
–
சென்னை சர்வதேச திரைப்பட விழாவுக்கு ‘பிசாசு’, ‘தனிஒருவன்’, ‘கிருமி’, ‘மாயா’, ’36 வயதினிலே’ உள்ளிட்ட 12 தமிழ்ப்படங்கள் திரையிடத் தேர்வாகி உள்ளன.
13-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா ஜனவரி 6-ம் தேதி தொடங்கி 13-ம் தேதி நிறைவடைகிறது. இந்த திரைப்பட விழாவில் திரையிட ’36 வயதினிலே’, ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’, ‘சார்லஸ் ஷபிக் கார்த்திகா’, ‘கிருமி’, ‘கோடைமழை’, ‘மாயா’, ‘ஆரஞ்சுமிட்டாய்’, ‘ஓட்டதூதுவன் – 1854’, ‘பிசாசு’, ‘ரேடியோபெட்டி’, ‘தாக்க தாக்க’, ‘தனிஒருவன்’ ஆகிய 12 தமிழ்ப் படங்கள் தேர்வாகியுள்ளன.
மேலும், உலக அளவில் மிகச்சிறந்த 120 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக் கப்பட்ட 16 படங்களும், கேன்ஸ் திரைப்பட விழாவில் விருதுகளைப் பெற்ற படங்களும் திரையிடப்பட உள்ளன.
இந்த திரைப்படவிழாவில் இயக்குநர் கே.பாலசந்தர், நடிகை மனோரமா ஆகிய இருவருக்கும் அஞ்சலி செலுத்தும் விதமாக ‘அச்சமில்லை அச்சமில்லை’, ‘அக்னி சாட்சி’, ‘ஒரு வீடு இரு வாசல்’, ‘உன்னால் முடியும் தம்பி’, ‘சிந்து பைரவி’, ‘மேஜர் சந்திரகாந்த்’ மற்றும் ‘அவள் ஒரு தொடர்கதை’ ஆகிய 7 படங்கள் திரையிடப்பட உள்ளன.
–
ஸ்கிரீனன்
மறுமொழியொன்றை இடுங்கள்