கற்றுக் கொள்ள எவ்வளவோ இருக்கிறது.

ஐந்து வயதில் தந்தை இறந்து போனார். படிப்பு வராததால்
16 வயதில் பள்ளியிலிருந்து விலகி எடுபிடி வேலைக்குப் போனார்.
ஒரே ஆண்டில் நான்கு வேலை மாறினார்.

18 வயதில் திருமணம். பிறகு ரயில்வே, ராணுவம் என்று முயற்சி
செய்தார். சேர முடியவில்லை. சப்பப் படிப்புக்கு விண்ணப்பித்தார்
கிடைக்கவில்லை.

இன்ஷூரன்ஸ் ஏஜென்டாக முயன்றார். முடியவில்லை. 19 வயதில்
பெண் குழந்தை பிறந்தது. 20 வயதில் மனைவி குழந்தையையும்
எடுத்துக் கொண்டு பிரிந்தாள்.

அதன் பிறகு ஒரு சிறிய ஓட்டலில் சமையல் வேலை கிடைத்தது.
ஆனால் பாத்திரமும் தேய்க்க வேண்டும். தன்னுடைய மகளைக்
கடத்திக் கொண்டு வர முயற்சி செய்து அதுவும் முடியாமல் போனது.
பிறகு மனைவியை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்து வந்ததார்.

65 வயதில் வேலையை விட்டார். 6000 ரூபாய் கிடைத்தது.
வாழ்க்கை முழுவதும் தோல்வி. இநத ஆறாயிரத்தை வைத்துக்
கொண்டு என்ன செய்ய? தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

அதற்கு முன் ஒரு மரத்தடியில் அமர்ந்து யோசித்தார். இந்த ஆட்டத்தை
இப்படி ஆடாமல் வேறு எப்படி ஆடியிருக்கலாம்? இவ்வளவுதானா நாம்?
வாழ்க்கை பூராவும் உழைத்து, முயன்று முயன்று தோற்று, கடைசியில்
வெறும் ஆறாயிரம் ரூபாய்? வேறு எப்படி வாழ்ந்திருக்கலாம்?

யோசித்தார். ஆஹா ஞாபகம் வந்து விட்டது. ஒரு குறிப்பிட்ட விஷயத்தில்
அவர் நிபுணர். அதுதான் சமையல். கையிலிருந்த பணத்தை வைத்து
கொஞ்சம் கோழி வாங்கி அதைத் தனக்கு தெரிந்த பிரச்யேகமான
முறையில் சமைத்து தன் தெருவில் இருந்த வீடுகளுக்குக் கொண்டு
போய் விற்றார்.

சில தினங்களுக்கு முன்புதான் தற்கொலை செய்து கொள்ள இருந்தவர்.
கோழி விற்றுக் கோடீஸ்வரன் ஆனவன் என்ற பழமொழியைக் கேள்விப்
பட்டிருக்கிறீர்களா? அவர் பெயர் சாண்டர்ஸ், கேஎஃப்சி என்று சொல்லப்படும்
கெண்ட்டுகி ஃப்ரைட் சிக்கன் நிறுவனத்தின் முதலாளி.

90 வயது வரை வாழ்ந்த அந்தக் கோடீஸ்வரரிடமிருந்து கற்றுக் கொள்ள
எவ்வளவோ இருக்கிறது.

– சாரு நிவேதிதா
கனவு கேப்பசினோ கொஞ்சம் சாட்டிங்!
கட்டுரையின் ஒரு பகுதி
நன்றி- குமுதம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: