பெண்களுக்கு மரியாதை!


யத்ர நார்யஸ்து பூஜ்யந்தே ரமந்தே தத்ர தேவதா:
யத்ரைதாஸ்து ந பூஜ்யந்தே ஸர்வாஸ்தத்ர அபலா: க்ரியா:

எங்கு பெண்கள் கௌரவமாக நடத்தப்படுகிறார்களோ,
அங்கு தெய்வங்கள் மகிழ்கின்றன. அவ்வாறு இல்லாத
இடங்களில் செய்யப்படும் காரியங்கள் பலனில்லாமல்
போகும்.

மனைவியை கிரஹலட்சுமியாகவும்,
தாயை பராசக்தியாகவும்,
சகோதரிகளை, பார்வதிதேவியாகவும், 13 வயதிற்கு மேல்
கன்யா லட்சுமியாகவும், 12 வயதுக்குள் சுவாசினியாகவும்
பாவித்து போஷித்தால், அந்த வீட்டில் லட்சுமி நித்யவாசம்
செய்வாள்.

ஆக, இருக்கும் இடத்திலேயே லட்சுமி வசிப்பதை
உணராமல் வெளியே தேடுவதாலென்ன பலன்?
பெண்களுக்கு மரியாதை!

தாய், சகோதரிகள், இல்லாள் ஆகியோரை வார்த்தைகளால்
துன்பப் படுத்தாமல் இருந்தாலே போதும்; தெய்வ
அனுக்கிரஹம் பரிபூரணமாகக் கிடைக்கும்.

ஆடம்பரப் பொருட்களைவிடவும் அன்பான வார்த்தைகளுக்கு
மனம் கனிவது, பெண்களுக்கே உண்டான சிறப்பு குணமாகும்.

சுவாசினி பெண்கள், சட்டென கோபம் கொள்ளும் பருவத்தில்
இருப்பவர்கள். சந்தோஷமும் அவர்களை சடுதியில் தொற்றிக்
கொள்ளும். ஆகவே, அந்த பருவத்தில் இருக்கும் பெண்களை
பெண்களை சின்னச் சின்ன விஷயங்களால் சந்தோஷப்
படுத்துவது, திருமகளையே சந்தோஷப்படுத்துவதற்குச் சமம்.

நவராத்திரியிலும் சுவாசினி பூஜை முக்கிய ஸ்தானம்
வகிக்கிறது. அந்த வயது பெண் குழந்தைகள் நம் வீட்டுக்கு வர
நேர்ந்தால் பழங்கள், வளையல், தாம்பூலம், மருதாணி, கண் மை…
என அவர்களுக்கு விருப்பமான பொருட்களைக் கொடுத்து
மகிழ்விப்போம்.

அவர்களின் ஆனந்தம், நமக்கு நித்திய ஆனந்தத்தை அளிக்கும்.
-தொகுப்பு: சுபா கண்ணன்
சக்தி விகடன்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: