திருமால் பெருமைக்கு நிகரேது…

திருமால் பெருமைக்கு நிகரேது – உன்றன்
திருவடி நிழலுக்கு இணையேது!
பெருமானே உன்றன் திருநாமம் – பத்து
பெயர்களில் விளங்கும் அவதாரம்

(திருமால்)

கடல் நடுவே வீழ்ந்த சதுர்வேதம் – தனைக்
காப்பதற்கே கொண்ட அவதாரம்
– மச்ச அவதாரம்!

அசுரர்கள் கொடுமைக்கு முடிவாகும் – எங்கள்
அச்சுதனே உன்றன் அவதாரம்
– கூர்ம அவதாரம்!

பூமியைக் காத்திட ஒரு காலம் -நீ
புனைந்தது மற்றொரு அவதாரம்
– வராக அவதாரம்!

நாராயணா என்னும் திருநாமம் – நிலை
நாட்டிட இன்னும் ஒரு அவதாரம்
– நரசிம்ம அவதாரம்!

மாபலிச் சிரம் தன்னில் கால் வைத்து – இந்த
மண்ணும் விண்ணும் அளந்த அவதாரம்
– வாமன அவதாரம்!

தாய் தந்தை சொல்லே உயர் வேதம் – என்று
சாற்றியதும் ஒரு அவதாரம்
– பரசுராம அவதாரம்!

ஒருவனுக்கு உலகில் ஒரு தாரம் – எனும்
உயர்வினைக் காட்டிய அவதாரம்
– ராம அவதாரம்!

ரகு குலம் கொண்டது ஒரு ராமன் – பின்பு
யது குலம் கண்டது பலராமன்
– பலராமன்

அரசு முறை வழிநெறி காக்க – நீ
அடைந்தது இன்னொரு அவதாரம்
– கண்ணன் அவதாரம்

ஸ்ரீராகம்:

விதி நடந்ததென மதி முடிந்ததென
வினையின் பயனே உருவாக,
நிலைமறந்தவரும், நெறியிழந்தவரும்
உணரும் வண்ணம் தெளிவாக,
இன்னல் ஒழிந்து புவி காக்க – நீ
எடுக்க வேண்டும் ஒரு அவதாரம்
– கல்கி அவதாரம்!

(திருமால்)

படம்: திருமால் பெருமை – வருடம் 1968

>கவியரசர் கண்ணதாசன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: