14 பங்களா; 1 கிலோ தங்கம் : ஆந்திராவை அதிர வைத்த அதிகாரி

ஐதராபாத்:
ஆந்திராவில், வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரி
வீட்டில் சோதனை நடத்திய, லஞ்ச ஒழிப்பு போலீசார்,
அந்த அதிகாரி சேர்த் துள்ள சொத்துக்களை பார்த்து,
மலைத்து போய் விட்டனர்.

முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான, தெலுங்கு
தேசம் ஆட்சி உள்ள, ஆந்திராவின் குண்டூர் மாவட்டம்,
வினுகோண்டா வட்டார போக்குவரத்து அலுவலகத்தில்
அதிகாரியாக பணியாற்றுபவர், பூர்ணசந்திர ராவ், 55.

லஞ்சம் வாங்கியதாக வந்த புகாரில் அவரது வீட்டில்,
ஆந்திரா லஞ்ச ஒழிப்பு போலீசார், திடீர் சோதனை
நடத்தினர்.

அந்தசோதனையில், பூர்ணசந்திர ராவ், ஆந்திராவின்
பல்வேறு பகுதிகளில்,14 வீடுகள்,ஒரு கிலோ தங்கம், ஒரு
அறை முழுவதும் நிரப்பக் கூடிய அளவுக்கு உள்ள, 60 கிலோ
வெள்ளிப் பொருட்கள், 20 லட்சம் ரூபாய் ரொக்கம்
உள்ளிட்டவை சேர்த்துள்ளது தெரிய வந்துள்ளது.

இவர், 1981ல், ஆந்திர போக்குவரத்து துறையில்
இன்ஸ்பெக்டராக சேர்ந்தார்.தன், 35 ஆண்டுகள் அரசு
சேவையில் சேர்த்த பணத்தின் மூலமே இந்த சொத்துகளை
வாங்கியதாகவும், இவற்றின் மதிப்பு, மூன்று கோடி ரூபாய்
மட்டுமே என்று, விசாரணை யில், பூர்ணசந்திர ராவ்
கூறியுள்ளார்.ஆனால், இவற்றின் மதிப்பு, 25 கோடி ரூபாயை
தாண்டும் என்றும், தொடர்ந்து விசாரணை நடந்து
வருவதாகவும், லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்து உள்ளனர்.

ஒரு அரசு அதிகாரி வீட்டில், அதிக அளவு சொத்துக்கள் பறிமுதல்
செய்யப்பட்டு உள்ளது, ஆந்திராவில் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தி உள்ளது

—————————————
தினமலர்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: