நம்மால் ஆவது ஒன்றுமில்லை

எந்தச் செய்தியையும் அமைதியாகக் கேளுங்கள்;
உடம்பை அலட்டிக் கொள்ளாதீர்கள்.

யாராவது தாறுமாறாக உங்களிடம் பேசிக்
கொண்டிருந்தால், `நீங்கள் சொல்லுவதே சரியாக
இருக்கக்கூடும்’ என்று சொல்லி விடுங்கள்.

உங்களை `முட்டாள்’ என்று திட்டினால்,
`எனக்குக் கூட அந்தச் சந்தேகம் உண்டு!’ என்று
கூறுங்கள்.

உங்கள் மனைவி சண்டை போட்டால்,
`சம்சாரத்தில் இதுதான் முக்கிய கட்டம்’ என்று
கருதுங்கள்.

யாராவது உங்களை அவமானப்படுத்தினால்,
ஒரு அனுபவம் சேகரிக்கப்பட்டு விட்டதென்று
கருதுங்கள்.

வருகின்ற துன்பங்கள் எல்லாம் ஒன்று, இரண்டு,
மூன்று என்று அனுபவமாகச் சேகரித்துக்
கொள்ளுங்கள்.

புதுப்புது அனுபவமாகச் சேகரியுங்கள்;
ஒரே அனுபவத்திற்கு இரண்டு மூன்று பதிப்புகள்
போடாதீர்கள்.

`நம்மால் ஆவது ஒன்றுமில்லை’ என்ற நினைப்பு,
`நமக்கு வந்தது துன்பமில்லை’ என்று நினைக்க
வைத்துச் சாந்தியைத் தரும்.

`நாட்டையே கட்டி ஆண்டவர்கள் எல்லாம் கூட
கோர்ட்டை மிதிக்கும்படி விதி வைக்கிறதே!’

——————————————–
நன்றி- முக நூல்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: