எட்டு வகை மலர்கள்!சிவன் – அபிஷேகப் பிரியர், விஷ்ணு – அலங்காரப் பிரியர்,
நவகிரகங்கள் ஸ்துதி பிரியர்கள்.

எனவே, சிவாலய அபிஷேகத்துக்கு தேவையான பொருட்களை
வழங்குவதும், அபிஷேக வைபவத்தைக் கண்குளிரத்
தரிசிப்பதும் விசேஷ பலன்களைப் பெற்றுத் தரும்.

அதேபோன்று பெருமாள் கோயில்களில் பெருமாளின்
அலங்காரத்துக்கு சிறந்த மலர்கள், குறிப்பாக துளசி அளிப்பது
விசேஷம்.

அதேபோன்று ஆலயங்களில் நவகிரகங்களை வலம் வந்து
வணங்கும்போது வெறுமனே வலம் வராமல், நவகிரக காயத்ரி
மற்றும் அவர்களுக்கு உகந்த துதிப்பாடல்களை பாடி வலம்
வருவதால், பலன்கள் பன்மடங்கு பெருகும்.

இறைவனுக்கு நைவேத்தியமாக நாம் படைக்கும் அனைத்துமே
அவர் படைத்தவைதான். ஆகவே, அளிக்கும் பொருட்களால் அல்ல,
நமது அன்பும் அர்ப்பணிப்பும் கலந்த பக்தியால்தான் கடவுளின்
கருணையைப் பெற முடியும்.

`ஆத்ம சமர்ப்பணம் விஷேஷத:’ என்பார்கள். நமது ஆத்மா
அவனுக்கானதாக மாறும்போது, நமது பிரார்த்தனைகள்
உடனுக்குடன் நிறைவேறும் என்பது கண்கூடு. அப்படி
ஆண்டவனுக்கு அர்ப்பணிக்க எட்டு வகையான மலர்களைச்
சுட்டிக் காட்டுகின்றன ஞானநூல்கள்.
அவை என்னென்ன தெரியுமா?

அஹிம்ஸா பிரதமம் புஷ்பம்
புஷ்பம் இந்த்ரிய நிக்ரஹ:
சர்வபூத தயா புஷ்பம் க்ஷமா
புஷ்பம் விசேஷத:
சாந்தி: புஷ்பம் தப: புஷ்பம் ஞானம் புஷ்பம் ததைவ ச
சத்யம் அஷ்டவிதம் புஷ்பம் விஷ்ணோ: ப்ரீதிகரம் பவேத்

அஹிம்சை, இந்திரியங்கள் அடக்கம், பொறுமை, தயை,
சாந்தி, தபம், ஞானம், சத்தியம் ஆகியவையே நாம்
இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டிய எட்டு மலர்களாகும்.

———————————
தொகுப்பு: சுபா கண்ணன்
சக்தி விகடன்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: