சிந்திக்க தூண்டும் சில வரிகள்?

1.உன் வாழ்வை நீ தீர்மானிப்பதில்லை உன் பாவங்கள் தான் தீர்மானிக்கிறன…

2.உன் பாவங்களுக்கு நீ மட்டுமே பொறுப்பு என்பதை விட உன் வளர்ப்பும் ஒரு காரணமே…

3.ஆன்மீகவாதியை நம்புவதை விட அரசியல்வாதியை நம்பு ஏனென்றால் முதாலாமவன் சிறிது சிறிதாக கொல்வான் இரண்டாமவன் உடனே கொன்றுவிடுவான்…

4.எப்பொருளும் உன்னுடன் வருவதில்லை உன் இறப்பிர்க்கு பின்னால்…

5.வாழ்க்கையில் அவசரப்படுபவனுக்கு ஆறடி நிலம் கூட இப்பொழுது கிடையாது ஒரு பிடி சாம்பல் மட்டுமே மிச்சம்…

6.உன் வாழ்வை நீ தீர்மானிப்பதில்லை உன் பாவங்கள் தான் தீர்மானிக்கிறன…

7.பணம் என்பது பலரின் உயிர்கொல்லி…

8.ஒருவனின் இறப்பு, பலருக்கு பல பாடங்களை கற்றுக்கொடுக்கும்…

9.”இன்முகத்தோடு வரவேற்பு”
இன்று எந்த இல்லத்திலும் இது இல்லை…

10.என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் அனைத்தையும் விற்க கூடாது வெளிநாட்டில் …இன்றைய நிலை
11.காதல் இருப்பவனுக்கு காமம் முக்கியமாகத் தெரியாது…
12.உழைப்பவன் என்றென்றும் உழைத்துக்கொண்டேயிருக்கின்றான்…
13.ஒருவனின் வார்த்தை தான் அவன் வாழ்க்கையை தீர்மானிக்கிறது…
14.தகுதி என்பது யார் கொடுத்தது நமக்கு நாமே சூட்டிக்கொண்ட மகுடம் தாம்…சுயதம்பட்டம்
15.அன்புக்கு அடிமைப் படுவதில் ஆண்களும் பெண்களும் சளைத்தவர்கள் அல்ல என்று காட்டுவதில் அதிகம் ஆர்வம் கொள்ளுகிறார்கள் அறியாமையால்
16.உன்னதமான பொறுப்பை உன்னதமானவர்களிடம் மட்டுமே தரப்படவேண்டும்…
17.உயிரின் மதிப்பு அனைவருக்குமே போகும் போது தான் அதன் மதிப்பு தெரிகிறது….
18.ஏதோ ஒரு அடையாளத்தை தேடியே மனித மனம் அலைகிறது…..
19.தன்னை பெருமையாக நினைத்துக்கொள்வதிலேயே பலரின் வாழ்க்கை தட்ம்புரண்டுவிடுகிறது…
20.நம் பக்கத்து வீட்டில் சண்டை நடக்கிறது நாம் விலக்க தயாரா இல்லை ஏன் என் சொந்த விசயத்தில் தலையிடாதே என்று சொல்லிவிட்டால் என் கெளரவம் குறைந்துவிடும் அதனால்….
21.பொன் நகையை அணிவதை விட புன்னகை ஒன்றே பலரையும் நம்மை நேசிக்க வைக்கும்…
22.சக மனிதனைக் கொல்லும் போதே அவன் முழு மிருகமாகிவிடுகிறான்…
23.கோவிலில் காணிக்கை செலுத்துவது சாமிக்காகவா?ஆசாமிக்காகவா? அல்லது செய்யும் பாவங்களுக்காகவா?
24.கடவுளை மனிதன் படைத்தானா?கடவுள் மனிதனை படைத்தானா?

ஏன் இந்த கேள்வி என்றால் அடுத்த தெருவில் ஒரு கோவில் கட்ட ஆரம்பித்தால் உடனே இந்த தெருவிலும் இன்னொரு கோவில் கட்டுகிறார்கள் சிலை வைக்கிறார்கள்

