மாணவ விஞ்ஞானிகள்!

m14

 

“மாணவர்கள் பத்தாம் வகுப்பில் வாங்கும்
மதிப்பெண்களின் சதவீதம் ப்ளஸ்-டூவில் சேர உதவுகிறது;
ப்ளஸ்-டூவில் எடுக்கும் மதிப்பெண்களின் சதவீதம் டிகிரி
படிக்க உதவிசெய்கிறது.

ஆனால், டிகிரியில் வாங்கும் மதிப்பெண்களால் உண்மையில்
என்ன பயன் அடைகிறார்கள்..? வேலைக்குப் போகுமிடத்தில்
அவர்களின் திறமையை மதிப்பிட்டே ஊதியம், பதவி உயர்வு
போன்றவை வழங்கப்படுகின்றனவேயொழிய
மதிப்பெண்களால் அல்ல…

படிக்கும் காலத்தில் மதிப்பெண்களைத் தவிர, அவர்கள்
திறமையை வளர்த்துக்கொள்வதற்கு நாம் என்ன முயற்சி
எடுத்தோம் என்று ஒவ்வொரு ஆசிரியரும், பேராசிரியரும்
சிந்தித்தால் மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையும்…”
என்று கூறுகிறார் எஸ்.எம்.கே. ஃபோம்ரா இன்ஸ்டிடியூட்
ஆப் டெக்னாலஜி கல்லூரியின் முதல்வர் முனைவர்
உஷா ஈஸ்வரன்.

சென்னை அம்பத்தூரை பூர்வீகமாகக்கொண்ட இவர்,
மருத்துவத் துறையில் பார் கோட் மெஷினரி ஆராய்ச்சியாளராக
எட்டு ஆண்டுகள் ஹைதராபாத்தில் பணியாற்றியவர்.

“சிறந்த கல்வியாளர் விருது’ உள்ளிட்ட பல விருதுகள் பெற்றவர்.
கடந்த நான்கு ஆண்டுகளாக எஸ்.எம்.கே. ஃபோம்ரா பொறியியல்
கல்லூரியின் முதல்வராகப் பணியாற்றி வருகிறார்.

சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள கல்லூரி அலுவலகத்தில்
அவரைச் சந்தித்தபோது, தங்கள் மாணவர்களின் சாதனைகள்
பற்றி அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்…

“படித்துவிட்டு வேலைக்குப்போவது தவிர, இந்த சமுதாயத்துக்கு
உபயோகமாக நீ என்ன செய்யப்போகிறாய்? என்று ஒவ்வொரு
மாணவ-மாணவியரிடமும் கேள்வி கேட்பதோடு நின்றுவிடாமல்,
படிப்பின்போது அவர்கள் செய்யவேண்டிய புராஜெக்ட்டுகள்
சமுதாயத்துக்கும் பயன்தரும் வகையில் அமைய வேண்டும்
என்று அனைத்து பேராசிரியர்களுடன் விவாதித்து முடிவெடுப்போம்.

அதன்படி, மாணவர்களின் திறமை அடிப்படையில் அவர்கள்
செய்யவேண்டிய புராஜெக்ட்டுகளை பிரித்துக்கொடுத்து
மாணவர்களை ஊக்குவித்து, மாணவர்களின் புராஜெக்ட்டுகளுக்கு
பக்கபலமாக இருந்தோம்.

எனது ஊக்குவிப்பினால், மாணவர்கள் ஒருபடி மேலே சென்று,
இன்று ஒவ்வொருவரும் ஒரு விஞ்ஞானியாக மாறியிருப்பதைப்
பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது.

சாதாரணமாக, சைக்கிள் டைனமோ எரிவதற்கு பின் டயரில்
உரசும் காயில் மின் உற்பத்தி செய்துதருவதைப் போன்று,
பூங்காக்களில் சிறுவர்கள் ஊஞ்சல் ஆடுவதில் இருந்தும்
மின்சாரம் சேமித்து, அதைப் பூங்காவில் எரியும் விளக்குகளுக்குப்
பயன்படுத்த முடியும் என்று எங்கள் மாணவர்கள் பிரதீப், அணீஷ்
நிரூபித்துக்காட்டியிருக்கிறார்கள்.

கிராமப்புறங்களில் இரவில் ஆள் நடமாட்டம் இல்லாத சமயங்களில்
தெரு விளக்குகள் வீணாக எரிந்து மின்சாரம் வீணாவதைத் தடுக்கும்
வகையில், நடமாட்டம் இருக்கும்போது தானாகவே விளக்குகள்
எரிந்து, நடமாட்டம் இல்லாதபோது தானாகவே அணைந்துகொள்ளும்
வகையில் ஒரு ரிமோட் மென்பொருளை எங்கள் மாணவர்கள் கண்டு
பிடித்திருக்கிறார்கள்.

கிராமங்களில் வற்றிப்போய்க் கிடக்கும் கிணறுகளில் சில ரசாயன
மாற்றம் செய்வதுமூலம் அக்கிணறு மீண்டும் நீர் ஊற்றெடுக்கும்படி
செய்துகாட்ட முடியும் என்று பையோமெடிக்கல் மாணவர்கள்
ஜெய்பட்டேல், கார்த்திகேயன் முயற்சிசெய்துவருகிறார்கள்.

மாணவர்கள் உதித் குமார், உமேஷ், விக்னேஷ், விஷால் ஆகியோர்
கண்டுபிடித்த டபுள் ஆக்ஷன் ஹாக்ஷா மெஷின், ஸ்காட்ச்யோக்
மெக்கானிஸம் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இதை ஒருபுறம்
அறுத்துச்செல்லும்போது அதேசமயம் எதிர்புறமும் அறுத்துக்
கொண்டேவந்து இரண்டும் ஒரு மையப்புள்ளியில் இணையும்.

மரம் அறுக்கும் தொழிலில் ஒருநாள் வேலையை இது அரைநாளில்
முடித்துவிடும். மரம் மற்றும் இரும்புப் பட்டறையிலும் இதைப் பயன்
படுத்தலாம்.

பிறர் உதவியுடன் சக்கர நாற்காலியில் அமர்ந்து செல்லும்
மாற்றுத்திறனாளிகளுக்காக, எங்கள் கல்லூரி மாணவர்கள்
ஆகாஷ் காந்த், அனந்தராமன், தனசேகர் உருவாக்கிய எலக்ட்ரானிக்
கன்ட்ரோல்டு வேகிளின் சிறப்பு என்னவென்றால், தனக்கு உதவி
செய்யப் பிறரை எதிர்பார்க்காமல் தானே அமர்ந்து தன் விருப்பம்
போல இதை இயக்கிக்கொள்ளமுடியும் என்பதுதான்.

பேட்டரியினால் இயங்கக்கூடிய இந்த வாகனம் இதுவரை பயன்
பாட்டில் இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான வாகனங்களிலிருந்து
முற்றிலும் மேம்பட்ட வடிவத்தைக் கொண்டது என்பது முக்கிய
அம்சம்.

சிவில் என்ஜினியரிங் மாணவர்கள் வரதராஜன், தமிழ்செல்வன்,
பிரேமா ஆகிய மூவரும் கழிவு நீரை இயந்திரம் மூலம் சுத்திகரித்துத்
தூய நீராக்கி, துணிதுவைக்கவும், பாத்திரம் கழுவவும், செடிகளுக்கு
ஊற்றவும் பயன்படும் வகையில் வாட்டர் ட்ரீட்மெண்ட் பிளான்
இயந்திரத்தை வடிவமைத்துள்ளனர்.

இப்படி ஒவ்வொரு மாணவரும் ஒவ்வொரு வகையில் தங்கள்
திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

எங்கள் கல்லூரி மாணவர்கள் தவிர, சென்னையிலுள்ள அரசுப்
பள்ளிக்கூடங்களில் படிக்கும் பத்தாம் வகுப்பு மற்றும் ப்ளஸ்-டூ
மாணவர்களை ஆண்டுதோறும் சந்தித்து விழிப்புணர்வு ஆலோசனைகள்
வழங்கி வருகிறேன். எனது ஆலோசனைகள் பொதுத் தேர்வுகள்
எழுதுவதற்கு மிகுந்த ஊக்கமளிப்பதாக மாணவர்கள் கூறும்போது
மகிழ்ச்சியடைகிறேன்.

எல்லா பள்ளிக்கூடங்களிலும் உரையாற்ற அழைக்கிறார்கள்.
ஆனாலும் வருடத்தில் 25 பள்ளிகளுக்குமேல் என்னால் போக
முடியவில்லை என்பது வருத்தமாகத்தான் இருக்கிறது” என்கிறார்
உஷா ஈஸ்வரன்.

——————————————-
-ரவிவர்மா
மகளிர்மணி

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: