–
இடியுடன் கூடி
மழை வருகிறது
பூமியில் மனிதன்
–
——————
–
நிழலைக் குறுக்கும்
உச்சிவேளைப் பொழுது
பகலவன் விளக்கும்
–
——————-
–
ஏரி குளங்களுக்கு
இயற்கை உபாதையாக
கழிங்கல் வழி
–
——————–
–
வெட்டிய விறகு விற்று
சுள்ளி பொறுக்கிச்
சமையல்
–
—————
–
மனமெனும் நந்தவனத்தில்
உயிர்ப் பூக்கள் மலர்ந்திட – ஆன்மிகம்
ஞான விதைகளைத் தூவும்
–
===========================
-த.ராசேந்திரன்
மறந்து போன முகங்கள்- கவிதை
தொகுப்பிலிருந்து
மனமெனும் நந்தவனத்தில்…
நவம்பர் 17, 2015 இல் 11:12 பிப (ஹைகூ கவிதை, Uncategorized)
Tags: haikoo
மறுமொழியொன்றை இடுங்கள்