
–
இயக்குநர் பி.வாசுவின் மகன் சக்திவேல் நாயகனாக
நடித்துள்ள புதிய படம் ‘தற்காப்பு’.
இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை மலேசியாவில்
பிரம்மாண்டமாக நடத்தி உள்ளனர்.
இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நமீதா பேசும்
போது, பெண்கள் தங்களைத் தற்காத்துக்கொள்வதற்கான
வழிமுறைகள் குறித்து சில அறிவுரைகளை வழங்கினார்.
“தற்காப்பு என்பது தங்களைத் தாங்களே பாதுகாத்துக்கொள்வது.
இன்றைய சூழலில் தற்காப்பு என்பது ஆண்களைவிட பெண்களுக்கு
மிக அவசியம் என்பேன். “நான் மாடலிங் துறையில் நுழையும்போது
‘நீங்கள் பெரிய தொழிலதிபரின் மகள். ஏன் இந்தத் துறைக்கு
வருகிறீர்கள்” என்ற ரீதியில் கேள்விகள் எழுந்தன.
“அவர்களுக்கு நான் சொன்ன பதில் இதுதான்.
‘நமீதா என்பது என்னுடைய பெயர். அந்தப் பெயரை பலர் நல்லவிதமாக
அறிந்து வைத்திருக்கும் வகையில் நான் ஏதாவது செய்ய வேண்டும்.
என்னதான் தந்தையாக இருந்தாலும் அவர் வேறு. நான் வேறுதான்’
என்றேன்.
“இப்படி விட்டுக்கொடுக்காமல் போராடியதால் தான் இந்த அளவுக்கு
முன்னேற முடிந்தது. இதுபோல இன்றைய பெண்கள் தங்கள் பெயர்
தனித்துத் தெரிய வேண்டும் என்று விரும்பினால் தங்களுக்குப் பிடித்த
துறையில் சாதிக்க முயற்சிக்க வேண்டும்.” என்றார்.
–
————————————
மறுமொழியொன்றை இடுங்கள்