கன மழையில் சிக்கியுள்ளவர்களை மீட்க மேலும் 600 தேசிய பேரிடர் மீட்பு குழுவினர்


மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்காக மேலும் 600 தேசிய பேரிடர் மீட்பு படையினர் சென்னை வரவுள்ளனர்.

கன மழையால் சென்னை விமானம் மூடப்பட்டுள்ள நிலையில், புதுதில்லி மற்றும் புவனேஸ்வர் ஆகிய இடங்களிலிருந்து புறப்படும் அவர்கள் விமானம் மூலம் சென்னை அருகேயுள்ள அரக்கோணம் விமானப்படைக்கு சொந்தமான விமான நிலையத்துக்கு வந்தடைகின்றனர்.

அங்கிருந்து குழுக்களாக பிரிந்து செல்லும் அவர்கள், உள்ளூர் அதிகாரிகளின் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபடுவார்கள. அவர்கள் தங்களுடன் மீட்பு பணிக்காக 40 காற்றடைத்த படகுகள் மற்றும் உணவுப் பொருள்களையும் எடுத்து வருகின்றனர்.

மீட்பு பணியின் போது, வெளியேறாமல் தங்கள் வீட்டிலேயே தங்கியுள்ளவர்களுக்கு தேவையான உணவுப் பொருள்களை அவர்கள் வழங்குவார்கள் என தேசிய பேரிடர் மீட்பு குழுவின் தலைவர் ஒ.பி. சிங் கூறினார்.

ஏற்கெனவே 40 பேர் அடங்கிய 11 பேரிடர் மீட்பு குழுவினர்  சென்னையில் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேசிய பேரிடர் மீட்பு படையின் சார்பில் 011-2436 3260, 09711077372 ஆகிய அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன

தினமணி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: