காடு இருந்த இடத்தில்
அமைந்திருக்கும் முல்லை நகரில்
கழனி இருந்த இடத்தில்
வீடு கட்டிக்கொண்டவர்கள்
கால்வாய் இருந்த இடத்தில்
சாலை அமைப்பதை எதிர்த்து
வழக்குத் தொடுத்திருக்கிறார்கள்
–
குளம் இருந்த இடத்தில்
அமைந்திருக்கும் உயர் மன்றத்தில்
நீதி இன்னும் நிலுவையில் இருக்கிறது!
–
————————-
சேயோன் யாழ் வேந்தன்
ஆனந்த விகடன்
நன்றி- குமுதம்
Advertisements
மறுமொழியொன்றை இடுங்கள்