உள்ளங்கை தரிசனம்!

நம் உள்ளங்கையின் துவக்கம், மத்திய பாகம்,
முடியும் இடம் ஆகியவற்றில் முறையே லட்சுமி, பார்வதி,
சரஸ்வதி ஆகியோர் வசிக்கிறார்கள்.

காலையில் விழித்ததும் உள்ளங்கையை தரிசிப்பதன்
மூலம், இவர்களின் அருட்கடாட்சத்தைப் பெறலாம்;
அந்த நாள் மிக இனிய நாளாக அமையும். அப்படி, உள்ளங்
கையை தரிசிக்கும்போது
கீழ்க்காணும் ஸ்லோகத்தைச் சொல்லவேண்டும்.

கராக்ரே வஸதே லக்ஷ்மி கரமத்யே சரஸ்வதி
கரமூலே பார்வதீச ப்ரபாதே கர தர்ஸனம்

வைணவ அன்பர்கள் கைகளின் முடிவில் கோவிந்தனைத்
தரிசிப்பார்கள்.

கராக்ரே வஸதேலக்ஷ்மி கரமத்யே சரஸ்வதி
கரமூலே கோவிந்தஸ்ச ப்ரபாதே கர தர்ஸனம்

என்று கூறி, உள்ளங்கையைத் தரிசித்து வணங்கி
வழிபடுவார்கள்.

பூமித்தாய்க்கு வணக்கம்!

பத்து மாதங்கள் நம்மைக் கருவறையில் சுமப்பவள் நம் அன்னை.
வாழ்க்கை முழுவதும் நம்மைச் சுமந்து காப்பவள் பூமித்தாய்.
அவளுக்கு நன்றி செலுத்தவும் நம் கால்கள் பூமியை ஸ்பரிசிக்க
அனுமதி வேண்டியும் தூங்கி எழுந்ததும் நம் கால்கள் தரையைத்
தொடுமுன், கீழ்க்காணும் ஸ்லோகத்தைச் சொல்லி வணங்குவது
அவசியம்.

சமுத்ரவஸனே தேவி
பர்வத ஸ்தன மண்டலே!
விஷ்ணு பத்னி நமஸ்துப்யம்
பாதஸ்பர்சம் க்ஷமஸ்வ மே!!

‘சமுத்திரத்தில் வசிப்பவளே, மலைகள் சூழ்ந்தவளே, விஷ்ணு
பத்தினியே, உனக்கு நமஸ்காரம்! என் கால்கள் உன்னை
ஸ்பரிசிக்கப் போகின்றன; அதைப் பொறுத்தருள வேண்டும்,
என்பதே இந்த ஸ்லோகத்தின் கருத்து.

காலையில் துயிலெழுந்ததும், குளிக்கும்போதும், தூங்கச் செல்லும்
போதும் கீழ்க்காணும் ஸ்லோகத்தைச் சொல்லலாம்.

ஆண்கள் சொல்லவேண்டியது:

அச்வத்தாமா பலிர் வ்யாஸோ
ஹனுமந்தம் விபீஷண:! க்ருப: பரசுராமஸ்ச சப்தைதே சிரஞ்சீவின:!!

பெண்கள் இதைச் சொல்வதால் பொறுமை, தன்னம்பிக்கை,
தைரியம், போராடும் துணிவு இவையனைத்தும் கிடைக்கும்

அஹல்யா, த்ரௌபதி சீதா தாரா மன்டோதரீ ததா!
பஞ்சகன்யா ஸ்மரேன்னித்யம் மஹாபாதக நாஸனம்!!

————————————-
-தொகுப்பு: சுபா கண்ணன்
சக்தி விகடன்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: