–
பழனி, டிச.31–
தமிழ்கடவுள் முருகபெருமானின் 3–வது படைவீடான பழனி கோவிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இதனால் கோவிலில் எப்போதும் கூட்டம் அதிகம் காணப்படும்.
கோவிலுக்கு வரும் ஆண் பக்தர்கள் லுங்கி, பெர்முடாஸ் அணிந்து வர தடைவிதிக்கப்பட்டு உள்ளது. ஆண்கள், வேட்டி சட்டை, பைஜாமா மற்றும் பேண்ட் சட்டை அணிந்து வரலாம்.
தற்போது தமிழக இந்து சமய அறநிலையத்துறை தமிழ்நாட்டில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு உள்ளிட்ட கோவில்களில் ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் ஆடைக்கட்டுப்பாட்டை அமல்படுத்தி உள்ளது.
அதன்படி பழனி மலைக்கோவில், திருஆவினங்குடி கோவில், பெரியநாயகி அம்மன் கோவில், இலக்கி நாராயண பெருமாள் கோவில் உள்ளிட்ட உப கோவில்களில் இந்த ஆடை கட்டுப்பாடு ஜனவரி 1–ந்தேதி முதல் பழனி திருக்கோவில் நிர்வாகம் அமல்படுத்த உள்ளது.
இதற்கான பதாகைகளும் பல்வேறு இடங்களில் கோவில் நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்டு உள்ளது. அதன்படி நாளை (1–ந்தேதி) முதல் பெண்கள் ஜீன்ஸ், மிடி, லெகின்ஸ் போன்ற ஆடைகள் அணிந்து வர தடைவிதிக்கப்பட்டு உள்ளது.
பெண்கள் சேலை, தாவணி, சுடிதார் அணிந்து வரலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
மாலைமலர்
மறுமொழியொன்றை இடுங்கள்