ஆலயம் தொழுவோம்!


ஆலயங்களுக்குச் சென்று வழிபடும்போது அங்கு நாம்
கடைப்பிடிக்கவேண்டிய நியதிகளும் உண்டு.

கோயிலுக்குள் கொடிமரத்தின் அருகில்தான் விழுந்து
வணங்க வேண்டும். கோயிலுக்குள் வேறு எந்த
சந்நிதியிலும் அப்படி நமஸ்காரம் செய்யக் கூடாது.

முதலில் விநாயகரை வணங்கி அதன் பிறகு மூலவரை
தரிசனம் செய்ய வேண்டும்.

கிழக்கு நோக்கிய சந்நிதியில் – ஸ்வாமியின் வலப்
பக்கத்தில், அதாவது தென்திசையில் நின்று வடதிசையை
நோக்கி தரிசிக்க வேண்டும். மேற்கு நோக்கிய சந்நிதியில்
– ஸ்வாமியின் இடப்பக்கத்தில், தென் திசையில் நின்று
வட திசையை நோக்கி தரிசனம் செய்ய வேண்டும்.

தெற்கு நோக்கிய சந்நிதியில் – ஸ்வாமியின் வலப்பக்கத்தில்,
மேற்கில் நின்று கிழக்கு நோக்கி தரிசனம் செய்ய வேண்டும்.
வடக்கு நோக்கிய சந்நிதியில் – ஸ்வாமியின் இடப் பக்கத்தில்
இருந்தபடி, மேற்குத் திசையில் நின்று, கிழக்கு நோக்கி
தரிசிக்க வேண்டும்

பிராகாரங்களில் வலம் வரும்போது – கோபுரத்தின் நிழலோ
அல்லது கொடிமரத்து நிழலோ குறுக்கிட்டால், அதை
மிதிக்காமல் வலம் வர வேண்டும். முடியவில்லை என்றால்,
அடுத்த பிராகாரத்தை வலம் வரலாம்.

எந்தக் கோயில் ஆனாலும் சரி… ஸ்வாமிக்கும் அவருக்கு
எதிரில் உள்ள வாகனத்துக்கும் நடுவில் போகக் கூடாது.

கோயிலில் தரப்படும் விபூதி, குங்குமம் முதலான பிரசாதங்களை
இடக் கைக்கு மாற்றக் கூடாது. ஒரு காகிதத்தில் போட்டு மடித்து
வைத்துக் கொள்ளலாம்.

வலம் வரும்போது 3, 5, 7, 9 சுற்றுகள் என அவரவர் சௌகரியப்படி
வலம் வரலாம். ஒரு முறை அல்லது இரு முறை மட்டும் வலம் வரக்
கூடாது.

ஸ்வாமிக்காகக் கொண்டு போகும் பூக்கள் அல்லது மாலையை,
நம் இடுப்புக்குக் கீழே இருக்கும்படி கொண்டு போகக் கூடாது.

——————————–
தொகுப்பு: சுபா கண்ணன்
சக்தி விகடன்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: