பளிச்’ என்று இருப்பது எப்படி? – தமன்னா

ஐதராபாத்,

‘‘மஞ்சள், வேப்பிலைப்பொடி, பப்பாளி போன்றவற்றை பயன்படுத்துவதால் நான் அழகாக, ‘பளிச்’ என்று இருக்கிறேன்’’ என்கிறார், நடிகை தமன்னா.

அழகு ரகசியம்

நடிகை தமன்னா ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறி இருக்கிறார். சக நடிகைகள் சிலர் குண்டான போதும் இவர் மட்டும் சினிமாவுக்கு வந்து பல வருடங்கள் ஆன பிறகும் அப்படியே ஒல்லியாக அழகு காட்டுகிறார். ‘‘பாலில் செய்த தேகம்’’, ‘‘ரோஜா மலர்களைக் கொண்டு கடவுள் செதுக்கிய சிற்பம்’’ என்றெல்லாம் ரசிகர்கள் வர்ணிக்கிறார்கள்.

இந்த அழகு ரகசியம் பற்றி தமன்னாவிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

என் நிறம் அம்மா, அப்பா மரபணுக்களில் இருந்து வந்தது. அவர்கள் இருவரும் நல்ல நிறமாக இருப்பார்கள். நான் கொஞ்சம் கூடுதல் நிறமாக இருக்கிறேன். சிறு வயதில் இருந்தே கிரீம் பயன்படுத்துவது இல்லை.

மஞ்சள், வேப்பிலை

மஞ்சள் பொடி, வேப்பிலை பொடியை ரோஸ் தண்ணீரில் கலந்து வைத்துக்கொள்வேன். அதை முகத்தில் தேய்த்து குளிப்பேன். இது அம்மா எனக்கு சொல்லிக்கொடுத்தது. ஷாம்புவை எப்போதும் பயன்படுத்தியது இல்லை. மூலிகை பவுடர்களைத்தான் தலையில் தேய்த்து குளிக்கிறேன். பப்பாளி, வெள்ளரிக்காய், சீயக்காயை கலந்து தலையில் தேய்த்து குளிப்பேன்.

வெளிப்புற படப்பிடிப்புகளில் வெயில் பட்டு முகத்தில் அழகு மங்கும். அதை தவிர்க்க கிராமத்தில் பிரபலமான நலுங்கு மாவை தயார் செய்து உடம்பில் தேய்ப்பேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் இதை பூசிக்கொள்வேன். இரவு தூங்கும்போது ‘மேக்கப்’ முழுவதையும் கலைத்து விடுவேன். படப்பிடிப்புகள் இல்லாதபோது ‘மேக்கப்’ போட மாட்டேன்.

பழரசங்கள்

பாதாம் பருப்பை இரவில் ஊற வைத்து காலையில் சாப்பிடுவேன். வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிப்பேன். தயிர் ரொம்ப பிடிக்கும். உடம்புக்கு அது குளிர்ச்சியை கொடுக்கும். கால்சியமும் அதிகம் இருக்கிறது. தினமும் சூப், பழரசங்கள் குடிப்பேன். உலர்ந்த உணவுப்பண்டங்கள், எண்ணெயில் தயார் செய்த உணவுகள், டின்களில் அடைத்து விற்கப்படும் உணவுகளைத் தொடுவது இல்லை.

தினமும் உடற்பயிற்சிகளும் செய்கிறேன். ஒரு மணி நேரத்துக்கும் மேல் உடற்பயிற்சி கூடத்தில் செலவிடுவேன். இவையெல்லாம் என் அழகின் ரகசியங்கள்’’.

இவ்வாறு தமன்னா கூறினார்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: