புற்றுநோய் தொடர்பாக ஆராய்ச்சி யில் ஈடுபட்டு வரும்
இந்திய வம்சாவளி பிரிட்டன் ஆய்வாளருக்கு இங்கிலாந்து
ராணியின் நைட்ஹூட் (சர்) பட்டம் அறிவிக் கப்பட்டுள்ளது.
–
புத்தாண்டில் கவுரவிக்கப்படு பவர்கள் பட்டியல் நேற்று
வெளி யிடப்பட்டது. இதில், இங்கிலாந் தில் உள்ள கேன்சர்
ரிசர்ச் யுனைடெட் கிங்டம் (சிஆர்யுகே) அமைப்பின்
தலைமை நிர்வாகி யான ஹர்பல் சிங் குமாருக்கு,
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிஸபெத் நைட்ஹூட் பட்டம்
அறிவித்துள்ளார்.
–
புற்றுநோய் தடுப்பு தொடர் பான ஆய்வு மற்றும், நோயின்
ஆரம்பகட்டத்திலேயே கண்ட றிதல், சிகிச்சை முறை
போன்றவற்றில் மிக அதிக பங்களிப்பு செலுத்தியமைக்காக
இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
–
இவரது தலைமையில் சிஆர்யுகே-வின் வருவாயும், ஆய்வுகளுக்கு
ஒதுக்கப்படும் தொகையும் இதுவரை இல்லாத அளவுக்கு
உச்சத்தை தொட்டன. 18 வயதுக்கு உட்பட்டவர்கள் புகை பிடிக்க
தடை விதிக்கவும் முக்கிய காரணமாக இருந்தார்.
–
இம்முறை பிரிட்டிஷ் பேரரசின் விருதை அதிக அளவிலான இந்திய
வம்சாவளியினர் பெறவுள்ளனர். இந்திய இனிப்பக நிறுவனர்
ரேகா மெஹர், தொழிலாளர் கட்சியின் ஆயிஷா ஹஸாரிகா
ஆகியோர் விருது பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
–
—————————————
தமிழ் தி இந்து காம்
புற்றுநோய் குறித்து ஆய்வு செய்த இந்திய ஆராய்ச்சியாளருக்கு ‘சர்’ பட்டம் அறிவிப்பு
ஜனவரி 1, 2016 இல் 12:30 பிப (செய்திகள்)
Tags: news
மறுமொழியொன்றை இடுங்கள்