ஆக்ஷன் ஹீரோக்களின் அவஸ்தை

‘பியூட்டி போதும். இனி பெர்ஃபார்மன்ஸ் தான் முக்கியம்’ என
புது ரூட்டில் ஜூட் விட்டிருக்கும் அனுஷ்காவை விரட்டிப் பிடித்தோம்.

முதலில் சினிமா எனக்குப் பிடிபடவில்லை. சினிமா வாசனை
நுழையாத குடும்பத்தில் பிறந்து வந்ததால் அந்த வேலை முதலில்
கடினமாகத் தெரிந்தது. என்னை சினிமாவுக்கு அழைத்து வந்த
நாகார்ஜூனா காரு சினிமாவில் உள்ள நெளிவு சுளிவுகளை
எடுத்துச் சொல்லி புரிய வைத்தார்.

இப்ப பக்குவமும் பிடிப்பும் வந்துவிட்டது படபடவென பாஸ்டையும்
பிரஸண்டையும் கொட்டியவரிடம் ஃபியூச்சரைப் பற்றிய கேள்வியை
வைத்தோம்.

சரி; எதிர்காலத் திட்டம் ஏதாவது?

அப்படியெல்லாம் எந்தத் திட்டமும் வகுத்துக் கொண்டு செயல்
படறதில்லை. வாழ்க்கையில் என்ன நடக்கிறதோ, அதுக்கு ஏத்த மாதிரி
என்னை மாற்றிக் கொண்டு வாழ்கிறவள் நான். எதையும் எதிர்
கொள்வேன். எதற்கும் தயார்?

ரொம்ப போல்டா இருக்கீங்க. ஆக்ஷன் ஹீரோயினாக அடுத்தடுத்து
நடித்த அனுபவமா?

நீங்க வேற… அதிரடியான சண்டைக் காட்சிகளில் நடிப்பது சாதாரணமான
விஷயமல்ல அது ரொம்ப கஷ்டமான வேலைன்னு இப்ப உணர்றேன்.
சண்டைக் காட்சிக்காக எகிறிக் குதித்து, ஓடி விரட்டி நடிப்பது ஈசியல்ல.
அதன்பிறகு கை, கால்கள் ரொம்ப வலிக்க ஆரம்பித்துவிடும்.
பாவம் ஆக்ஷன் ஹீரோக்கள். அவர்களின் கஷ்டம் இப்ப தெரிகிறது.

அக்ஷனில் கலக்கியாச்சு. இனி அடுத்தது அரசியலா?

அரசியல் பத்தி ஜீரோ பர்சன்ட் கூட தெரியாது. அரசியல்ல நான் ஒரு
எல்.கே.ஜி. அதுல எனக்கு இன்ட்ரஸ்ட் இல்லை. வேறு நல்ல விஷயங்களில்
மனதைச் செலுத்தவே விரும்புகிறேன்.

யோகாவைவிட வேறு நல்ல விஷயம் வேணுமா?
உங்க இளமைத் தோற்றத்தைப்பற்றி உங்க பழைய சிநேகிதிகள் கமெண்ட்?

அவர்களை அடிக்கடி சந்திக்க முடியவில்லை என்றாலும் எப்பொழுதாவது
பார்க்கும்பொழுது அவங்க குடும்பம் குழந்தைன்னு அழகாக வாழ்வது
எனக்கு சந்தோஷமாக இருக்கும். ஆனா அவங்க என்னைப் பார்த்து, குழந்தை
குடும்பம்னு நாங்கெல்லாம் வயசானவங்களாயிட்டோம்
நீ மட்டும் சின்னபொண்ணு மாதிரி அப்படியே இருக்கியே! எனறு கலாய்ப்பாங்க!

——————————

– சபீதா ஜோசப்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: