாதக கிரக தோஷம்
கண்டும் அஞ்ச வேண்டியதில்லை எனும் விதமாக,
தன் ‘கந்தர் அலங்காரம்’ என்ற நூலில்,

நாள் என்செயும் வினைதான் என்செயும்
எனை நாடிவந்த கோள்என் செயும்
கொடுங்கூற்றென் செயும் குமரேசர்
இரு தாளும் சிலம்பும் சதங்கையும்
தண்டையும் சண்முகமும் தோளும் கடம்பும்
எனக்கு முன்னே வந்து தோன்றிடினே!

– என்று பாடுகிறார், அருணகிரிநாதர்.

‘முருகப்பெருமானின் இரு திருவடிகளும், அவரது
கால்களில் அணிந்துள்ள சிலம்பு, சலங்கை மற்றும்
தண்டை ஆகியவற்றின் ஒலியும், ஆறுமுகங்களும்,
அவரது பரந்து விரிந்த தோளும், கழுத்தில்
அணிந்துள்ள கடம்ப மாலையும், நம் மனக்கண்
முன் வந்து தோன்றினால், கரிநாள், சந்திராஷ்டம
நாள், வேறு ஏதேனும் ஆகாத நாளாக இருந்தாலும்
முருக பக்தர்களை ஏதும் செய்யாது;
எப்பேர்ப்பட்ட விதியாக இருந்தாலும், அதுவும்
ஒன்றும் செய்து விடாது.

‘எந்த கிரகங்களால் நமக்கு பாதிப்பு நேரிட இருக்கிறதோ,
அக்கிரகங்கள் முருகன் முன் கைகட்டி நிற்கும்.
இதையெல்லாம் விட, மரணத்தை தரும் எமதர்ம ராஜாவாக
இருந்தாலும் கூட, முருக பக்தர்கள் முன் பயந்து நிற்பார்…’
என்பது இப்பாடலின் பொருள்!

கருணையுள்ள கடவுள், முருகப்பெருமான்; பத்மாசுரனைக்
கூட அவர் கொல்லவில்லை. கந்தசஷ்டி நாளில் கூட,
நாம், ‘சூர வதம்’ என்று சொல்லி, விழா நடத்துவதில்லை;
சூர சம்ஹாரம் என்றே சொல்கிறோம்.

சம்ஹாரம் என்ற சொல்லில் உள்ள, ‘சம்’ என்பதற்கு, மங்களம்
என பொருள். ‘ஹாரம்’ என்றால், ஒடுங்குதல். மலர் மாலையைக்
கூட, ஹாரம் அல்லது ஆரம் என்பர். சம்ஹாரம் என்றால்,
மங்களகரமாக ஒடுங்குதல் என்று பொருள்.

சிவன் மற்றும் திருமாலுக்கு கோபம் வந்தால் அழித்து விடுவர்;
பார்வதிதேவியோ, காளியாக மாறி, வதம் செய்து விடுவாள்.
ஆனால், முருகனோ, கெட்டவனான சூரனை, தன்னோடு
ஒடுக்கிக் கொண்டார்.

இதனால், சூரசம்ஹாரம் என்று, இந்த விழாவை
அழைக்கிறோம்.

கந்தசஷ்டி விரதம் இருப்போர், அதிகாலை,
4:30 – 6:00 மணிக்குள் நீராடி விட வேண்டும். அன்று, எதுவும்
சாப்பிடாமல் இருப்பது நல்லது; தண்ணீர் குடிக்கலாம்;
உடல்நிலை காரணமாக, சாப்பிட வேண்டிய கட்டாயத்தில்
இருப்பவர்கள், எளிய உணவு எடுத்துக் கொள்ளலாம்.

முருகனுக்குரிய மந்திரங்களான, ‘ஓம் சரவணபவ மற்றும்
ஓம் முருகா’ ஆகிய மந்திரங்களை, நாள் முழுவதும் ஜபிக்க
வேண்டும். திருப்புகழ், கந்த சஷ்டி கவசம், ஸ்கந்தகுரு கவசம்
மற்றும் சண்முகக் கவசம் பாடல்களை, படிக்க வேண்டும்.

முருகன் கோவிலுக்கு சென்று, விளக்கேற்றி, வழிபாடு செய்ய
வேண்டும்.
மலைக்கோவில்களில், மலையை வலம் வந்தால்,
மிகுந்த புண்ணியம் உண்டாகும். குழந்தை பாக்கியம்
இல்லாதவர்கள், இந்த விரதத்தை, கந்தசஷ்டி அன்று துவங்கி,
ஒவ்வொரு வளர்பிறை சஷ்டியன்றும், தொடர்ந்து
அனுஷ்டிக்கலாம்.

கந்தசஷ்டி விரத நன்னாளில், திருச்செந்தூர் சென்று,
சூர சம்ஹார நிகழ்ச்சியை கண்டு களித்து, முருகன் அருளால்,
அச்சமற்ற வாழ்வு பெறுவோம்!

———————————–

தி.செல்லப்பா
வாரமலர்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: