
–
ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோயிலில் வைக்கப்பட்டுள்ள ஆடை கட்டுப்பாடு விவரம் கொண்ட பலகை |
படம்: சி.வெங்கடாசலபதி.
—————————————————————–
ஜனவரி 1 முதல் பக்தர்கள் என்ன மாதிரியான உடையணிந்து கோயிலுக்கு வரலாம் என்ற பட்டியலடங்கிய பலகைகளை தமிழகம் முழுவதும் பல்வேறு கோயில் நிர்வாகங்களும் வைத்துள்ளன.
இந்த வரிசையில் வேலூர் மாவட்டம் ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோயிலிலும் ஆடை கட்டுப்பாடு குறித்து விளக்கும் பலகை வைக்கப்பட்டுள்ளது.
அதில் ஆடவர் பேண்ட், சட்டை, வேட்டி போன்ற ஆடைகளையும், பெண்கள் சேலை, பாவாடை தாவனி, சுடிதார் துப்பட்டாவுடன் போன்ற ஆடைகளையும் அணிந்து வர வேண்டும். இதை கடைபிடிக்காத பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஜீன்ஸ், லெகிங்ஸ், டிரவுசர் போன்ற ஆடைகள் அணிந்து வருபவர்களை பாரம்பரியமிக்க கோயில்களுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று அறநிலையத் துறை சுற்றறிக்கை அனுப்பியது.
இந்த ஆடைக் கட்டுப்பாடு ஜனவரி 1-ம் தேதி அமலுக்கு வருகிறது. உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
–
தமிழ் தி இந்து காம்
மறுமொழியொன்றை இடுங்கள்