யார் யாரை உருவாக்குகிறார்கள் இதைப்பார்த்தால் மனிதன் தான் என்று தோன்றுகிறது…

25.தாய் என்றும் இறப்பதில்லை…
26.படிக்கும் குழந்தைகளின் மனதில் பாடங்களை விட படங்களே மனதில் பதிகின்றன…
27.இன்று பலரும் உபயோகிக்கும் வார்த்தைகளில் 90% தகாத வார்த்தைகளையே உபயோகிக்கிறோம்…
28.ஒவ்வொருவரும் யாரோ ஒருவரை விமர்சித்துகொண்டே தான் வாழ்கிறோம்….
29.இறக்கும் நிலையிலும் பல மனக்குறைகளோடுதான் பிரிகிறது உயிர்…..
30.எல்லோர் மனதிலும் உதவும் எண்ணம் மறுக்கப்பட்டே வளர்க்கப்படுகிறது….
31.உதவுபவர்களையும் கேலி செய்து தடுக்கும் நபர்கள் நம் அருகிலேயே இருப்பவர்கள் தான்…
32.எந்நேரமும் உயிர் பிரிந்தாலும் எந்த ஆசையையும் விட்டுக்கொடுக்க தயாராயில்லை……
33.புரிந்து கொள்ளத்தான் போறாடுகிறோம் ஒவ்வொருவரும் மனதின் வலியை….
34.பல நேரங்களில் நாம் கட்டிய கோட்டைகள் அனைத்தும் கண்விழித்ததுமே சரிந்துவிடுகின்றன கனவுகள் போலவே..
35.புறப்படும் போது நாம் சென்று சேர்வோம் என்ற திடமான நம்பிக்கையே நம்மை செல்ல வழிவகுக்கிறது….
36.தன் முழு முயற்சியும் தோல்வி அடையும் போதே மனிதன் தன்னை மீறிய சக்தியை உணருகிறான்…
37.தன் அருகில் இருந்து துன்பப்படுபடுபவனை கண்டுகொள்ளாமல் இருப்பது மனிதனின் முக்கியமான குணம் தற்போது….
38.தன் உணர்வுகளை தானே கட்டுப்படுத்த இயலாதவன் மனிதே அல்ல….
39.மன்தின் தேடல் பொருள் கிடைத்தவுடன் திருப்தி அடையாமல் மீண்டும் அடுத்து அதன் தேடல் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது….
40.தோல்வியில் இருந்து மீள்வது சுலபம் வெற்றியை தற்காத்து கொள்வது கடினம்…
41.சில உண்மை முகங்களை அடையாளம் காண நம் தோல்வி தான் வழி காட்டுகிறது….
42.உயிரே போனாலும் என் கொள்கையை விட்டுதரமாட்டேன் என்று நீங்கள் சண்டையிட்டால் அதற்கு பெயர் மனோவியாதி…
43.எல்லோருக்கும் நல்லவனாக இருக்க யாராலும் முடியாது….
44.சந்தோசமாக இருக்கவேண்டும் என்று ஒருவர் நினைப்பது பேராசையில்லை….
45.சந்தோசம் என்பது உங்கள் எண்ணத்தில் தான் இருக்கிறது …
46.சந்தோசத்தை தன்னுள்ளே வைத்திருப்பவன் அதை வெளியே தேடிக்கொண்டிருக்கமாட்டான் அதற்க்காக அவன் அலையபோவதில்லை…
47.ஒவ்வொருவரும் தன் விருப்பத்தை ஏதோ ஒரு வகையில் நிறைவேற்றிடவேண்டும் என்ற ஒரே நோக்கத்திலேயே பயணிக்கின்றனர் வாழ்க்கையில்……
48.ஒவ்வொரு மனித மனங்களுக்கு பின்னால் ஒரு மிருகம் கட்டாயம் இருக்கும் அது வெளிப்படும் தன்மையை பொருத்து தான் அவர்களின் வாழ்க்கை செல்லும்…
49.யாரோ ஒருவரால் நேசிக்கப்படவேண்டும் என்று எல்லோரது மனமும் கட்டாயம் ஏங்கவே செய்கிறது….
50.என்றாவது ஒரு நாள் வாழ்வில் வசந்தம் வரும் என்ற நம்பிக்கையில் தான் பிச்சையெடுத்தாவது வாழ துடிக்கிறான் மனிதன்…..

51.பல நேரங்களில் நாம் அனுபவிக்கும் கஷ்டங்களுக்கு காரணம் என்னவென்றே தெரியாது…..

52.முதியோர்களை தன்னோடு வைத்துக்கொண்டு வார்த்தை ஈட்டிகளால் குத்தி கொல்லுவதை விட முதியோர் இல்லங்களில் சேர்பதே மேல் …
53.எந்த நிலையிலும் தன் நிலை தவறாமல் வாழவேண்டும்…..
54.உயிரை கொடுத்தவனும் யாரென்று தெரியாது எடுத்துக்கொள்பவனும் யாரென்று தெரியாது…
55.உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் மானுட ஜென்மங்கள் இது தான் ஆறாம் அறிவின் சிறப்போ…
56.தன் உயிரை தானே அழித்துக்கொள்வதால் துன்பங்கள் தீர்ந்துவிடுமா?
57.எந்த நிலையிலும் உன்னை நீ தான் காப்பாற்றிக் கொள்ளவேண்டும் நம்பிக்கை என்ற கடவுளால்….
58.புன்னகை செய்யும் ஒவ்வொரு நொடிப் பொழுதும் நம் வாழ்க்கையில் பொன்னான நேரங்களே…
59.உண்மைகளை பல இடங்களில் வெளிப்படையாக சொல்ல இயலாது….
60.விருப்பங்கள் அதிகமாக அதிகமாக துன்பங்களும் அதிகமாகிவிடும்…
நன்றி

http://chakkarakatti.blogspot.in/2012/12/blog-post_20.html

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: